Published:Updated:

"விளையாட்டு விடுதியில் மசாஜ் செய்யச் சொல்லி ராகிங் செய்யப்பட்டேன் ”ஒலிம்பிக் வீராங்கனை டூட்டி சந்த்

டூட்டி சந்த் - Dutee chand

நான் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த காலகட்டத்தில் சீனியர்கள் என்னை அவர்களுக்கு மசாஜ் செய்யவும், துணிகளைத் துவைக்கவும் சொல்வார்கள். நான் அதை எதிர்த்தால் என்னைத் துன்புறுத்துவார்கள்.

விளையாட்டு விடுதியில் சீனியர்கள் பலரால் தான் ராகிங் கொடுமைக்கு உள்ளானதாகக் கூறியுள்ளார், ஒலிம்பிக் தடகள வீராங்கனை டூட்டி சந்த். சமீபத்தில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள பி.ஜே.பி அட்டானமஸ் கல்லூரியில் ராகிங் கொடுமை காரணமாக மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு டூட்டி சந்த் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"நான் விளையாட்டு விடுதியில் தங்கியிருந்த காலகட்டத்தில் சீனியர்கள் என்னை அவர்களுக்கு மசாஜ் செய்யவும், துணிகளைத் துவைக்கவும் சொல்வார்கள். நான் அதை எதிர்த்தால் என்னைத் துன்புறுத்துவார்கள். இதுதொடர்ச்சியாக நடந்த காரணத்தால் அதுகுறித்து விடுதிப் பொறுப்பாளரிடம் புகார் கொடுப்பேன். அந்த நேரங்களில் நான் திட்டு வாங்கிக் கொண்டதுதான் மிச்சம். மன ரீதியாக எனக்கு அது சிக்கலைக் கொடுத்தது. அந்தக் காலம் மிகவும் கடினமாக இருந்தது. இந்த ராகிங் தொந்தரவு காரணமாகப் பெரும்பாலானவர்கள் பயிற்சியைக் கைவிட்டு வீடு திரும்பியதும் நிகழ்ந்துள்ளது" என்று கூறியுள்ளார் அவர்.