Published:Updated:

வலைபாயுதே V 2.0

வலைபாயுதே V 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/swaravaithee: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸின் நேர்காணலை, இந்துஸ்தான் டைம்ஸில் படித்தேன்...

வலைபாயுதே V 2.0

`என் அப்பா இந்தத் தேசத்துக்கு எவ்வளவோ நன்மைகள் செய்திருக்கிறார். ஆனால், அவர் பற்றி பேச்சு வரும்போதெல்லாம் `ஓ... அவர் செத்துப்போனதுகூட பிரச்னை ஆச்சே. அவரா..?' என்றே தொடங்குகிறார்கள். இப்படியா அவர் புகழ்பெற வேண்டும்?' என்று கேட்டிருக்கிறார்!

facebook.com/saravanan.chandran.77:
கேரளாவில் நிறையச் சுற்றினேன். அதில் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லியே ஆகவேண்டும். அங்கு உள்ள டீக்கடைகளில், டீ எட்டு ரூபாய்க்கும், சர்க்கரை இல்லாத டீ ஏழு ரூபாய்க்கும் விற்கிறார்கள் சேட்டன்கள். இப்படி ஆப்ஷன் கொடுப்பதே அசத்தலாக இருக்கிறது. ஒரு ரூபாய்னாலும் சும்மாவா? சேட்டன்கள், அதை இங்கும் சாத்தியப்படுத்திக்காட்டினால் எல்லோருக்கும் மகிழ்ச்சி!

வலைபாயுதே V 2.0

facebook.com/guru.shree.16: யாருடன் தேர்தல் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் - சரத்குமார் # கேட்காத காதுக்கு ஹெட்செட்டாம்... பாயசம் குடிக்கிறத்துக்குப் பல்செட்டாம்!

வலைபாயுதே V 2.0

facebook.com/guru.shree.16: கோபத்துல வார்த்தைங்களைக் கொட்டினா அள்ள முடியாது. அதே மாதிரி பீங்கான் பிளேட்டையும் உடைக்கக் கூடாது. அதை அள்ளுவதும் கஷ்டம்!

facebook.com/swaravaithee:


படிக்கிற பசங்களுக்கு எதுக்கு மொபைல்?

படிக்கிற பசங்க எதுக்கு டி.வி பார்க்கணும்?

படிக்கிற பசங்க எதுக்கு பேப்பர் படிக்கணும்?

படிக்கிற பசங்களுக்கு எதுக்கு காசு?

என்பதன் நீட்சியாக

படிக்கிற பசங்களுக்கு எதுக்கு அரசியல்?

படிக்கிற பசங்களா இருக்கிறது மாதிரி கொடுமை இருக்கவே முடியாது!

facebook.com/sukirtha.rani:
கவிதை வாசிப்புக்காக சென்னை செல்ல, அரசுப் பேருந்தில் ஏறினேன். நடத்துநரிடம், `சார்... ஒரு டிக்கெட்' எனச் சொல்லி, காசை நீட்டினேன். `இரு... வாங்கிக்கிறேன்' என என்னைக் கடந்துபோய்விட்டார். அதற்குள் கவிஞர் சுகுமாரனின் `தவறிய அழைப்பை மீள' எடுத்தேன். பின்னால் இருந்து ஒரு குரல், `ஹே... செல்போன்... டிக்கெட் எடு!'. `அப்ப என் கையில் துடைப்பம் இருந்தால், `ஹே... தொடைப்பக்கட்டை'னு கூப்பிடு வீங்களா? காசு வாங்காம கடந்துபோனது உங்க தப்பு. உங்களை `சார்'னுதானே கூப்பிட்டேன். உங்க பதில் மரியாதை நல்லா இருக்கு. டிக்கெட் கிழிக்கப் படிச்சப்பவே, பயணிங்ககிட்ட பழகவும் படிச்சிருக்கலாமே. போங்க சார்... இனியாவது அதைச் செய்யுங்க' என்றேன். ராணிப்பேட்டையில் நான் இறங்கும் வரை, பேருந்தில் பேரமைதி!

வலைபாயுதே V 2.0

facebook.com/donashok: அதென்ன... எவன் செத்தாலும் `அரசியல் ஆக்காதீங்க... அரசியல் ஆக்காதீங்க'னு கூவுறது? செத்தவன் என்ன, புற்றுநோய் வந்தா செத்தான்? மத அரசியலின் உட்பிரிவான சாதி அரசியல் தாங்க முடியாம செத்துப்போயிட்டான். அநியாயமான அரசியலால் நிகழ்ந்த அந்தச் சாவை, நியாயமான அரசியல் ஆக்குவது மட்டுமே, அந்தச் சாவுக்கு நாம் தேடும் நீதி. ரோஹித் வெமுலாவுக்கு நாம் செய்யும் நியாயமும் அதுதான்!

வலைபாயுதே V 2.0

twitter.com/g_for_Guru: நாஞ்சில் டு விஜயதரணி: - `ஆர் யூ ஓ.கே பேபி?’

twitter.com/Im__Joshi:
  `1100' என்ற எண்ணில் தொடர்புகொண்டு, முதலமைச்சரிடம் உங்கள் கேள்வி களைக் கேட்கலாம் - செய்தி. #தெய்வத்தை, மனிதன் கேள்வி கேட்பதா... அய்யகோ!

 twitter.com/Kiruku_Official: இன்பமோ துன்பமோ... சிரித்துக் கொண்டே இரு. பார்க்கிறவன் காண்டாகி சாவட்டும்!

twitter.com/withkaran: தமிழ்நாட்டுல 234 தொகுதிகள்லயும் ரெளடிகளை ஒழிச்சுக்கட்டின பிறகுதான், விஷாலின் கலைப்பயணம் முடியும்போல!

twitter.com/Tamil_Typist: ஜெ - ஒரு லைன் வாசிச்ச உடன் கொஞ்சம் நேரம் கொடுக்கிறார் டேபிளைத் தட்ட... கச்சேரியைப் பார்ப்பதுபோலவே இருக்கு!

twitter.com/chevazhagan1: இளையராஜாவின் `பச்சரிசி மாவிடிச்சு... மாவிடிச்சு... மாவிடிச்சு...' எனும் பாடல், நம் கை பிடித்து ஊர்த் திருவிழாவுக்கே கூட்டிச் செல்கிறது!

twitter.com/kumaresann01: கடவுளுக்கும் `ழ'கர பிரச்னை இருக்கும்போல, நான் `நல்ல வழியைக் காட்டு'னு வேண்டினா, அவர் `வலி'யைக் காட்டுறார்!

twitter.com/sindhutalks: `கெத்த உடாத... பங்கு கெத்த உடாத...'னு தல சொல்லியும் கேக்காம ரிலீஸ் பண்ணினாங்க. படம் ஃப்ளாப்பு # `கெத்து’!

வலைபாயுதே V 2.0

twitter.com/udanpirappe: அம்மா அழைப்பு மையத்தை 20,000 பேர் தொடர்புகொண்டனர் - ஜெயா நியூஸ் # இதுக்குப் பெருமைப்படக் கூடாது சென்றாயன்... வெட்கப்படணும்!

twitter.com/kathirvelrajan:
புதுசா ஒரு கைலியைக் கட்டினேன். வடிவேலு, கூடையை இடுப்புல கட்டிக்கிட்டு நடந்தா மாதிரி எனக்கும் ஃபீல் ஆவுது!

twitter.com/arattaigirl:
டக்குனு ஒரு செகண்ட் கண் மூடினதும் யார் முகம் நினைவுக்கு வருதோ... அவங்கதான் நம்ம கடனைத் திருப்பித்தராம இருக்கிறவங்க ;-)

twitter.com/kavinvk:
லவ் பண்றதைவிட, லவ் பண்றவன்கூட ரூம்மேட்டா இருக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம் # ஸ்ட்ரெய்ட்டா நானே பாதிக்கப் பட்டிருக்கேன்!

twitter.com/king_prasath: இந்தப் பூமி,  வேறு ஒரு கிரகத்தின் நரகமாகவும் இருக்கலாம்!

twitter.com/chinnapulla: எல்லா ஊர் பொருட்காட்சியிலயும் தாஜ்மஹால் செட் போடுறதுனால, தாஜ்மஹாலை நேர்ல பார்க்கும்போது ஏதோ பொருட்காட்சியில் இருக்கிற மாதிரியே ஃபீல் ஆகுது!
 
twitter.com/Whale_Spks: கவர்ச்சி நடிகைகளின் கடைசிக் காலம், காங்கிரஸில்தான் கழியும்போல!

twitter.com/Sathik_Twitz: பொண்ணுங்களைப் பொறுத்தவரையில், அவங்க யார் மேல இம்ப்ரஸ் ஆகுறாங் களோ... அவன் நல்லவன்; அவங்க மேல யார் இம்ப்ரஸ் ஆகுறானோ... அவன் கெட்டவன்!

twitter.com/Aasifniyaz:
இந்த மேசையைத் தட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிக்க முடிஞ்சா, தமிழ்நாடு மின்மிகை மாநிலம் ஆகிடும் # என்னா தட்டு தட்டுறாங்க!

twitter.com/Itzmejaanu:
டீக்கடை பன்னுக்கு நல்லா மேக்கப் போட்டு `பர்கர்'னு விக்கிறதே தொழில் ரகசியமாம்!

twitter.com/Shanthhi: ஏன் புதுத் துணி போடாமல் வெச்சிருக்க? வெயிட் குறை யட்டும்னு காத்துட்டிருக்கோம்!

twitter.com/SkSoundhar:
பேங்க்ல பணம் போடுறவன், வரிசையில் நின்னு கிட்டு இருக்கான்; கடன் வாங்குறவன், மேனேஜருக்கு எதிர்ல சொகுசா உட்கார்ந்திருக்கான்!