Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/Ulaganandha: தூங்குறவன் மூஞ்சியில டார்ச் அடிச்சுப் பார்த்துட்டுப் போறாங்க ரயில்வே போலீஸ்... உஷாரா இருக்காங்களாம்!

twitter.com/minimeens: 20 நிமிஷமா பக்கத்து ஸீட்காரன் காதுல போனை வெச்சுட்டு சும்மாவே நிற்கிறான். `என்னடா?'னு கேட்டா, `வொயிஃப்கிட்ட பேசிட்டு இருக்கேன்'கிறான். #அடேய்ய்ய்ய்!

twitter.com/thoatta: யாரைப் பார்க்கப்போறப்ப, பர்ஸ்ல இருக்கிற பணத்தை அங்கங்க பேன்ட்ல ஒளிச்சு வெச்சுட்டுப் போறோமோ, அவனுங்கதான் நம்ம க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்!

twitter.com/soniyasonuzz:
பக்கத்து வீட்டு சின்னப்பய பொசுக்குனு `நல்லெண்ணெய்க்கு இங்கிலீஷ்ல என்ன?'னு கேட்டுட்டான். `Good Oil'னு சொல்லிச் சமாளிச்சுட்டேன்!

twitter.com/Kounter_twitts:
எதையும் எடுத்தோம் கவுத்தோம்னு இருக்காதீங்க. ஏனா, எடுக்கிறது கொதிக்கிற எண்ணெய்ச் சட்டியாக்கூட இருக்கலாம்!

twitter.com/Sandy_Offfl: எனக்குத் தெரிஞ்சு இந்தியாவிலேயே அதிகமா திருடுப்போன பொருள்னா, பைக்கைத் துடைக்க அதுல வெச்சிருக்கும் அழுக்குத் துணிதான்!

twitter.com/su_boss2: பஞ்சாயத்துராஜ் சட்டம் அமல்படுத்தியது யார்? - ஸ்டாலின் கேள்வி.# ஸ்டாலின் பேச்சை கொஞ்சநாள் தொடர்ந்து கேட்டா, ஈஸியா குரூப்-4 பாஸ் ஆகிடலாம் போல!

twitter.com/thoatta: ட்விட்டர்ல கமென்ட் போட டயலாக்கு இல்லாம தவிக்கிறாங்க, வா... தலைவா வா... # Vadivelu is Back!

twitter.com/Mithrasism:
வேலை பிடிக்கலைன்னா உடனே வேலையைவிடுற தைரியம்தான்... பொருளாதாரச் சுதந்திரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலைபாயுதே

twitter.com/udaya_Jisnu: பஸ்ஸ்டாப்களின் பெயர்களில் மட்டும் நிற்கின்றன, ஆலமரமும் புளியமரமும்!

twitter.com/archanabaluit: `டிபன் சாப்பிடுறியா இல்லே... நாய்க்குப் போட்டுடவா?'னு கேட்கிறாங்க. `நம்ம டிபனை நாய்க்குப் போடுறாங்களா... நாய் டிபனை நமக்குப் போடுறாங்களா?'னு கன்ஃபீஸாகுது!

twitter.com/BoopatyMurugesh:
இந்தியா பெயரை ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் தேடும்போது மக்கள் நலக் கூட்டணிக்கு சப்போர்ட் பண்ணிட்டு எலெக்‌ஷன் ரிசல்ட் பார்த்த அதே ஃபீல்.

facebook.com/altappu.vinoth

``பையனை எல்.கே.ஜி சேர்த்திருக்கோம். எட்டு லட்சம்தான் ஃபீஸ். ஆனா, டெய்லி ஹார்ஸ் ரைடிங் கோச்சிங் இருக்கு. கடவுள் புண்ணியத்துல எப்படியோ ஸீட் கிடைச்சுருச்சு.''
``பொண்ணு நல்லா இருக்கா. ஃபிப்த் ஸ்டாண்டார்டு போகப்போறா. சம்மர் லீவுங்கிறதால ஐ.ஐ.டி கோச்சிங் க்ளாஸ் போயிருக்கா.''

``பொண்ணா... இருக்கா சார். எவ்ளோ நம்பிக்கை வெச்சோம். கடைசியில ப்ளஸ் 2-வுல 1,193தான் எடுத்தா. அதுக்குப் பக்கத்து காலேஜ்ல பி.எஸ்ஸி., பிசிக்ஸ்கூட கிடைக்கலை. இப்போ பி.ஏ ஹிஸ்ட்ரிதான் படிக்கிறா. நல்ல வரன் வந்தா சொல்லுங்க சார்.''

சராசரி இந்தியக் குழந்தையோட life cycle இதான். இதுல விளையாட்டு, ஒலிம்பிக், பதக்கம்கிற வார்த்தைக்கு இடமே இருக்காது. திடீர்னு இந்தியா பதக்கம் வாங்கலை, செலெக்‌ஷன் கமிட்டி சரியில்லை, ஒரே பாலிடிக்ஸ்னு பொலம்பினா கிடைச்சிருக்குமா? பக்கத்து வீட்டுக் குழந்தை ஒலிம்பிக்ல நிறைய தங்கம் வாங்கணும், நம்ம வீட்டுக் குழந்தை நல்லா படிச்சு கல்யாணத்துல நிறைய தங்கம் வாங்கணும்னு எல்லாரும் நினைச்சா இப்படித்தான்!

வலைபாயுதே

facebook.com/saravanan.chandran.77

ஆபத்தான போக்கு ஒன்று, சமீப காலமாகத் தீவிரமாக மையமிட்டு இருக்கிறது. இதைப் பற்றி ஊடகங்கள் பேச வேண்டும்.  கடந்த சில மாதங்களில் சில நண்பர்களுக்காக வெவ்வேறு துறைகளில் வேலைவாய்ப்புக்காகப் பேச நேர்ந்தது. அத்தனை பேரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். சொல்லி வைத்தாற்போல நான் கொண்டுபோன அத்தனை விண்ணப்பங்களையும் நிராகரித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், வயதாகிவிட்டது. `35 வயதுக்கு மேல் இருப்பவர்களை வேலைக்கு எடுக்க வேண்டுமா?' என நிர்வாகம் சிந்தித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்தக் கதி என்றால், 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் கதி என்ன என்பதைச் சிந்திக்கும்போது அச்சமாக இருக்கிறது. இந்தத் துறைதான் என்று இல்லை... மீடியா, மருத்துவம், ஆட்டோமொபைல், மென்பொருள், ஏன் சாதாரண கடைகள் என எல்லா இடங்களிலுமே இந்தப் போக்கு தலைவிரித்து ஆடத் தொடங்கியிருக்கிறது. சென்னை மட்டும் அல்லாமல் இந்தப் போக்கு இரண்டாம் தர நகரங்களிலும்கூட பெருகிவருகிறது. கொஞ்சம் பெரிய ஹோட்டல்களில் சப்ளையர்கள் வேலைக்குக்கூட வயதானவர்களை எடுப்பது இல்லை என கொள்கை முடிவு வைத்திருக்கிறார்கள். வயதானவர்கள் எல்லாம் செத்தா போக வேண்டும் என யாரிடமும் நம்மால் கேட்கவும் முடியாது என்கிற துர்பாக்கிய நிலையில்தான் இருக்கிறோம்.

கால் காசானாலும் கவர்மென்ட் காசு என சுதாரிப்பாக இருந்தவர்களையும் அந்த வாய்ப்பு கிடைத்தவர்களையும் விட்டுவிடுங்கள். ஆனால், தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த வயதானவர்கள் பலர் வேலையை இழந்திருக் கின்றனர். இப்படி தமிழகமெங்கும் வேலை கிடைக்காமலும் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமலும் தனித்து வாழும் 50 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களின் எண்ணிக்கை பெருகியபடி இருக்கிறது. 2012-ல் எடுத்த புள்ளிவிபரம் ஒன்றின்படி ஆண்டு ஒன்றுக்கு மக்கள்தொகை வளர்ச்சி 11 சதவிகிதமாக இருந்தாலும் முதியவர்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. புள்ளிவிவரங்களின்படி முதியவர்கள் நிறைந்த தேசம் இது. ஆனால், முதியவர்களுக்கான தேசமாக இது இல்லை. சொந்த தொழில், சேமிப்பு என விழித்துக்கொள்ளவேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால் நரை கூடி கிழப்பருவம் எய்தும் போது வேலை தேடித் தேடி `அய்யோ!' என செத்துப்போகவைத்துவிடுவார்கள். அதை `ஸோ வாட்?' எனத் தோளைக் குலுக்கியபடி இந்தச் சமூகம் அமைதியாக வேடிக்கையும் பார்க்கும்.

facebook.com/kkarthikeyan:

காலையில் என் குடும்பத்தை என் மாமனார் வீட்டுக்கு அனுப்ப, ரயில் நிலையம் சென்றிருந்தேன். பயணிகள் ரயில் என்பதால் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றேன். நீண்ட வரிசை நகரவே இல்லை. `என்னடா' என எட்டிப்பார்த்தால், பத்து வருஷத்துக்கு முன்னர் எழும்பூர் ரயில் நிலையத்தில் பார்த்த அதே காமெடி. டிக்கெட் விநியோகிக்கும் நபர் ஒரே ஒரு விரலில் கீபட்டன்களைத் தேடித் தேடி டைப் பண்ணிக்கொண்டிருந்தார். `அடப்பாவிகளா, இன்னும் நீங்க மாறவே இல்லையா?' அடுத்த கவுன்ட்டர் மாறலாம்னு பார்த்தா, அங்கேயும் இதே கூத்து. எது எதற்கோ தேர்வு வைக்கிறீர்கள். கவுன்ட்டரில் உட்காரவைப்பவர்களுக்கு டைப்ரைட்டிங் தேர்வில் பாஸ் பண்ணிருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதியை வெச்சா குறைஞ்சாபோயிடுவீங்க?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism