Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

facebook.com/donashok: : இரண்டு தலித் குழந்தைகளை எரித்துக் கொன்றிருக்கிறார்கள். பசு வதைக்கு எதிராக வாய் கிழியப் பேசும் இந்துமதவாதிகள் இதைப் பற்றி பேசவே மாட்டார்கள். தலித்களின் உணவான மாட்டுக்கறி என்பது இந்து மதத்துக்கு ஒவ்வாது எனச் சொல்கிறவர்கள், தலித்களை எப்படி இந்துக்களாக ஏற்பார்கள்? இந்துமதவாதிகளுடன் கைகோத்துக் கோஷமிடும் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். இன்று தலித்களின் உணவை 'தீட்டு’ எனும்போது, நீங்கள் எதிர்க்கவில்லை; இன்று தலித் குழந்தைகள் எரிக்கப்படும்போதும் நீங்கள் எதிர்க்கவில்லை; நாளை உங்களிடம் வருவார்கள். ஆட்டுக்கறியை 'தீட்டு’ என்பார்கள். 'அசைவம் இந்து மத விரோதம்’ என்பார்கள். 'உயர் சாதி உணவுப்பழக்கமும் உயர் சாதிக் கலாசாரங்களும்தான் இந்து மதத்தின் கலாசாரம்’ என்பார்கள். உங்கள் உணவுகளை 'தீட்டு’ என்பார்கள். உங்களையும் பலிகொடுப்பார்கள்; எதிர்க்கத்தான் ஆள் இருக்காது!

facebook.com/araathu.officialpage: 'ஆடு எப்படிக் கத்தும்?’, 'மான் எப்படிக் கத்தும்?’, 'சிங்கம் எப்படிக் கத்தும்?’னு மிமிக்ரி பண்ணிக் காட்டிக்கிட்டு இருந்தான் என் மகன் ஆழி.

'சரிடா... மனுஷங்க எப்படிக் கத்துவாங்க?’ என்றேன்.

' 'டேய் ஆழி... நீ பண்றது தப்பு. இப்படி எல்லாம் பண்ணக் கூடாது. ஒழுங்கா நடந்துக்கணும்.’ இப்படித்தாம்பா கத்துவாங்க.’

facebook.com/profile.php?id=100009484105148: 'காமராஜர் இருந்தாரு தோற்கடிச்சீங்க! கக்கன் இருந்தாரு சாகடிச்சீங்க! அதான் இப்போ குஷ்புவும் நக்மாவும். என்ன பண்ணப்போறீங்க?’னு காங்கிரஸ் கேக்குற மாதிரியே இருக்கு.

 facebook.com/jv.balaji: நடிகர் சங்கத் தேர்தல்ல ஓட்டு போட்டுட்டு வந்த நிறைய நடிகர்கள் 'ரொம்ப சந்தோஷமா இருக்கு’னு பேட்டி தர்றாங்க. ம்ம்... நிறைய ஆடியோ லான்ச்ல பேசிப் பேசியே பழக்கம் ஆகிருச்சு எல்லோருக்கும்.

வலைபாயுதே V 2.0

twitter.com/arattaigirl:   பொரியில கடலையைக் கலப்பானேன்.  அதைத் தேடித் தேடி எடுப்பானேன். தனித்தனியாவே வைக்கலாம் :-))

twitter.com/supersugumar:  'வளர்ற பையன்... வளர்ற பையன்’னு நல்ல சாப்பாடு  போட்டு வளர்த்துட்டு, வளர்ந்ததுக்கு அப்புறம் 'மாடு மாதிரி வளர்ந்திருக்கான்’னு  திட்டுறாங்க!

twitter.com/S1Manjula:  நினைவில் கவுண்ட மணியை உடையவன், உலகத்தையே செந்திலாகத்தான் பார்ப்பான்!

twitter.com/meena mmakayal:   நான்கே வாரங்களில் சிவப்பழகு கிடைத் திருந்தால், fairness  கம்பெனிகள் எப்போதோ திவால் ஆகியிருக்கும்!

twitter.com/arattaigirl:  'ஆமா’வாகவோ 'இல்லை’யாகவோ வாழ்ந்துவிடுங்கள். 'ஆமாஞ்சாமி’யாக மட்டும் வாழாதீர்கள்! 

twitter.com/powshya:  எவ்வளவு பிற்போக்கா சிந்திச்சாலும், கடவுள் நம்பிக்கை வரமாட் டேங்குது எவ்வளவு பகுத்தறிவா சிந்திச் சாலும் பேய் பயம் போக மாட்டேங்குது!

twitter.com/chevazhagan1:    நேரத்தை, தூரமாகக் கணக்கிடுகிறது விஞ்ஞானம். தூரத்தை நேரமாகக் கணக்கிடு கிறது ரியல் எஸ்டேட் # தாம்பரத்தில் இருந்து 10 நிமிஷம்தாங்க.

twitter.com/teakkadai :சக வயதினர் யாராவது வீடு - கார் வாங்கினால், நாமும் அப்படி ஆகவேண்டும் என ஒரு பொறி கிளம்புது. சோகம் என்னன்னா, அரை மணி நேரத்துல அது அணைஞ்சிடுது!

வலைபாயுதே V 2.0

twitter.com/sundartsp: அடுத்தவன் சம்பளத்தைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதில் ஆரம்பிக்கிறது நிம்மதி!

twitter.com/ManuMechstar: கடவுளைவிட, சி.சி.டி.வி கேமராவுக்குப் பயந்தே பெரும்பாலான தவறுகள் நடக்காமல் இருக்கின்றன!

twitter.com/nithil_an:  இந்தப் பக்குவம், நிதானம் எல்லாம் ஒரு ஸ்கூட்டி நம்ம பைக்கை ஓவர்டேக் பண்ற வரைதான்!

twitter.com/teakkadai: சிறுவயதில், பெரிய முறுக்கு மீசை வைத்திருப்பவர்களைக் கண்டால் பயமாக இருக்கும். அதை முற்றிலும் போக்கிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்!

twitter.com/teakkadai:  ஒரு நாளின் பெரும் பகுதி நேரம், வெட்டியாக இருந்தால் யாருடைய உழைப்பையோ திருடிக்கொண்டிருக்கிறீர்கள் எனப் பொருள்!

twitter.com/iParisal: கடவுள்-பேய் இரண்டையும் சமமா நம்புற ஒரே கம்பெனி, 'தேனாண்டாள் ஃபிலிம்ஸா’கத் தான் இருக்கும்!

twitter.com/Tottodaing : அடுத்தவனோட பிரச்னையைத் தீர்க்க ஆயிரம் வழிகள் தோணுது. நமக்கு ஒண்ணுன்னா, ஒரே குழப்பமா இருக்கு!

வலைபாயுதே V 2.0

twitter.com/teakkadai: அஜித், 80-களின் சிவாஜி கணேசனைப் போல மாறிவிடுவாரோ என ஒரு பயம் வந்துகொண்டே இருக்கிறது!

twitter.com/Tubelighd:   பிச்சைக்காரன் தன்னை நம்பி வெளியிலே நின்றுவிடுகிறான். மற்றவன் எல்லாம் கடவுளை நம்பி உள்ளே செல்கிறான்!

twitter.com/Baashhu:  பணக்காரக் குழந்தை என்றாலும் வீடு வரையச் சொன்னால் குடிசை வீட்டைத்தான் வரைகிறது!

twitter.com/arattaigirl: மந்தகாசப் புன்னகை என்றெல்லாம் கதைகளில் படித்ததோடு சரி. பார்ப்பது எல்லாம் 'மங்க்கி ஸ்மைலி’களாகத்தான் உள்ளது!