Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே V 2.0

twitter.com/Yaaro_:   வெயில் அதோட வேலையைப் பாக்குது, மரம் அதோட வேலையைப் பாக்குது, மனுஷன்தான் மரத்தை வெட்டிட்டு வெயிலைக் குற்றம் சொல்றான்! 

twitter.com/udanpirappe: லாஜிக்படி 'இனமான குரங்கு’னுதான் நாம போஸ்டர் அடிக்கணும். சம்பந்தமே இல்லாம 'இனமான சிங்கம்’னு அடிச்சுவெச்சிருக்காய்ங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/Aiyswarya: நமக்கு நாமே செய்யும் அதிகபட்சத் துரோகம், நம் கனவுகளை எந்தவித முயற்சியும் இன்றி நிராகரித்தல்!

twitter.com/mrithulaM: தீபாவளி நெருங்குகையில் எத்தனைக்கு எத்தனை குறைவான மகிழ்ச்சி இருக்கிறதோ, அத்த னைக்கு அத்தனை அதிக வயது!

twitter.com/aswintalks:   மனைவி: காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னீங் களே... இப்ப ஏன் குடிச்சீங்க?

வலைபாயுதே V 2.0

கணவன்: இல்லடி... பையன் ராக்கெட்விட பாட்டில் இல்லேன்னு சொன்னான்... அதான்.

twitter.com/Porukke:  யார்கிட்டயும் உதவி கேக்கக் கூடாதுங்கிற உங்க வைராக்கியம் பிடிச்சிருக்கு. ஆனா, உங்களுக்குப் பின்னாடி 10 பேர் நிக்கிறோம், தெரியலேன்னா கேளுய்யா. # கிஜிவி அக்கப்போருகள்!

twitter.com/ashokiie:  'மூடு டாஸ்மாக்கை மூடு...’ பாடலுக்காக கோவனைக் கைதுசெய்த தமிழ்நாடு அரசு, 'ஓபன் த டாஸ்மாக்...’ பாடலுக்காக அனிருத்துக்கு பாரதரத்னா விருது வழங்க ஆவன செய்ய வேண்டும்!

twitter.com/manipmp : ஒரு பக்கெட் துணியைத் துவைத்து முடித்து மனைவி வரும்போது, நாம் போன் நோண்டிக்கிட்டிருப்பதை அவர் பார்த்தால் வருவதுதான் மரணபீதி!

twitter.com/ _SSudha: சிலர் 'ழ’கரம் உச்சரிக்கும் அழகைக் கேட்கும்போது, நமக்கே ஒருதடவை மனசுக்குள் உச்சரித்துப்பார்க்கத் தோன்றும்!

வலைபாயுதே V 2.0

twitter.com/Aruns212:  தத்துவங்களில் மிகச் சிறியது 'வாழ்க்கை ஒரு வட்டம்’ என்பதே!

twitter.com/ ivivasai:    22 வயசுக்கு மேல ஒருத்தன் 'எனக்குப் பணத்தாசை இல்லை’னு சொல்லிட்டு சுத்துனான்னா, அவன்  உழைக்கப் பயப்படுறான்னு அர்த்தம்.

twitter.com/KeethaSj:   ஏமாற்றத்தில் கொடிய ஏமாற்றம்... சார்ஜ் வொயரைச் செருகிட்டு ஸ்விட்ச் போடாம இருப்பதுதான். மூணு மணி நேரமா சார்ஜ் போட்டிருக்கேன்.

twitter.com/vanithaj: வீட்டில் ஒருவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், அவர்கள் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது. டெக்னாலஜி மன அழுத்தம் தருகிறது.

வலைபாயுதே V 2.0

twitter.com/NamVoice: 'முதலமைச்சர் சென்னையில் இல்லைன்னாலும் அரசு இயங்கிட்டுத்தான் இருக்கு’ன்னு காட்டிய நிகழ்வுகள், ஆயிரம் கோடிக்கு சொத்து வாங்கினதும், கோவன் கைதும்!

twitter.com/minimeens:   துயரம் பருப்பு!

வலைபாயுதே V 2.0

facebook.com/palaapattarai:

இன்றைக்கு அப்பாவின் மாதாந்திர மெடிக்கல் செக்கப்புக்காக சென்னை சென்று வந்தேன். காலையில் செல்லும்போது செம வெயில், வரும்போது அட்டகாசமான மழை. 30 நிமிடத்துக்கும் குறைவான மழைக்கே ராஜ்பவன் வாசலில் மழைநீர் தேங்கி அலை அடித்துக்கொண்டிருந்தது.

நங்கநல்லூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் உறவினர்கள், இப்போதே வீட்டுக்குத் தேவையான தண்ணீரை லாரியில் வாங்கத் தொடங்கிவிட்டனர். வருடத்துக்கு ஆறு மாதங்கள் லாரித் தண்ணீரே துணை!

இன்றைக்கு கூவத்தில் கலந்த அருமையான சுவையுடைய மழைத் தண்ணீரின் மதிப்பை அறியாத, சென்னை போன்ற ஒரு பிடி மண்ணைக்கூட வெளியில் காட்டாமல் சிமென்ட் போட்டு மூடி சவப்பெட்டிபோல கட்டமைத்திருக்கும் நகர மக்கள், காசை விட்டெறிந்தால் லாரி லாரியாகத் தண்ணீர் வரும் என்ற மோசமான மனப்பான்மையுடன் மழைநீர் சேகரிப்பை எல்லாம் ரோட்டில் விட்டு வெள்ளக்காடாக்கிய மக்கள், குடிநீருக்கு அல்லாடுவதை வன்மத்தோடு பார்ப்பதில் எனக்கு சங்கடங்கள் இல்லை.

facebook.com/pichaikaaran:

ஒரு நள்ளிரவு... ஆலயம் ஒன்றில் அவ்வளவு நேரம் நிகழ்ச்சிகள் இருந்தன. நிகழ்ச்சிகள் முடிந்ததும், 'பக்கத்தில் ஏதாச்சும் பேருந்து நிறுத்தத்தில் என்னை டிராப் செய்ய முடியுமா?’ என மூவரிடம் கேட்டபோது கிடைத்த ரிசல்ட்...

1) 'இந்த நேரத்தில் பஸ் கிடைக்காது. பேருந்து நிறுத்தத்தில் தனியாக நிற்பது பாதுகாப்பு இல்லை. இங்கேயே இருங்கள். கொஞ்சம் விடிந்ததும் போய்க்கொள்ளலாம். அருகில் இருக்கும் டீ ஷாப்பில் வேண்டுமானால் டிராப் செய்யட்டுமா?’ எனக் கனிவாகக் கேட்டார் ஒருவர்.

2) 'ஸாரி சார். நான் ரொம்ப பிஸி. டிராப் பண்ண முடியாது’ எனச் சொல்லிவிட்டுப் பறந்தார் ஒருவர்.

3) 'அதுக்கென்ன டிராப் செய்கிறேன்’ எனச் சொல்லிவிட்டு, ஆளே இல்லாத பேருந்து நிறுத்தத்தில் டிராப் செய்தார் ஒருவர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism