Published:Updated:

இந்தியா: ஊக்கமருந்து பயன்பாட்டில் 4 கிரிக்கெட் வீரர்கள்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

Athletics

உலக ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்த ரஷ்ய தேசிய அணியை இந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்தும் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகில் அளவில் அதிக அளவிலான ஊக்கமருந்து உட்கொள்ளும் விளையாட்டு வீரர்களை கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா. உலக ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (WADA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் 2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 152 வீரர்கள் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இது மொத்த உலக எண்ணிக்கையில் 17 சதவிகிதம் ஆகும்

இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் நாடுகள் ரஷ்யா மற்றும் இத்தாலி. இவற்றில் சுமார் 167 மற்றும் 157 வீரர்கள் முறையே இச்சோதனையில் சிக்கியுள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில இருப்பது பிரேசில் (78 வீரர்கள்). உலக ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வந்த ரஷ்ய தேசிய அணியை இவ்வாண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா: ஊக்கமருந்து பயன்பாட்டில் 4 கிரிக்கெட் வீரர்கள்; அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

இந்தியாவைப் பொறுத்தவரையில் பாடிபில்ட்டிங் (57), மல்யுத்தம் (10) மற்றும் தடகள விளையாட்டுகளை (20) சேர்ந்த வீரர்களே இதில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இப்பட்டியலில் நான்கு கிரிக்கெட் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

2019-ம் ஆண்டில் உலகமுழுவதும் சேகரிக்கப்பட்ட 2,78,047 மாதிரிகளில் சுமார் 2,701 மாதிரிகள் தடைபட்ட பொருட்களை உபயோகித்ததாக முதல் கட்ட ஆய்வில் தெரியவந்தது. தற்போது அடுத்த கட்ட ஆய்வின் முடிவில் சுமார் 1535 மாதிரிகள் ஊக்கமருந்தை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது.

இதே போன்றதொரு ஆய்வு 2018-ம் ஆண்டிலும் நடத்தப்பட்டது. அதில் 107 நபர்களுடன் நான்காவது இடத்தில இருந்த இந்திய தற்போது மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.