Published:Updated:

"இவன்தான் செய்தான்... இப்படித்தான் செய்தான்!" உடைத்துப் பேசலாமா தோழிகளே...?! #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

நமது நிருபர்
"இவன்தான் செய்தான்... இப்படித்தான் செய்தான்!" உடைத்துப் பேசலாமா தோழிகளே...?!  #SpeakUp #உடைத்துப்பேசுவேன்
"இவன்தான் செய்தான்... இப்படித்தான் செய்தான்!" உடைத்துப் பேசலாமா தோழிகளே...?! #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள் (79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. 2007-ல் இந்திய அரசு ஐ.நா-வுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. எனில், இந்த எண்கள் எல்லாம் யாரோ அல்ல, நாம்தான். இப்படி திக்கெங்கும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும் அவற்றைப் பேசாமல் மறைத்த, பேசத் தயங்கிய பெண்களின் தலைமுறைகள் முடியட்டும். 

"இவன்தான் செய்தான்... இப்படித்தான் செய்தான்!" உடைத்துப் பேசலாமா தோழிகளே...?!  #SpeakUp #உடைத்துப்பேசுவேன்

அவள் விகடன் மற்றும் சத்யபாமா யுனிவர்சிட்டி இணைந்து ஏற்பாடு செய்திருந்த #SpeakUp #உடைத்துப்பேசுவேன் சந்திப்பில் நடிகை அம்பிகா, வழக்கறிஞர் அருள்மொழி, நடிகை அதிதிபாலன், நடிகை அனுஹாசன், டாக்டர் ஷாலினி, நடிகை வாணி போஜன், சத்யபாமா யுனிவர்சிட்டியின் டீன் மரியஜீனா, இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அந்த நிகழ்வின் புரொமோ இந்த வீடியோவில். 

பஸ்ஸில் நீளும் கைகளை சமாளிக்க என்னிடம் இருக்கும் ஆயுதங்கள்... நூறு மெசேஜ்ல ஒரு மெசேஜ் இப்படித்தான் வருது.. உடைத்துப் பேசுகிறார்கள் இவர்கள்..

குட் டச்.. பேட் டச்செல்லாம் ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் சொல்லித் தருகிறீர்கள்? 16 வயது பாலம்மாவிடம் இருந்த சுயமரியாதை உங்களுக்கும் இருக்க வேண்டாமா பெண்களே? 

பொதுவெளியில் பேசத்தயங்கும் விஷயங்களை உடைத்துப் பேசிய இவர்களின் துணிச்சல் உங்களுக்கும் இருந்தால் பாலியல் குற்றங்களைப் பொசுக்கும் இந்தச் சிறு பொறியைப் பெரும் அக்னி பிரளயமாக மாற்றும் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். #SpeakUp என உடைத்துப் பேசுங்கள்! 

நீங்கள் உடைத்துப் பேச விரும்பும் விஷயங்களை இந்த இணைப்பில் சென்று பதிவுசெய்யுங்கள். https://www.vikatan.com/special/speakup/ உங்கள் ரகசியம் காக்கப்படும்

பேசி என்ன ஆகப்போகிறது என்கிறீர்களா, இதுவரை குற்றவாளிகளுக்கு அரணாக இருந்துவந்ததே அந்த எண்ணம்தானே. முதலில் அதைத் தகர்ப்போம். அதற்காகவே இந்தத் தளம். அதற்கு மட்டும்தானா, இல்லை. மனநல கவுன்சலிங் முதல் சட்டரீதியான நடவடிக்கைகள்வரை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். தன்னால் சக மனுஷிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலுக்கு வருந்தித் திருந்தும் ஆண்களின் மனமாற்றங்களையும் வரவேற்கிறோம்.