பிரீமியம் ஸ்டோரி

twitter.com/Itzmejaanu: பைக்ல போறப்போ போன் பேசறவங்களைப் பார்த்து, `மச்சி... உன் டாக் டைம் முடியப்போகுது’னு சொல்லணும்போல இருக்கு!

twitter.com/SettuOfficial: `யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் நண்பன்;  `இப்ப யாரடா லவ் பண்ற?’னு கேட்கிறவன் உயிர் நண்பன்!

வலைபாயுதே V 2.0

twitter.com/gokila_honey: ‘என் கட்சியை யாரும் உடைக்க முடியாது’ - அ.தி.மு.க-வுக்கு, சரத்குமார் சவால் # ராகவா... நீ பரோட்டா மாஸ்டர், கராத்தே மாஸ்டர் இல்லை! 

twitter.com/naiyandi: ரீசார்ஜ் செய்யக்கூட காசு இல்லை என்பதுதான் வறுமையின் அடையாளமாக மாறி வருகிறது!

twitter.com/aashiqali500: சாராயம் வித்த அரசுக்கே இவ்வளவு கடன்னா... குடிச்ச மக்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்?!

வலைபாயுதே V 2.0

twitter.com/im6adhana: ஆட்டோவின் பின்புறம் எழுதியிருக்கும் வாசகங்கள், கடந்துபோகும் சில மனிதர்களின் சூழ்நிலை சிக்கல்களுக்கு... பதிலாக, ஆறுதலாக அமைந்துவிடுகின்றன!

twitter.com/snake_tweetz:
`ஒழுங்காப் படிக்கலைன்னா, இன்ஜினீயரிங் சேர்த்துவிட்ருவேன்’னு புள்ளைங்களைப் பயமுறுத்தி வளர்க்க ஆரம்பிக்கும் காலம், வெகுதூரத்தில் இல்லை!

twitter.com/meenammakayal: `இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

twitter.com/vivika_suresh:
சினிமாவுலதான் ‘உன்னை எல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவான்டா’ டயலாக். ஆனா, வாழ்க்கையில ‘உன்னை எல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தி வருவாடா’தான்!

twitter.com/sikkandarbabu11: `உன் மொபைல் நம்பர் என்ன?’ என்பதில் ஆரம்பிக்கும் காதல், `இனிமே எனக்கு போன் பண்ணாதே!’ என்பதிலேயே முடிகிறது!

twitter.com/Sakthi_Twitz: பஸ்ல ஒரு பையன் தனியா ஏறினது குத்தமாயா? `இங்குட்டு மாறி உக்காரு... அங்குட்டு மாறி உக்காரு’னு பாடாப்படுத்துறாய்ங்க!

twitter.com/iam_brashu: உலகின் முதல் லிவிங் டுகெதர் கப்பிள், ஆதாம் ஏவாள்தான்!

twitter.com/thirumarant: அம்மாவை வீட்டைவிட்டு வெளியே கூட்டிட்டு வர தி.மு.க கோடிக்கணக்குல செலவு பண்ணவேண்டியிருக்கு!

வலைபாயுதே V 2.0

twitter.com/Babbuk3: ஆறு மாதக் குழந்தையோட டி-ஷர்ட்டைப் போட்டுட்டுத் திரியுற இந்த இந்திக்காரனுங்க, என்ன சொல்ல வர்றானுங்கனே புரியலை!

twitter.com/Lalithajeyanth:

நான்: வாவ்..! Rainbow பாருடா!
மகன்: நான் அப்பவே பார்த்துட்டேன்மா.
நான்: ஏன்டா என்கிட்ட சொல்லலை?
மகன்: சொன்னா, நீ rainbow-க்கு ஸ்பெல்லிங் கேப்ப.

வலைபாயுதே V 2.0

Whatsapp: ஒரு பெண்ணின் கனவில் பூதம் தோன்றி, “உனக்கு என்ன வேண்டுமோ... அதைக் கேள்!” என்றது.

“என் கணவர் முழிச்சுக்கிட்டிருக்கும் போதேல்லாம் என் மேலே கண்ணா இருக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர் வாழ்க்கையில் என்னைத் தவிர வேற எதுவுமே அவருக்கு முக்கியமா இருக்கக் கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் தூங்கும்போது நான் பக்கத்துல இல்லாமல் தூங்கவே கூடாது.”

“அப்புறம்..?”

“அவர் காலையில் எழுந்திருக்கும்போது என் முகத்துலதான் முழிக்கணும்.”

“அப்புறம்..?”

“அவர், நான் இல்லாம எங்கேயும் போகக் கூடாது.”

“அப்புறம்..?”

“எம்மேல ஒரு கீறல் பட்டாலும் அவர் வாடி வருத்தத்துல உறைஞ்சுபோயிடணும்.”

“அப்புறம்..?”

“அவ்வளவுதான்.”

பூதம், அந்தப் பெண்ணை ஸ்மார்ட்போனாக மாற்றியது!

facebook.com/saravn24:
இப்ப எல்லாம் சைட் அடிச்சா, முறைக்கிறதுக்குப் பதிலா மொபைல் எடுத்து அவங்க ஆளுகூட கடலைபோட ஆரம்பிச்சுடுறாங்க! #TechnologyDeveloped

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு