Published:Updated:

வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/suguna.diwakar:

இரண்டு நாட்களுக்கு முன்னர் சத்யம் தியேட்டரில் ‘பூலோகம்’ திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, இடைவேளையில் தமிழ்நாடு அரசின் செய்திப் படம் போட்டார்கள். வாட்ஸ்அப்பில் ஜெயலலிதா பேசியதை, மொக்கையான காட்சிப்படுத்தல்களுடன் இணைத்து ஒளிபரப்பினார்கள். வழக்கமாக, அம்மா புராணப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் சலிப்புடன் கடந்துபோவார்கள். ஆனால், இந்த முறை தொடங்கிய இரண்டாவது நிமிடம் திரையரங்கம் முழுவதும் கேலிச் சிரிப்பும் ஆரவாரமும் கிண்டலான கைத்தட்டல்களும் எழுந்தன. பெரும்பாலும் உணர்ச்சிகளை ஆரவாரமாக வெளிப்படுத்தாத நடுத்தர வர்க்கம் மற்றும் உயர் நடுத்தர வர்க்கப் பார்வையாளர்கள்தான் சத்யம் தியேட்டருக்கு வருவார்கள். அங்கேயே இப்படி என்றால், மற்ற திரையரங்குகளில் எப்படி இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. அ.தி.மு.க ஆட்சி மீதான அதிருப்தி கண்கூடாகத் தெரிகிறது. அதுவும் இந்த வாட்ஸ்அப் உரை, சொந்த செலவில் சூனியம்!

Whatsapp:

6,000 மதுக்கடைகளை பால் விற்பனை நிலையங்களாக மாற்ற முதல்வர் ஆலோசனை!

அல்லோ... அல்லல்லோ... அவசரப்பட்டு மயக்கம்லாம் போட்றாதீக... இது பீகார் நியூஸ்!

facebook.com/RAMRAMSITARAM

90-களின் தொடக்கத்தில் உலக காஸ்மெட்டிக் நிறுவனங்கள், இந்தியாவைக் குறிவைத்தன. உடனே 1994-ம் ஆண்டில் ஐஸ்வர்யாவுக்கும் சுஷ்மிதாவுக்கும் முறையே `உலக அழகி’, `பிரபஞ்ச அழகி’ பட்டங்கள் கொடுத்து, இந்தியப் பெண்களைக் கவிழ்த்தன.

வலைபாயுதே V 2.0

1994, 1996, 1997, 1999, 2000 - இந்த ஆண்டுகளில் தொடர்ந்து லாரா தத்தா, டயானா ஹெய்டன், யுக்தா முகி, பிரியங்கா போன்ற இந்தியப் பெண்களை, உலக அழகி, பிரபஞ்ச அழகிகளாகத் தேர்வுசெய்து, இங்கே அழகு சாதனப் பொருட்களை ஆழமாக கால் ஊன்றச் செய்தனர்; இந்தியப் பெண்களை மயக்கி கோடிகளைக் குவித்தனர். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு, முதல் 20 இடங்களில்கூட இந்திய அழகிகள் வரவில்லை. காரணம், இனி இந்தியப் பெண்கள் அழகு சாதனப் பொருட் களைக் கைவிட மாட்டார்கள் எனப் புரிந்துகொண்டதால், மற்ற நாட்டுப் பெண்களைக் கவர்வதற்குச் சென்று விட்டன உலக காஸ்மெட்டிக் நிறுவனங்கள். ஆனால், 90-களில் இருந்து நாம் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கிறோம். இதுவும் ஓர் உலக அரசியல் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?

facebook.com/tmaniji

கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கலாம்; கைகளை நீட்டி யாசகமும் கேட்கலாம்... கடவுள் வேஷமிடுபவன்!

facebook.com/vomsri

இன்று முதல் பேஸ்மென்ட்ல வண்டியை நிறுத்தப்போறேன்... என்னை வாழ்த்துங்கள் ஃப்ரெண்ட்ஸ்!

facebook.com/Vj Fans: தெறி வில்லன்! (இயக்குநர் மகேந்திரன்)

facebook.com/rajarajan1969:

தொடர்ந்து மூன்று நாட்களாகப் பார்க்கிறேன்... கலைஞர் தொலைக்காட்சியில், கழக ஆட்சிகளுக்கு மாற்றாக இளைஞர்கள் எழுச்சியுற்று, தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடித்துவிடுவது போன்ற கதைகொண்ட படமாகப் பார்த்து, பார்த்துப் போடுகிறார்கள்.

நேற்று ‘ஆயுத எழுத்து’, இன்று ‘கோ’, நாளை ‘புதிய மன்னர்கள்’ போட்டாலும் போடுவார்கள். ‪#பாவம்‬ அவங்களுக்கே அலுத்துடுச்சுபோல!

twitter.com/i_Soruba
: பெரும்பாலான அம்மாக்கள், ஃப்ரிட்ஜைத் திறந்து வெச்சுட்டுத்தான் `என்ன எடுக்கணும்?’னு யோசிக்கிறாங்க!

twitter.com/arattaigirl: நான் ராசிபலன் பகுதி படிப்பதே, ‘அன்பும் புத்திசாதுர்யமும் கொண்ட’ என்பன போன்ற நான்கு நல்ல வார்த்தைகளைப் படித்துச் சிலிர்க்கத்தான்!

வலைபாயுதே V 2.0

twitter.com/gpradeesh: கித்தாப்பா மெனுகார்டைப் பார்த்துட்டு இருக்கும் போதே, `அவருக்கு ஒரு ரவா தோசை’னு ஆர்டர் பண்ணிடுறா. வாழ்க்கை சில நேரங்களில் அவமானகரமானது!

twitter.com/Mrbublooo:
ஆபீஸ்ல ஒருத்தன் `அடுத்த வருஷம் பார்ப்போம்’னு சொல்லிட்டு, அவனே சிரிச்சுட்டுப் போறான். இன்னுமாடா இதை ஜோக்குனு...

twitter.com/ezhil769: நதிக்கரையில் ஆரம்பித்த நாகரிகம், நதியை அழிப்பதில் வந்து நிற்கிறது!

twitter.com/Sath_yeah:
பொண்ணுங்க இல்லாத அத்தைங்க மட்டும்தான், என்னை `மருமகனே’னு கூப்பிடுறாங்க... டிசைன் அப்படி!

twitter.com/Railganesan:
`சர்வீஸ் பண்றேன்’னு வந்தவன் எல்லாம் சம்பாதிக்கிறான்; சம்பாதிக்க  வந்தவன் எல்லாம் சர்வீஸ் பண்றான். இந்தியாடா!

twitter.com/Eakalaivan:
நமக்குப் பிடித்ததைச் செய்ய, வாய்ப்பைவிட தைரியமே அதிகமாகத் தேவைப்படுகிறது!

வலைபாயுதே V 2.0

twitter.com/arivucs: ஆதார் அட்டையிலும் அழகாயிருப்பவள் நீ!

twitter.com/robo_offl: வாழ்க்கை, பிரிச்சுவெச்ச சாம்பார் பாக்கெட்போல ஒரு நிலையா நிக்க மாட்டேங்குது. நாமதான் இழுத்துப் புடிச்சி ஒரு சைடா நிப்பாட்டிக்கணும்போல!

twitter.com/SelvarajanBala:
இந்தப் பூமியில மனுஷனைத் தவிர மற்றது எல்லாமே மனுஷனுக்குப் பயனுள்ளதாக இருக்கின்றன!

twitter.com/ZhaGoD: ஜெ. மீது ஊடகங்களுக்கு இருக்கும் பயம் இயல்பானது; ஊடகங்களைச் சந்திக்க அதிகார மையத்தின் மூலவர் பயப்படுவதுதான் பரிதாபகரமானது!

twitter.com/Mad_Offl: நாம் கண்ட ஒரே ஒரு வித்தியாசம்... ஆட்டோக்காரன், `நீங்க சொல்ற இடம் தூரம்’னு சொல்லி காசு வாங்குவான்; ரியல் எஸ்டேட்காரன் `இதோ பக்கம்’னு சொல்லி காசு வாங்குவான்!

twitter.com/Rajinthan077:
பேசிட்டு இருந்த பொண்ணு, திடீர்னு பேசாம இருந்தா... அவங்க வீட்ல பேசி முடிச்சுட்டாங்கனு அர்த்தம்!

வலைபாயுதே V 2.0

twitter.com/Saathaaranan: “சொன்னா நம்ப மாட்டீங்க...”

“இல்ல சொல்லுங்க.”

“திருநள்ளாறை கிராஸ் பண்ணும்போது சேட்டிலைட்டே வொர்க் ஆகாதுங்க...”

“ஓ!” # முதல்ல... இவன் ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணணும்!