www.facebook.com/pichaikaaran:  ஒரு பேருந்துப் பயணம். ஒருவன் தன் மொபைலில் ஒரு பெண்ணை

வலைபாயுதே V 2.0 !

அவள் அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தான். அவள் அதைக் கவனித்து முறைத்தாள். அவன் அலட்சிய முகபாவத்துடன் போனில் ஏதோ செக் செய்வதுபோல பாவனை செய்ய ஆரம்பித்தான். 

அவள் அலட்டிக்கொள்ளாமல், அவனை ஒரு போட்டோ எடுத்தாள். அவ்வளவுதான் அவன் பதறிப்போய்விட்டான். அவள் என்ன செய்யப்போகிறாளோ என்ற பயம். அவளிடம் ஏதோ பேசி, காம்பரமைஸுக்கு வந்து, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிட்டான்; அழித்துவிட்டான் என்பது தெரிந்தது.

பெண்கள் பயப்படுவதை நிறுத்துவதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என நினைத்துக்கொண்டேன்! 


www.facebook.com/jawarlal:  இப்போதெல்லாம் குறும்படம் எடுக்க முனைகிற பலர் பல்வேறு விதமான உதவிகள், ஆலோசனைகள் கேட்கிறார்கள்.

வலைபாயுதே V 2.0 !

இரண்டொரு வாரங்களுக்கு முன்னர் அப்படிப் பேசிக்கொண்டிருந்த ஒரு நண்பர் ஃப்ரெட்ரிக் ஃபோர்சித்தின் கதை ஒன்றையும் ஷெஃப்ரி ஆர்ச்சர் கதை ஒன்றையும் இரண்டறக் கலந்து, அதை வட்டார வழக்குக்கு மாற்றி, ஏர் டேக்ஸியை கால் டேக்ஸியாக, ஸ்டாக்கிங்ஸை லெகிங்ஸாக என்று எல்லாம் மாற்றி உணர்வு பொங்கக் கூறினார்.

காப்பிரைட் சட்டப்படி தப்பிக்க இன்னும் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் எனக் கேட்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவரோ, 'இந்தக் கதைக்குப் பொருத்தமா ஒரு டைட்டில் சொல்லுங்க சார்' என்றார்.

நான் கொஞ்சமும் யோசிக்காமல் ' 'அப்பளம்’னு வைங்க' என்றேன்.

அவர் ஒரு நிமிஜம் அதிர்ந்து, 'அப்பளத்துக்கும் இந்தக் கதைக்கும் என்ன சார் சம்பந்தம்?' என்றார் குழப்பத்தோடு.

'அப்பளத்தையும் சுடுவாங்க' என்றேன்!

www.facebook.com/ernasto.guvera:  கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு காவல் துறையினர்

வலைபாயுதே V 2.0 !

சட்டம்  ஒழுங்கு காக்க ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் இரவு  பகல் பாராமல் காத்துவருவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. கடன்காரனுக்குப் பயந்தவர்கள், பங்காளி பகைக்கு அஞ்சுபவர்கள் பதுங்கி வாழாமல், டாஸ்மாக் பாரில் போலீஸாரின் பந்தோபஸ்த்தில் வாழ்ந்து தவழ்ந்துவருவதை எண்ணிச் சிலிர்க்கிறேன்.

ஏன் இத்தனை காவலர்கள் அங்கும் இங்கும் அலைந்து களைத்துப்போய் பாதுகாக்க வேண்டும்? பேசாமல் டாஸ்மாக் சரக்குகள் அனைத்தையும், அந்தந்த ஏரியா காவல் நிலையத்தில் வைத்து விற்பனை செய்தால், கலவரக்காரர்களிடம் இருந்து டாஸ்மாக் சரக்கையும் தமிழ்நாட்டு கஷானாவை வாழவைக்கும் தெய்வங்களான குடிகாரர்களையும் செம்மையாகக் காக்கலாமே.

யோசிச்சுப்பாருங்க, 'யோவ்... த்ரீ நாட் ஒன், அந்த நாலாம் நம்பர் டேபிளுக்கு கோட்டர் மார்பெஸ், ஒரு வாட்டர் பாட்டில், ரெண்டு முட்ட மாஸ்.'

நல்லாருக்குல்ல!

Whatsapp:

ஆகஸ்ட் 8ம் தேதி காலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன் 'எங்கு கவுன்சலிங் நடைபெறுகிறது?’ என விசாரித்துக் கொண்டிருந்தனர் இந்தத் தாயும் மகளும்.

வலைபாயுதே V 2.0 !

விசாரித்த நண்பர்களுக்கு இவர்கள் காலை 8:30 கோவை வேளாண் பல்கலைக்கழக கவுன்சலிங்  செல்வதற்குப் பதிலாக, தவறாக சென்னை வந்துள்ளது தெரியவந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத நிலையில் தேர்வு எழுதி இந்த மாணவி ப்ளஸ் டூவில் 1076 மதிப்பெண் எடுத்துள்ளார். வேளாண்மையையும் பால் மாடுகளையும் வளர்த்துப் படிக்கவைக்க விழையும் இந்தத் தாய்க்கு பல்கலைக்கழங்கங்கள் தெரிந்திருக்கவில்லை. யாரோ சொன்ன தவறான வழிகாட்டுதலால் இங்கு வந்துள்ளார்கள்.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த நண்பர் ஒருவர், கோவை செல்ல விமான டிக்கெட் எடுத்துத் தர முன்வருகிறார். மற்றொரு நண்பர் கோவை பல்கலைக்கழகப் பதிவாளரிடம் பேசி காலதாமதமானாலும் அனுமதிக்க வேண்டுகிறார். ஒருவர் காலை சிற்றுண்டி வாங்கித் தருகிறார்.

காலை 10:05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்படுகிறது. 11:40 மணிக்கு இவர்களை விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்துச் செல்ல,  12:15 மணிக்குள் கவுன்சலிங் கூடத்துக்குச் சென்றைடைகின்றனர். 2 மணிக்கு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயோ டெக்னாலஷி சேரத் தேர்வாகிறார் மாணவி. உதவிகள் புரிந்தும் அடையாளம் கூறாத அந்த உள்ளங்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!

வலைபாயுதே V 2.0 !
வலைபாயுதே V 2.0 !
வலைபாயுதே V 2.0 !
வலைபாயுதே V 2.0 !
வலைபாயுதே V 2.0 !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு