Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

facebook.com/elango.kallanai:

விவசாயம் பற்றி என்னிடம் கேட்டார்கள் என்பதால், சென்ற வருடம் மும்பையில் ஒரு குழுமத்தில் பேசிக்கொண்டிருந்தேன். 'நீங்கள் ஏன் விவசாயத்தைப் பற்றி ஒரு App செய்யக் கூடாது. உங்களைப் போன்றோர் இரண்டு உலகிலும் பயணிக்கிறீர்களே?’ என்றார் ஓர் அம்மையார். Apps பற்றி பேசினால் மட்டுமே அவர்களுடன் எதைப் பற்றியும் பேச முடியும் என்ற நிலையில் தளர்ந்துவிட்டேன். விவசாயம் மட்டும் அல்ல, பிற எந்தத் துறையையும் பற்றி அவர்களிடம் பேசினால், கடைசியில் 'ஆன்லைன் ஷாப்பிங்கில் ஒன்று பார்த்தேன்’ எனத் தொடங்கிய இடத்துக்கே வரும். இந்த ஈசல் இறகு மனிதர்களின் டிஜிட்டல் உலகத்தில், சொர்க்கம் - நரகம் எல்லாம் ஆப்ஸ்தான். 'அதெல்லாம் சரி, இவ்வளவு அறிவாளியா இருக்கீங்களே... இமாலயாவுக்குப் பயணம் போகக்கூட ஆப்ஸ்தானா?’ என்றேன். 'ஆமா... ஆமா...’ என்கிறார்கள். தற்கொலைக்கும் ஆப்ஸ்தானாம்! மோடி 'டிஜிட்டல் இந்தியா பண்ணுவோம்’ என்றால், முகப்புப் படத்தை மாற்றுகிறார்கள். சந்திரபாபு நாயுடு என்னென்ன வேலைகளை எல்லாம் பண்ணி மக்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டாரோ, அதை எல்லாம் மோடியும் செய்கிறார். திரும்பவும் 'மாட்டுவண்டியில் வர்றேன்’னு சொல்லித்தான் சந்திரபாபு வந்து உட்காந்திருக்கார். 'இந்தியா ஒளிர்கிறது’ என இவர்கள் முன்னர் சொல்லி அடி வாங்கியவர்கள்! 

facebook.com/gokulakrishnan.loganathan.3:

எதிர்கால வசனங்கள்:

'எனக்குனு ஒரு கௌரவம், மரியாதை இருக்கு... நாளைக்கு Facebook-ல நாலு பேரு நாலு விதமா பேசிடக் கூடாதுபாரு!’

'அடப் பாவமே! நேத்துகூட profile picture -அப்டேட் பண்ணிட்டு இருந்தாரே... நான்கூட லைக் போட்டனே... அதுக்குள்ளயா போய்ட்டாரு?!’

'100 லைக்ஸ் பார்க்காம, இந்த உசுரு போகாது... என் கட்டை வேகாது!’

'...உன்னைவிடப் பெரிய பணக்காரனாகி, அடுத்த வருஷமே இதே நாள் ஃபேஸ்புக்ல மெமரியை உன்கூட ஷேர் பண்ணலை என் பேரு...’

facebook.com/araathu.officialpage:

இரண்டு குழந்தைகள் தெருவில் விளையாடிக்கொண்டு இருக்கின்றன. ஏதேதோ பொய்க் காரணங்கள் சொல்லி, உருட்டி மிரட்டி ஒரு தாய் தன் குழந்தையைப் பிரித்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள். இன்னொரு குழந்தையின் மீது லேசாகக் கடுப்பையும் சிடுசிடுப்பையும் காட்டுகிறாள். இந்த இன்னொரு குழந்தை மனதளவில் அடிபட்டுத் திகைத்துப்போய் நிற்கிறது.

வீட்டுக்குச் இழுத்துச் செல்லப்படும் குழந்தை, தற்காலிகமாக தன் தாயை வெறுக்கிறது. குடும்பத்துக்கும் நட்புக்குமான வித்தியாசம் அதற்குப் புரியத் தொடங்குகிறது. இழுத்துச் செல்லும்போது திகைத்துப்போய் நிற்கும் தன் நண்பனைப் பரிதாபமாக, பின்னால் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி செல்கிறது.

அப்போது குழந்தைகளுக்கே தெரியாமல் உருவாகியிருந்த நட்பு இறுக ஆரம்பிக்கிறது. குழந்தை குடும்பத்தைவிட்டு மிக லேசாக விலக ஆரம்பிக்கும் தருணம்.

வெல்கம் டு ஹேப்பி அண்ட் க்ரூஷியல் சோஷியல் லைஃப் கிட்ஸ்!

facebook.com/donashok:

'அச்சா தின்’  

-இது அசுரப் புலி

'மேக் இன் இந்தியா’ -இது அட்டகாசப் புலி

'ஸ்வச்பாரத்’  

-இது அசாத்தியப் புலி

'டிஜிட்டல் இந்தியா’  -இது ஆர்ப்பாட்டப் புலி!

வலைபாயுதே V 2.0

twitter.com/jill_online:  ஸ்கூட்டரில் போய் வாழ்வை வீணடித்துவிட்டேன். பஸ்ல போனா இணையத்தில் ஜாலியா ஊர் மேய முடியுது # வாங்களேன் ஊர் மேயலாம் :)

twitter.com/redsuresh1985:   ஆரம்பத்துல மனுஷன் வேட்டையாடித்தான் சாப்பிட்டிருக்கான். போகப்போகத்தான் ஆட்டையப் போட்டு சாப்பிட்டுப் பழகிட்டான்!

twitter.com/skclusive: கற்பனைதான் பிரதான போதை!

twitter.com/rajakumari90: தண்ணீர் இருக்கும் இடத்தில் பிளாட் போட்டு விற்கிறார்கள்; தண்ணீர் இல்லாத இடத்தில், பயிர் வைத்துத் தவிக்கிறார்கள்!

twitter.com/Nivas_sankar: முத்தம் கேட்டால்கூட சிறிதும் யோசிக்காமல் கொடுத்துவிடுகிறார்கள். கொஞ்சம் முறுக்கு கேட்டால் நிதானமாக யோசித்த பின்னரே தருகிறார்கள்... குழந்தைகள்!

twitter.com/Rajarocketrocky:    வேலை இல்லைன்னா ஃபேஸ்புக் போவோம். ஃபேஸ்புக் அலுவலகத்துக்கே மோடி போறார்னா, அவர் எவ்ளோ வேலை இல்லாம இருப்பாரு!

twitter.com/Baashhu:    வாய் வழியா மூச்சுவிடுற ஆப்ஷன் கொடுத்த கடவுள் எவ்வளவு பெரிய இன்ஜினீயர்! இல்லைன்னா, ஜலதோஷத்துக்கே மண்டையைப் போட்டிருப்போம்!

twitter.com/roflkanth:  பக்கத்துவீட்டுக் குட்டிப்பையன் பூனைக்குட்டிகிட்ட கொஞ்சம் நேரம் பேசிட்டு, அது மூஞ்சில அடிக்கப்போறான் # அடேய்... இது டாக்கிங் டாம் இல்ல, ரியல் டாம்!

twitter.com/stalinsk50:   தனிமையில் இருப்பவன் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது!

twitter.com/chevazhagan1: 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ எனும் வார்த்தைகள் எல்லோருக்கும் பொதுவானவை!

twitter.com/iamswathee:    எவராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே ஆகச் சிறந்த சுதந்திரம்!

twitter.com/deena7831:  நம்மைத் தோற்கடித்தவன்தான் நம் பிழைகளின் மொத்த உருவம்!

twitter.com/jebz4:   யாரிடமும் உதவி பெறாதீர்கள். பிரச்னை என வந்துவிட்டால், ' 'விஸ்வரூபம்’ பிரச்னையில் கமல்ஹாசனுக்கு உதவினேனே...’ என சரத்குமார் போல சொல்லிக்காட்டுவார்கள்!

twitter.com/Babbuk3:   'நான் அப்பவே சொன்னேன்’கிறதைக்கூட ஏத்துக்கலாம். 'நான் அப்பவே நினைச்சேன்’கிறதைச் சொல்லித்தொலைங்கடா!

வலைபாயுதே V 2.0

twitter.com/S1Manjula:  நினைவில் 'கவுண்டமணி’யை உடையவன் உலகத்தையே 'செந்திலா’கத்தான் பார்ப்பான்!

twitter.com/kattathora:  கேட்கிறவன் கேனையனா இருந்தா, 'திருமழிசைதான் அடுத்த அண்ணா நகர்’ன்றானுங்க!  

twitter.com/iamosthi:  நாலு பேருக்கு முன்னாடி நல்லவனா இருக்கிறது பெரிய விஷயம் இல்லை. நாலு சுவருக்குள்ள நல்லவனா இருக்கிறதுதான் பெரிய விஷயம்!

வலைபாயுதே V 2.0

twitter.com/MrithulaM: 'நல்லாயிருக்கியா?’னு கேட்க அறிமுகமாகி யிருந்தா போதும், 'நல்லாயிருக்கணும்’னு நினைக்க நிறைய அக்கறை இருக்கணும்!

வலைபாயுதே V 2.0

'' 'டிஜிட்டல் இந்தியா’னா என்னண்ணே?''

''அப்படிக் கேளு. அரசியல் தலைவருங்க வெளக்குமாத்தால கூட்டிவெச்சிருக்க குப்பையைச்  சுத்தம்பண்ணா, அது க்ளீன் இந்தியா. அதையே போட்டோ எடுத்து ஃபேஸ்புக், ட்விட்டர்னு போட்டா, டிஜிட்டல் இந்தியா. அவ்ளோதான்!''

facebook.com/jill.kamatchirajan:

கடந்த மாதத்தில் எந்தவித நோக்கமும் இல்லாமல், பயணியாக நிறைய ஊர்களுக்குச் சென்றேன். திருவரங்கத்தில் பெருமாள் சயனித்த நிலையிலான சிலையின் அழகைக் கண்டபோது, எவ்வளவு எட்டிப் பார்த்தும் பாதம் தெரியவில்லை. வெளிவந்ததும் கண்ட காட்சி, ஆன்மாவை அலைஅலையாக மீட்டியது. என் சுற்றுப்புறம் எல்லாம் மங்கலாகி ஒழுகி, நான் மட்டும் ஒரு கோட்டோவியமாக மாறிய பிரமை. எப்பேர்ப்பட்ட கலையின் காலடியில் நின்றுகொண்டிருந்தோம் என இப்போதும் வியக்கிறேன் # பலர்‬ முன்கூட்டியே அறிந்திருக்கலாம். நான் நேரடியாகக் கண்டுதான் அறிந்தேன். திருவரங்கம் செல்வோர், அரங்கன் கருவறைச் சுற்றுச்சுவரைக் காணத் தவறாதீர். கடவுளாக அல்ல கலையாக!