Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/loveguruchennairadiocity:

இன்று தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 80ஆயிரம் பேர் குரூப் 2 தேர்வு எழுதியதாகக் கேள்விப்பட்டேன். நண்பனிடம் கேள்வித்தாளை வாங்கி பார்த்தபோது அதிர்ந்துவிட்டேன். நகர ஆணையர், தொழிலாளர் நல ஆணையர் போன்ற பதவிகளுக்கான இந்தத் தேர்வுக்கும் செய்வினை, செயப்பாட்டு வினை போன்ற கேள்விகளுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் `செய்வினை கேள்விகளால்' இளைய சமுதாயத்துக்கு `செய்வினை' வைத்துக்கொண்டிருக்கப்போகிறோம்?

July 30, 2011-ல போட்ட ஸ்டேட்டஸ்; ஐந்து  வருஷத்துல எதுவுமே மாறல!

facebook.com/Kanmani.Pandiyan:

நான் தூங்கப்போறேன் = நான் mobile-ல game வெளாண்டுட்டு, face book பார்த்துட்டு, instagram-ல கொஞ்ச நேரம் இருந்துட்டு, youtube-ல videos பார்த்துட்டு, whatsapp-ல எல்லாரோட last scene updates பார்த்துட்டு, pinterest-ல கொஞ்சம் relax பண்ணிட்டுத் தூங்குவேன்!

Whatsapp:

பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுக்கு ஒழுங்கா சிரிக்கத் தெரியலை, நாமல்லாம் ரஜினி, கமல் நடிப்பைப் பத்தி அசால்டா விமர்சிக்கிறோம்!

facebook.com/vinayaga.moorthy.5070:

கொஞ்சம் அறிவா ஏதாச்சும் பேசினா, எங்கம்மா டக்குனு `எம் புள்ளையைக் கட்டிக்க எந்தச் சிறுக்கிக்குக் கொடுத்துவெச்சிருக்கோ’னு சாதாரணமா சொல்றாங்க. ஆனா, அந்தச் `சிறுக்கி'ங்கிற வார்த்தை செம லவ்லியா இருக்கேனு `Who is that சிறுக்கி?’னு கற்பனையில மூழ்க ஆரம்பிச்சுடுறேன்.

` `வரட்டும் சிறுக்கி’னு மாமியார் இப்பவே ரெடியாகுறாங்க'னு எங்கப்பா கமுக்கமாச் சிரிக்கிறார்.

சிறுக்கி, Is not a word... its an emotion!

facebook.com/jill.kamatchirajan:

பின்வரும் காட்சி சினிமாவில் வந்திருந்தால், நிஜ வாழ்வில் இப்படி நடக்கவே நடக்காதுனு நக்கலடிச்சிருப்பேன். டி.எம்.எஸ்-ஸில் இருந்து நண்பனை பிக்கப் செய்துகொண்டு, செம்மொழிப் பூங்கா போவதற்காக ஜெமினி பிரிட்ஜின் சக்கர வியூகத்தில் நுழைந்தேன். ஒரு வளைவில் `NO ENTRY'. இன்ஸ் வண்டியை நிறுத்தி, கேஸ் எழுத ஆரம்பித்தார். வண்டி டாக்குமென்டை எடுப்பதற்காக pleasure-ன் கருவறையைத் திறந்தேன். உள்ளே `சாதிக்க ஆசைப்படு' சைலேந்திரபாபு IPS எழுதிய புக்... இன்ஸ் என்னைப் பெருமிதமாகப் பார்த்தார். `நீ தன்னம்பிக்கை புக் படிக்கிற ஆசாமியா?'னு நண்பன் பார்த்தான். இந்த ரெண்டு மூட உலகங்களுக்கு நடுவே நான், என் காதலி முதன்முதலாக இந்தப் புத்தகம் வாங்கித் தந்த காலத்துக்கு காதல் இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்தேன் :-)))

facebook.com/senthil.nithil:

`நைட் 2 மணிக்கு முழிச்சுக்கிட்டு Online-ல என்னடா பண்ற... பேய்கூட Duty முடிஞ்சு போயிருக்குமே?'னு கேட்டா...

`உச்சாப் போக எந்திரிச்சேன்'ங்கிறான். வரவர உச்சாக்கூட Online-லதான் போறாங்க.

(`நீ என்ன பண்ணிட்டிருந்த அந்த நேரத்துக்கு?'னு கேட்கிறவன் ரத்தம் கக்கிச் சாவான்.)

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

facebook.com/suresh.kannan.1806:

ஒரு பத்திரிகை நிறுவனத்தின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி அவர்.இப்போது அவருடைய அலைபேசி எண் அவசரமாகத் தேவை. அவருடைய பழைய விசிட்டிங் கார்டுகளைத் தேடினேன். கிடைக்கவில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் இப்போதைய தொடர்பில் உள்ள இளநிலை அதிகாரியை அழைத்து ‘அவருடைய மொபைல் எண் கிடைக்குமா?’ என்றேன்.
அவர் சட்டெனச் சுதாரித்து ‘நான் டிராஃபிக்ல இருக்கேன். என்ன விஷயம் சொல்லுங்க?' என்றார். அவருடைய தற்காப்பு உணர்ச்சி புரிந்தது. நானும் இதை எல்லாம் கடந்தவன்தானே! தன்னைத் தாண்டி ஒரு விஷயம் நடப்பது என்பது ஓர் இழுக்குதானே... அவருடைய மதிப்பு என்னாவது?

சரி என்று இன்னொரு தொடர்பைப் பிடித்தேன். அவரும் இப்படியே ஏதேதோ சால்ஜாப்பு சொன்னார். இப்படியே ஐந்தாறு பரிவாரங்களைக் கடந்து ஒருவழியாக மூலவரின் தொலைபேசி எண்ணைப் பிடித்துவிட்டேன்.

உடனே இதை மொபைலில் சேவ் செய்துகொள்ள வேண்டும் என அவசரம் அவசரமாகச் சேமித்தேன்.

பார்த்தால் இந்தத் தொடர்பு எண், அவருடைய பெயரில் ஏற்கெனவே என் மொபைலில் இருந்தது. நீண்ட நாளாக தொடர்பில் இல்லாததால் உபயோகிக்கும் வாய்ப்பு இல்லை. அப்போதைய பதற்றத்தில் இது நினைவுக்கும் வரவே இல்லை.

ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடிய இடையனின் நவீன கதை இது!

facebook.com/jayreborn:

Pokemon Go விளையாட, தேவையான பொருட்கள்:

Power Bank 20,000 amph – 2
3G / 4G Data pack : 20 GB – 2
சாதா செல்போன் - 1
டார்ச் லைட் - 1
கைத்தடி + கொடி - 1
மண்வெட்டி, கடப்பாரை, பாண்டு - 1
சுத்தியல் - 1
குடை (அல்லது) ரெயின்கோட் - 1
கொசுவலை - 1
பாய்-தலைகாணி செட் - 1
`என்னை யாரும் தேட வேண்டாம்' காகிதக் குறிப்பு - 1

twitter.com/IamMrBoss: 
நம்மளைக் காதலிச்சப் பையன் நல்லா இருக்கணும்னுதான் பல பெண்கள், வீட்ல பார்க்கிற பையனையே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. நம்ம பசங்களுக்குத்தான் இது புரியலை!

twitter.com/Ulaganandha:
  ஹெட்போன்ல வலது இடது இருக்கா?! இந்த விஷயம் தெரியாம 25 வருஷம் வாழ்ந்துட்டோமே... ச்சே!

வலைபாயுதே

twitter.com/mekalapugazh:  `பாத்ரூம்'னு சொன்ன காலத்துல போனோமா... வந்தோமானுதான் இருந்தாங்க. `ரெஸ்ட்ரூம்'னு பேரை மாத்தினப் பிறகுதான் உள்ளேயே குடித்தனம் நடத்துறானுங்க செல்போனோடு!

twitter.com/Mayavi_:
வண்டி புக்கு, இன்ஷூரன்ஸ், ஹெல்மெட் எல்லாம் கரெக்ட்டா இருக்கும்போது போலீஸ் புடிச்சா, Homework முடிச்ச ஸ்கூல் பையன் மாதிரி சந்தோஷமா இருக்கு!

twitter.com/Kounter_twitts:
  காலேஜ்ல கட் அடிச்சு, கட் அடிச்சு வெளியே சுத்தப் போனதுக்கு, ஆபீஸ்ல வெச்சு ஓவர்டைமா வேலை வாங்குறாங்கப்பா!

twitter.com/RajendranRaina: 
மளிகைக்கடை அண்ணாச்சியிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தால் போதும், அப்படியே மேல தூக்கி காந்தி உள்ளே இருக்காரா... இல்லையானு பார்த்தப் பிறகே கல்லாவில் போடுகிறார்!

twitter.com/palanikannan04: ஒரு சட்டையை அயர்ன் பண்ணிக் கொண்டிருக்கும் சமயத்தில் மின்சாரம் நின்றுபோனால், மீதி சட்டையை அயர்ன் பண்ணுவதில் உள்ளது நமது சுறுசுறுப்பு!

twitter.com/iamVariable:
`பெரிய டிராஃபிக் ஜாமில், ஒவ்வொரு காரிலும் ஒருவர் மட்டுமே அமர்ந்தபடி `டிராஃபிக்கை கன்ட்ரோல் பண்ண, அரசு ஏதாவது பண்ணணும்' என ஸ்டேட்ஸ் எழுதுகிறார்கள்!

twitter.com/Piramachari:
சினிமாவுல சரக்கு, தம் அடிக்கிற சீன் வந்தா, `உடல் நலத்துக்குத் தீங்கு'னு போடுறான். கொலை பண்ற சீன் வந்தா... தீம் மியூஸிக்கைத்  தெறிக்கவிடுறான்!

twitter.com/sathik_twitz: ஒரு செகண்ட்ல கொலவெறி உண்டாக்குறவன்,  டிராஃபிக்கே இல்லாத ரோட்ல பின்னாடி இருந்து ஹார்ன் அடிக்கிறவன்தான்!

twitter.com/withkaran: கொஞ்ச நாள் முன்னாடி அங்கிள்ஸ் எல்லாம் செல்போன் பவுச் ஒண்ணு இடுப்பு பெல்டோடக் கட்டிக்கிட்டுத் திரிஞ்சாங்களே... அந்த ஃபேஷன் முடிஞ்சதா?!

twitter.com/vandavaalam:   செக்யூரிட்டியே ஏழு மொழி பேசுறான்னு சந்தோஷப்படுறதா, இல்லை... ஏழு மொழி தெரிஞ்சவன் செக்யூரிட்டியா இருக்கானேனு வருத்தப்படுறதா?

twitter.com/iam_v_jey
: இப்ப பாரதி இருந்து `காணிநிலம் வேண்டும்'னு பாடினார்னா... `எட்டையபுரத்துக்கு மிக அருகில்'னு எர்ணாக்குளத்துல ஒரு ஃப்ளாட்டை  அவருக்கும் வித்திருப்பானுங்க!

twitter.com/dheeviran: அஞ்சு ரூபா பேனாவை, கயிறு கட்டித் தொங்கவிட்ட ஸ்டேட் பேங்க்காரங்கதான், மல்லையாகிட்ட 5,000 கோடி ரூபாயை அனாமத்தா கோட்டைவிட்டாங்க!

twitter.com/karthekarna: எவனாவது சீரியஸா எழவு நியூஸ் சொல்லப்போறான். தாடையைத் தடவிக்கிட்டே ‘மகிழ்ச்சி’னு சொல்லிருவோமோனு பயமா இருக்கு. `கபாலி' ஃபீவர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism