Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

Published:Updated:

facebook.com/nelsonxavier08: முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் ஆடியோ வந்ததும், அதை ஒளி(லி)பரப்புவது பற்றி நிறையக் குழப்பங்கள். எந்தவித அதிகாரபூர்வத் தகவல்களோடும் அந்த ஆடியோ வெளியிடப்படவில்லை. மாநிலச் செய்தித் தொடர்பு துறையோ அல்லது அ.தி.மு.க தலைமை அலுவலகமோ, ஆடியோவுடன் எந்தச் செய்திக் குறிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், அரசின் மாநிலச் செய்தித் தொடர்பு அலுவலக முகவரியில் இருந்து, FTP மூலமாக வெறும் ஆடியோ மட்டும் அனுப்பப்பட்டிருந்தது.

வழக்கமான அறிக்கை / கடிதம் / அரசு வீடியோ / புகைப்படம் / குறைந்தபட்சம் ஜெயா டி.வி மைக்குடனான பேட்டி என எதுவும் இல்லாமல் வெளியாகியிருந்தது ஆச்சர்யமான ஒன்று.

வாட்ஸ்அப்பில் அரசின் அறிக்கையை /கோரிக்கையை வெளியிடுவது சட்டபூர்வமாகத் தொடங்கியிருக்கிறதா, அதன் உறுதித்தன்மை என்ன... இப்படி நிறையக் கேள்விகள்.

எல்லாவற்றையும்விட... `இப்படி இறங்கிவந்து இந்த டோனில் பேசியிருப்பது நம் முதலமைச்சர்தானா?’ என்ற சந்தேகம்தான் மிகப் பெரியதாக இருந்தது.

வலைபாயுதே V 2.0

facebook.com/priya.sivashankaran: மிகச் சிறந்த பழிவாங்கல் என்பது, சனி-ஞாயிறுகளில் காலங்கார்த்தால எழுந்துகொள்ளும் குழந்தைகள், நம்மையும் அப்போதே எழுப்பி
விடுவதுதான்!

facebook.com/kirthikat: உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஆகம விதிகளில் பெண்களின் நிலை என்ன? உலகின் மிகப் பெரும் பான்மையான எல்லா மதங்களிலும் வேறுபாடு இல்லாமல் தாழ்த்தப்படுவது பெண் சமூகம்தான்!

facebook.com/elango.kallanai: `ஒரு படி நெல்லுக்கு மூணு படி உப்பு’னு ஊருக்குள் விற்றுக்கொண்டு வருகிறார்கள். எப்போதும் காலையில் இதை எங்க ஊரில் கேட்க முடியும். நல்ல பண்டமாற்றுதானே! கடல்புற மக்கள் விவசாய மக்களிடம் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படும். ஆனால், ஒரு படி யூரியா - டி.ஏ.பி உப்புக்களை கொடுத்து, எத்தனை படி நெல்லை நம்மிடம் இருந்து கொள்ளையடித்துக்கொண்டிருந்தன இந்த கம்பெனிகள். நிலம் பாழாகியும், புகையால் சீரழிந்தும் இன்னும் மக்கள் பெரிதாக மாறவில்லை. சம்சாரிகளுக்கு இந்த உப்புக்களை மதச்சடங்குகளுக்கு ஒப்பாக மாற்றிவைத்துள்ளார்கள். முறையற்ற பண்டமாற்றத்தை ஒழிக்க, ஒரு தலைமுறையினர் போராட வேண்டும். உப்பு என்றால் உப்பு மட்டுமே இருக்க வேண்டும். அதுதான் நமக்கு விடப்பட்ட சவால்!

twitter.com/MrElani: எனக்குத் தெரிஞ்சு தமிழ்நாட்டுல ஃபுட்பால் ஆடுற ஆளுங்க... நார்த் மெட்ராஸ், கோயம்புத்தூர், ராஜ்கிரண் ஃபேமிலி!

twitter.com/vinodhkrs: வாழ்க்கையில எவ்ளோ பெரிய ஆளானாலும், இட்லியை மட்டும் ஸ்பூன்ல எடுத்துச் சாப்பிடுற பழக்கத்துக்கு ஆளாகிடக் கூடாது ஆண்டவா!

twitter.com/rajathinksu: நம் நேர்மையின்மைக்கும் ஒழுங்கின்மைக்கும் நாம் தேடும் பரிகாரம்தான் சகாயம்!

twitter.com/ThirutuKumaran:  வீடு வரை WiFi... வீதி வரை 3G... காடு வரை 2G... கடைசி வரை No Signal!

வலைபாயுதே V 2.0

twitter.com/Sakthivel_Talks: தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டும் அல்ல... டீக்கடைகளில் தரப்படும் தேநீரின் அளவும் குறைந்துகொண்டே போகிறது. அண்ணே... கொஞ்சம் தண்ணியாச்சும் ஊத்தித்தாண்ணே!

twitter.com/thoatta: ஸ்மைலிகள் அதிகமாகிருச்சு; ஆனா, சிரிப்புகள் குறைஞ்சிருச்சு :(

twitter.com/MrElani : டி.ஆர்-ட்ட பிடிச்ச விஷயமே, எந்த ஒரு பிரச்னையிலும் தன் மகனை விட்டுக் கொடுத்தே பேசினது இல்லை. ஃபாதர்னா ஃபாதர்... அப்டி ஒரு ஃபாதர்!

twitter.com/arattaigirl: `என்னைப் பிடிக்குமா?’ என்பதில் தொடங்கி, `என்னைத் தவிர வேறு யாரையும் உனக்குப் பிடிக்கக் கூடாது’ என்பதில் பயணிக்கிறது காதல்!

twitter.com/karthiykj: அம்மாவின் ஆணைக்கு இணங்க, சென்னை ஃபுட்பாலில் வெற்றி பெற்றது #ISL

twitter.com/withkaran: கமல்: ஏது... ‘எந்திரன்’ பட்ஜெட் 350 கோடியா? இவனைவெச்சு எப்படியும் `மருதநாயகம்’ எடுத்துப் புடணும். லைகா போற பக்கம்லாம் ஆளைப் போடு!

வலைபாயுதே V 2.0

twitter.com/krajesh4u: `சாம்பார்ல உப்பு இல்லை’னு சொன்னதுக்கு, `ஏன்... நீ இதுவரை உப்புனது போதாதா?’னு ரிப்ளை. நாட்டுல யாருக்குமே சகிப்புத் தன்மை இல்லை!

twitter.com/Manmathan033: `நாயே...’னு கூப்பிட்டா நாலு பேரு திரும்பிப் பார்க்கிறாங்க... நாய் மட்டும் அது பாட்டுக்குப் போவுது!

வலைபாயுதே V 2.0

twitter.com/kaviintamizh: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... பிறகு, போதிய ஆதாரம் இல்லை என சூதே வெல்லும்!