Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

facebook.com/profile.php?id=100004797468429

யார் அக்கவுன்ட்ல யாரு... அவருக்கு என்ன பேரு?

அரசியல் பேசும் அவள் பக்கத்தில் பதிவேற்றுவது, விருது வழங்கும் இலக்கியவாதியாக இருக்கலாம். நட்பில் இருக்கும் ஐ.டியில் இருந்து லைக் போடுபவர், பிளாக் செய்யப்பட்ட 'பிளாக்ஜீப்’ ஆகவும் இருக்கலாம். மனைவியின் ஐ.டியில் இருந்து, அவளைப் பற்றி அரட்டை அடிப்பது கணவனாகவும் இருக்கலாம். சீடனின் சுவரில் செக்ஸியாகக் கிறுக்குபவர்

வலைபாயுதே V 2.0

குருவாகவும் இருக்கலாம். அயல்நாட்டு ஐ.டியில் இருந்து இன்பாக்ஸில் ஒரண்டைக்கு இழுப்பவர் ஒட்டிக்கொண்ட கடாமீசை பொருந்தாத, கடும் பெண்ணியவாதியாகவும் இருக்கலாம். 'எதையும் தருவேன்’ என இன்பாக்ஸுபவள், 'ஸ்டிங் ஆபரேஜன்’ நடத்தும் சீனியராகவும் இருக்கலாம். அவ்வளவு ஏன், இந்தப் பதிவை எழுதுபவர் நீங்களாகவும், படிப்பவன் நானாகவும்கூட இருக்கலாம். இப்போது சொல்லுங்கள்... 'யார் அக்கவுன்ட்ல யாரு... அவருக்கு என்ன பேரு?’

வலைபாயுதே V 2.0

facebook.com/elango.kallanai:

'தமிழ்நாட்டுக்கு இனி பருவ மழை கிடையாது’ என வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்ன போது பலர் சிரித்தார்கள். 'அறிவி யலில் அப்படி எல்லாம் சொல்ல வில்லை’ என அடித்துக் கூறினார் கள். நேற்று யதார்த்தமாக ஒரு புவியியல் புத்தகத்தை எடுத்துப் பார்த்தபோது சில விளக்கங்களைப் போட்டிருந்தார்கள். காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஏற்பட்டுவரும் மழையை, பொதுவாக பருவ மழை எனச் சொல்வது இல்லை. தட்பவெப்ப நாடுகளில் ஏற்படும் எதிர்பாராத மழையாகவே அது இருக்கிறது. பருவ மழையின் முக்கிய அம்சம் மழை பெய்யும்போது காற்றோ, இடியோ, மின்னலோ இல்லாமல், நிதானமாக நின்று ஒரு கால வரையறை வரை பெய்யும். மற்ற மழை எல்லாம் தானத்துக்குக் கிடைக்கும் மழைதான். வெப்ப மண்டல மழையை ஐப்பசியில் பார்த்ததால், அதைப் பருவ மழை என நம்புகிறோம். ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் முழுவதும் நின்று பெய்யும் மழை, கடந்த 15 ஆண்டுகளில் நம்மிடம் பெய்யவே இல்லை. இப்போது பெய்யும் மழை, பருவ மழை வகைப்பாட்டில் வராது. இடி, மின்னல், காற்றுடன் வெப்ப விளைவான மழையை மட்டுமே நாம் பெறுகிறோம். கேரளாவில் பருவ மழையும் பெரிய அளவில் இல்லை. இப்போது நீர் ஆதாரங் களைப் பற்றிய அங்கலாய்ப்புகள் எல்லாம், குறுகியகாலத் தீர்வுகள் தான். காடுகள் மீண்டு எழுந்து வரவேண்டிய மழையை இழந்து விட்டோம். நம்மாழ்வாரின் சரியான பார்வையை நாம் தவறவிட்டு விட்டோம். 'இப்போது ஆரம்பித்து 40 ஆண்டுகள் உழைத்தால், அதைத் தாண்டி 40 ஆண்டுகளில் விளைவு கள் தெரியும்’ என்கிறார்கள். அதுவரை வெப்ப மழை மட்டும்தான் நமக்கு!

வலைபாயுதே V 2.0
வலைபாயுதே V 2.0

 எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது,

அதில் ஏன் numbers உள்ளன?

PLU code (Price lookup number) இதை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கையானதா / மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது?

1. PLU code 4 எண்கள் இருந்தால், அது முழுக்க வேதி உரம் கலந்து விளைந்தது. (நான் அப்படியே shock ஆகிட்டேன்).

2.PLU code 5 இலக்கங்கள் இருந்து அது '8’ என ஆரம்பித்தால், அது மரபணு மாற்றம் செய்யப்பட்டது!

3. PLU code 5 இலக்கங்கள் இருந்து அது '9’ என ஆரம்பித்தால், அது முழுக்க இயற்கையானது!

இனி ஆப்பிள் வாங்கும்போது பார்த்து வாங்கவும்.

அந்த stickerம் ஆபத்தானதே. எடுத்துவிட்டுச் சாப்பிடுங்க!

வலைபாயுதே V 2.0

twitter.com/Veedhisattva:  ஒருவனைப் புகழ்ந்துவிடுங்கள். அடுத்தடுத்து நீங்கள் அவனை எப்போது புகழ்வீர்கள் என அடங்கிக்கிடப்பான்!

twitter.com/twittornewton:   ஆசிரியர்கள்/பெரியவர்கள் அருகில் இருக்கிறார்கள் என, பேச்சை மாற்றாமல் இயல்பாகப் பேச்சைத் தொடரும் ஒரு தலைமுறை உருவாகிவருகிறது!

twitter.com/chevazhagan1: 10 'ஹால்ஸ்’ மிட்டாயைச் சேத்துவெச்சுக் கொண்டுபோய், ஒரு '5 ஸ்டார்’ கேட்டேன். கடைக்காரன் முறைக்கிறான். அடேய்... நீதானே குடுத்த!

twitter.com/vandavaalam: சேலத்தில் முண்டியடித்து, மிதிபட்டு நயன்தாராவைப் பார்த்துவந்த கேடுகெட்ட ஜென்மங்களுக்கு நான் சொல்வது ஒண்ணே ஒண்ணுதான்... 'லக்கி ஃபெல்லோஸ்’!

twitter.com/sheiksikkanthar: ஒரு பாட்டுல பணக்காரன் ஆகிற பாடலை, இன்னும் இறைவன் எனக்காக கம்போஸ் பண்ணவே இல்லை என்பதுதான் வேதனை :((

twitter.com/im_bahavathar19: எனக்கு எல்லா குழந்தைகளையும் பிடிக்கும்... என் மொபைலை கேம் விளையாடக் கேட்காத வரை ;)

வலைபாயுதே V 2.0

twitter.com/itzkuzhali: வயசாக வயசாக சூடு, சொரணை, கோபம், திமிர்... எல்லாம் காணாமப்போறதைத்தான் 'மெச்சூரிட்டி’னு சொல்றாங்க போல!

twitter.com/emsee189: நண்பன்கிட்ட 'நூறு ரூபா இருக்கா?’னு கேட்டேன், பர்ஸை எடுத்துப் பார்த்துட்டு, 'இருக்கு மச்சி’னு சொல்லிட்டு மறுபடியும் பர்ஸுக்குள்ளேயே வெச்சிட்டான். # கடன் பல்புகள்!

twitter.com/thepayon: பெண்கள் வேலைக்குப் போவது பற்றி புலம்பியவர்கள் ஓய்ந்துவிட்டனர். இன்று பெண்கள் லெக்கிங்ஸ் அணிவது பற்றி அவர்களது பேரன்கள் புலம்புகிறார்கள்!

twitter.com/VignaSuresh:  அம்மா பார்க்கும்போது அப்பா காதிலும் அப்பா பார்க்கும்போது அம்மா காதிலும் சொல்வதற்குத்தான் 'ரகசியம்’ எனப்  பெயரிட்டிருக்கிறார்கள், குழந்தைகள்!

twitter.com/SENTHIL_WIN:  நம்ம அரிசியில நம்ம பேரை கடவுள் எழுதலாம். 'அது பிரியாணியா... பழைய சோறா?’ங்கிறதை முடிவுபண்றது பொண்டாட்டிதான்!

twitter.com/MissLoochu: என்னால் என் குறைகளைத் திருத்திக்கொள்ள முடியாது என்பதன் நாகரிக வடிவம்... 'இதுதான் நான்’!

twitter.com/kirukkal: 'இனி உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன்’ என்பதன் அர்த்தம், இனி உன்னிடம் கவனமாகப் பொய் சொல்லப்போகிறேன் என்பதுதான்!

twitter.com/paidkiller: 'டேய் குடிகாரப்பயலே...’ எனப் பொத்தாம்பொதுவாகக் கூவினால், பத்தில் எட்டு பேர் திரும்பிப் பார்க்கும் நிலையில் இருக்கிறது நம் தமிழ்நாடு!

twitter.com/periyastar: இரவு 12 மணிக்கு பேய் வரும் என்ற பயத்தைப் போக்கி, 'எந்தப் பயலோட டீஸர் வருமோ?!’னு பயப்படவெச்ச பெருமை சமூக வலைதளங்களையே சாரும்!

twitter.com/skpkaruna: 'மகாராஷ்டிரம் தண்ணீர் தர வேண்டும்’ என்றும், 'தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது’ என்றும், கர்நாடகத்தில் முழு அடைப்பு!

வலைபாயுதே V 2.0

twitter.com/gowtwits: 'ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு, பேசாம இருந்ததுக்காக சண்டைபோட்டு, அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்க பெண்களால் மட்டும்தான் முடியும்!

twitter.com/Tparavai: எழுந்தவுடன் குழந்தைகளின் சுறுசுறுப்பும், படுத்தவுடன் அவர்களின் தூக்கமும் மட்டும் வாய்த்தால், எல்லா நாளும் திருநாளே!

facebook.com/thoatta.jegan: நம்மைவிட நிறையச் சம்பாதிக்கிறவன் எல்லாம் நேர்மையா சம்பாதிக்கலை; நம்மைவிடக் குறைவா சம்பாதிக்கிறவனுக்குச் சம்பாதிக்கத் தெரியலை # மிடில் கிளாஸ் மென்டாலிட்டி!