Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/mahesh.subramanian.180:

பெங்களூரின் முக்கிய வீதிகளில், அவ்வப்போது ஒரு நபர் பீட்சா மற்றும் மேக்ஸ் போன்ற பெரும் துணி நிறுவனத்தின் விளம்பரம் பதித்த, மின்விளக்குப் பொருந்திய பலகையை முதுகில் சுமந்து செல்வதைப் பார்க்க முடிகிறது. மார்கெட்டிங்குக்கு எத்தனையோ வழிகள் இருக்கும்போது, இப்படி எல்லாமா ஒரு மனிதனைக் காட்சிப்பொருள் ஆக்குவது? உட்கார்ந்து யோசிப்பார்கள்போல... புதுப்புது வழிகளைத் தேடி. என்றைக்கு உயிருள்ள மனிதனை resource என விளிக்க ஆரம்பித்தார்களோ, அன்றே அவனுக்கான சுயம் போனது!

twitter.com/sss_offl: இனிமேல் `Silence Please’னு போர்டு வைக்கிறதுக்குப் பதிலா, `WIFI பாஸ்வேர்டு’ எழுதிவெச்சா போதும்.குனிஞ்ச தலை நிமிரவே மாட்டாங்க!

twitter.com/naaraju: ஒரு கடையில, நாமதான் 'முதல் போணி'னு தெரிஞ்சா கடைக்காரய்ங்களைவிட நமக்குத்தான் அநியாயத்துக்குப் பதறுது!

twitter.com/Im_sme:  ஒரு நிமிஷ Gif வீடியோவையே forward பண்ணி பார்க்கிற அளவுக்குப் பொறுமை இழந்துபோயிருக்கோம்!

twitter.com/arattaigirl:  இனி சில நாட்களுக்கு பலரது உரையாடல்கள் இந்தவிதமாகத் தொடங்கும், `எப்படி இருக்கீங்க, வீட்ல எல்லாம் சௌக்கியமா, `கபாலி’ பாத்தாச்சா?'!

twitter.com/nithya_shre:  `அண்ணா’ எனச் சொல்லி பல கட்சிகள் வளர்ந்துள்ளன; பல காதல்கள் அழிந்துள்ளன!

twitter.com/mpgiri: எல்லாம் தெரிந்த பரமாத்மாவுக்கே தெரியாதது ஒன்று உண்டு என்றால், அது... இலையில் ஊற்றிய ரசம் எந்தப் பக்கம் செல்லும் என்பதுதான்!

twitter.com/MrElani:
வேட்டி கட்டிக்கிட்டு பைக் ஓட்டுறதைவிட மானம்கெட்ட பொழப்பு வேற எதுவும் இல்லை. `பாகுபலி’ தமன்னாவோட  துப்பட்டா மாதிரி ரெண்டு பக்கமும் பறக்குது!

twitter.com/srivishiva:
குழந்தையின் காய்ச்சலுக்கு, குடும்பமே துவண்டுவிடுகிறது!

twitter.com/twittornewton: திருநீறு கையில் வாங்கினால், கையைத் துடைக்கணும்னுட்டு டைரக்டா அர்ச்சகர்கிட்டேயே நெத்தியைக் காட்டிப் பூசச் சொல்லிவிடுகிறான் மகன். # strategy.

வலைபாயுதே

twitter.com/ChutiiPaiyan: ஒரு #selfie எடுக்கவே 99 போட்டோ டெலிட் பண்ணவேண்டியிருக்கு. அப்போ வாழ்க்கையில ஜெயிக்க எவ்வளவு விஷயங்கள அழிக்க வேண்டியிருக்கும்!

twitter.com/senthilgs81: தன் வீட்டைத் தவிர மற்ற எல்லா இடங்களும் குப்பைத்தொட்டிதான், நம்ம ஆளுங்களுக்கு!

twitter.com/skpkaruna :
நூறு வருஷங்கள் ஆகியும் இன்னமும் டெஸ்ட் மேட்ச் ரிக்கார்டுகள் செய்ய ஏதேனும் இருக்கு! #கோஹ்லிதான் வெளிநாட்டில் 200 அடித்த முதல் கேப்டனாம்!

twitter.com/navi_n:  `நாம் ஜெயிப்பது’, `எதிரி தோற்பது’ என வெற்றி இரண்டு வகைப்படும்!

twitter.com/teakkadai:கட்டும் சேலைக்கு மேட்ச்சாக, பெண்கள் தினமும் தங்கள் மொபைல் கேஸை மாற்றிக்கொண்டிருக்கும் வரை பூமி பூப்பூப்பதை நிறுத்தாது!

twitter.com/skpkaruna:  `அந்த மூன்று லாரிகளின்’ பதிவெண்களும் மோட்டார் பைக் எண்களாம் # அப்போ... பைக்ல அவ்வளவு பணத்தைக் கொண்டுபோயிருக்க முடியாதுனு கேஸை முடிங்கப்பா!

twitter.com/CGunaraja:

ஆசிரியர் : சீனப் பெருச்சுவர் ஏன் அதிசயங்களில் ஒன்று?

மாணவன்: ஏன்னா சைனாக்காரன் தயாரிப்பிலே அதுதான் சார்  ரொம்ப நாளா உருப்படியா இருக்கு!

twitter.com/twittornewton: `நம்மால் முடியாது’ என நினைப்பது தன்னம்பிக்கைத் துரோகம்!

twitter.com/iMaandiyar: டேய்... அது என்னங்கடா அடுத்தவன் காலை மிதிச்சுட்டு, உங்கள் கையில முத்தம் குடுத்துட்டுப் போறீங்க :(

வலைபாயுதே

twitter.com/chevazhagan1: டாஸ்மாக் பார்ல போன் வந்ததும் ஒருத்தன் தனியா போய்ப் பேசுறான்னா, போன் பண்ணது ஒண்ணு பொண்டாட்டியா இருக்கணும்; இல்ல மேனேஜரா இருக்கணும்!

facebook.com/navishsenthilkumar:


`தலைக்கு மேலே பிள்ளையைத் தூக்கக் கூடாது’ என பெரியவர்கள் சொல்லிவைத்தது எல்லாம் மடமை என நினைத்திருந்தேன். அது முற்றிலும் உண்மை மக்கா. அனுபவித்தவன்தான் சொல்லி வைத்திருக்கிறான். தலைக்கு மேலே தூக்கிப் பிடிக்கும்போது சரியாக வாயில் உச்சா போய்விடுகிறார்கள்!

facebook.com/VignaAchuthan:

``கவனிச்சீங்களா... டெரக்கோட்டா ஜூவல்லரி இப்ப ஃபேஷன் இல்ல... எல்லாம் சில்க் த்ரெட்தான் போடறாங்க.’’

``பட்டுப்புடவையில முன்ன மாதிரி மஸ்டர்ட் பார்டர் வர்றது இல்லைபோல.’’

``இப்ப புடவையை சாதாரணமா வாங்கிட்டு ப்ளவுஸை கிராண்டா தைச்சுக்கிறாங்க இல்லைங்க?’’

``ஐ.டி ஆசாமியைக் கல்யாணம் பண்ணிண்டா ஒரு நல்லது... நமக்கு முன்னாடி அவங்களுக்கு நரைச்சுடும்.’’

அவர்: ``ஏம்மா... எல்லாம் கவனிக்கிற, மேடையில பொண்ணு-மாப்பிள்ளையப் பார்க்க மாட்டியா? மண்டபம் மாத்தி வந்து உட்கார்ந்திருக்கோம்!''

facebook.com/raghavan.pa:

நாலாவது ரீல் ஓடும்போது நைஸாக ஏசியை நிறுத்தும் தியேட்டர்காரனைப்போல் நடுராத்திரி பவர்கட் செய்கிறான் மின்வாரியன்.

facebook.com/mani.pmp.5:

ஒரு கிராமம் நகர்மயமாதலின் முதல் படி, ஊரில் ஒரு காம்ப்ளெக்ஸ் கட்டுதலே!

வலைபாயுதே

facebook.com/VignaAchuthan:

நாய் வளர்ப்பவர்கள் தங்கள் அதீதப் பிரியத்தால், `ஜிம்மி, உங்கக்கா வந்திருக்கா பாரு' என்கிறார்கள், நாம் உள் நுழைந்ததும்.

facebook.com/uma.gowri.98:

அமைதிப்பூங்காவே இப்படியாக இருப்பின், ரண பூமி எப்படியாக இருக்கும்?

Whatsapp: ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதே மனைவிகள் மனநிலையை கெஸ்பண்ணலாமே!

‘‘ஏங்க... அத்தை சொன்னாங்க...’’

‘‘ஏங்க... உங்கம்மா சொன்னாங்க...’’