Published:Updated:

வலைபாயுதே V 2.0

வலைபாயுதே V 2.0
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே V 2.0

சைபர் ஸ்பைடர்

facebook.com/nelsonxavier08: மூன்று மாணவிகள் தற்கொலை செய்து இறந்துபோனதாகச் செய்திகள் சொல்லும் கள்ளகுறிச்சி அருகே உள்ள சர்ச்சைக்குரிய சித்த மருத்துவக் கல்லூரியின் அனுமதியை ரத்து செய்து எட்டு ஆண்டுகள் ஆகிறதாம். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இதை இப்போதுதான் சொல்கிறது!

எட்டு ஆண்டுகளில், இரண்டு கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. பலமுறை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். உயர் கல்வித் துறைச் செயலர், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மாற்றப்பட்டுள்ளனர். கல்வி நிலையம் என்ற அடிப்படையில் சலுகை மின்சாரக் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே அரசுக்கு வரிகள் செலுத்தப்பட்டிருக்கும். தீயணைப்பு, குடிநீர், வருவாய், பொதுப்பணி என இன்னும் நூற்றுக்கணக்கான அரசுத் துறைகளும், ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளும் அந்தக் கல்வி நிறுவனத்தோடு தொடர்பில் இருந்திருப்பார்கள்.

மூன்று பெண்களின் மரணம் தொடர்பாக, ஆயிரக்கணக் கானவர்களின் கைகளில் ரத்தக்கறை படிந்திருக்கிறது. SVS கல்லூரி முதல்வரை மட்டும் கைதுசெய்ததன் மூலம் இந்தப் பிரச்னையை மொத்தமாகக் கைகழுவிவிட்டிருக்கிறது அரசு.

வலைபாயுதே V 2.0

facebook.com/venkatesh.arumugam1: காந்தி இறந்த அன்று, `அவரைக் கொன்றவர் ஒரு முஸ்லிம்’ என வதந்தி எழுந்ததாம். ஆனால், நேருவும் படேலும்தான் அந்தத் தகவல் பரவாதபடி விரைந்து தடுத்தார்களாம்! # (என் மைண்ட்வாய்ஸ்) `நல்லவேளை... அப்ப ஃபேஸ்புக் இல்லை!’

facebook.com/VijendranRavi:
`சும்மாதானே இருக்க... போய் மிளகாய், மல்லி அரைச்சிட்டு வா.’ # நாட்டுல எத்தனையோ படிப்பு இருந்தும் நான் ஏன் சார் இந்த Engineering படிப்பைப் படிச்சேன்?

facebook.com/Muthuraa: `கரு.பழனியப்பனை கட்சியில் இருந்து தூக்காம, பழ.கருப்பையாவைத் தூக்குனதுக்கே ஒரு கட்-அவுட் வைக்கலாம்’ என்கிறார் குமார்!

facebook.com/gkarlmax: கால் சென்டர்ல `நாம சொன்ன வேலை சீக்கிரம் நடக்குதா?'னுதான் உலகம் முழுக்க செக் பண்ணுவான். `கால் சென்டரே நடக்குதா?'னு செக் பண்ணிப் பார்த்து பெருமைப்படுற சம்முவம் நாமதான்!

facebook.com/VijendranRavi:
`எதுவுமே நிரந்தரம் இல்லை’ என்ற வரிசையில் பரோட்டா மாஸ்டரும் கார் டிரைவரும் இணைகின்றனர். எவ்வளவு பண்ணாலும் தக்காளி பிச்சிக்கிட்டுப் போய்டுறானுங்க!

வலைபாயுதே V 2.0

twitter.com/g4gunaa : வர்றவன் பூராம் லெக்பீஸாவே கேட்டா, `பூரான் பிரியாணி’ தான்டா செய்யணும்!

twitter.com/sundartsp:  பாஸ்போர்ட் வாங்குறதைச் சுலபமாக்கிட்டு, ரயில் டிக்கெட் வாங்குறதைச் சிரமமாக்கிட்டாங்க!

twitter.com/tamilhumourjoke:
அப்பா ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல பையனை அடிக்கிறதை நிறுத்திட்டு... கல்யாணம் பண்ணிவெச்சுடுவார்!

twitter.com/mekalapugazh: 
`முடியை ஒட்ட வெட்டுப்பா' என்பதும், `சட்டையப் பெருசா தைப்பா' என்பதும் அந்தக் காலப் பொருளாதாரச் சிந்தனைகள்!

twitter.com/dineshsmc: நாட்டுக்கு நல்ல நேரம் மிக விரைவில் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் # கடைசியில் கிளி ஜோசியம் பார்க்கிற அளவுக்கு போயிட்டீங்களே தளபதி!

twitter.com/Writer_Samy:
அப்பளத்தை உடைச்சித்தான் சாப்பி டறோம். ஆனால் யாரும் உடைந்த அப்பளத்தை வாங்குவது இல்லை!

twitter.com/deebanece
: தேடலில்  கொடுமையானது... பஸ் ஸீட்டுக்கு அடியில் செருப்பைத் தேடுவது. # சார் கொஞ்சம் காலை நகர்த்துங்க!

twitter.com/chevazhagan1:
போனை எடுத்தா `ஹலோ’னுதானே சொல்லணும்... அதுதானேய்யா ஒலக வழக்கம்? எம் பொண்டாட்டி ஒருவாட்டிகூட `ஹலோ’ சொன்னதே இல்ல. எப்பப் பாரு `எங்க இருக்கீங்க?’னு கேட்குறா!

வலைபாயுதே V 2.0

twitter.com/maninilats : தனித்துப் போட்டியிடவும் தயார் - சரத்குமார்  # ஒரே ஒரு குருக்கள் வர்றார்... வழிவிடுங்கோ!

twitter.com/thoatta :
இயேசுநாதருக்குப் பிறகு கைய ரொம்ப நேரம் விரிச்சுவெச்சிருந்தது, இந்த பாண்டியா பய ஓவர் போடுறப்ப நின்ன அம்பயர்தான் # எத்தனை வைடு!

twitter.com/Itzmejaanu:
எல்லாம் வேண்டிக்கிட்டு கண்ணைத் திறக்குற துக்குள்ள பூசாரியைவிட்டு நமக்கே விபூதி அடிச்சிடுறார் கடவுள்!

twitter.com/Disisvki: 
இன்னமும் முட்டாய்தானா? ஒரு ஜிலேபி, மைசூர் பாகு அளவுக்காவது நாட்டை வளர்த்துவிடுங்கடா!

twitter.com/_blanktexts: `கரம் சிரம் புறம் நீட்டாதீர்’லாம்கூட திருக்குறள்தான்னு நம்பிட்டிருந்தேன்!

twitter.com/Thiru_navu: நாலு நண்பர்கள், பத்து சொந்தங்கள்... இவர்களையே சமாளிக்க முடியாதவர்கள், அரசுக்கு அறிவுரை வழங்க ஆரம்பித்துவிடுகிறார்கள்!

வலைபாயுதே V 2.0

twitter.com/sheik_twitts: பக்கத்து வீட்டுப் பொண்ணு முறுக்கு கேட்டாலும் தர மாட்டேங்குது. வாட்ஸ்அப் நம்பர் கேட்டாலும் தர மாட்டேங்குது.    # இப்டி இருந்தா எப்டி இந்தியா வல்லரசு ஆவும்!

twitter.com/MrMarmaYogi:  சும்மாவே ஊர் சுத்திட்டு இருக்கோமேன்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிய பெருமை திரு ஸ்டாலின், திரு மோடி இருவரை மட்டுமே சேரும்!

twitter.com/urs_priya :  நம்மைச் சுற்றியுள்ளவர்களின் கஷ்டங்களை எல்லாம் தெரிந்துகொள்ள ஓர் எளிய வழி... அவர்களிடம் ஓர் உதவி கேட்பது!