Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/araathu.officialpage:

சென்னை விமான நிலைய வளாகத்தில் `மெட்ராஸ் காபி ஹவுஸ்’ என ஒரு கொட்டாய் இருக்கிறது. அங்கே காபியின் விலை ரூபாய் 50. நான் ஒரு காபி வாங்கிக்கொண்டிருந்தேன்.

நாகரிகமான ஒரு முதியவர், வெள்ளையும் சொள்ளையுமாக கையில் 100 ரூபாய் வைத்துக்கொண்டு, எனக்குப் பின் நின்றுகொண்டிருந்தார். ஆளைப் பார்த்தாலே வெளியூர்க்காரர் எனத் தெரிந்தது. வெளிநாட்டில் இருந்து வரும் யாரையோ வரவேற்க வந்திருப்பார்போல.

100 ரூபாய் கொடுத்து ``ஐந்து காபி’’ என்றார்.

``ஒரு காபி 50 ரூவாங்க...’’

``என்னது 50 ரூபாயா?’’ எனக் கேட்டபோதே அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது. 100 ரூபாயைத் திரும்ப எடுத்துக்கொண்டே, அவருடன் வந்தவர்கள் அருகே சென்று ``ஒரு காபி 50 ரூபாயாம்!'' என்றார்.

இதில் என்ன விசேஷம் எனில், பெரும்பாலானோர் வீம்புக்காக 250 ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பார்கள் அல்லது அடிபட்ட பாவனையுடன் 100 ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றிருப்பார்கள். ஆனால், இந்த முதியவர் காபி குடிக்காமலேயே காபி குடித்த உற்சாகத்துடன், `ஒரு காபி 50 ரூபாயாம்!’ என முகம் மலரச் சிரித்துக்கொண்டே சொன்னதுதான் விசேஷம்.

அவரின் அந்த நக்கல் சிரிப்பு, மொத்த சென்னைக்குமானது!


facebook.com/jv.balaji :
உசேன் போல்ட்டைவிட ஃபாஸ்ட்டான ஒரே ஆள் இதைச் சொல்றவர்தான்...

*MutualFundInvestmentsAreSubjectTo MarketRisk.ReadTheOfferDocuments CarefullyBeforeInvesting*

facebook.com/sowmya.ragavan: ஏரியால சுதந்திர தின விழா... `இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாதான் என்ன?' பாட்டு ஓடுது. வெள்ளைக்காரனைப் பிரிஞ்சு பசலை நோய்ல வாடுறாய்ங்கபோல!

twitter.com/krajesh4u:
இந்த ஆஸ்பத்திரிலயே ஒரு wifi இருக்கு# இருங்கடா மொத்த பில்லையும் இதுலையே கழிக்கிறேன் :-/

twitter.com/naaraju:
ஆலமரத்தடி மூணு சீட்டு எல்லாம் ஆண்ட்ராய்டு ஆப் ஆகிப்போச்சு... பிரகாஷ்ராஜ், ராணாவை எல்லாம் வெச்சு விளம்பரம் பண்ற அளவுக்கு!

twitter.com/bri2o:
பஸ் வந்தாச்சு... இது ஓசூர் தாண்டுறதுக்குள்ள விமல் படம் நாலு ரிலீஸ் ஆகிடும்போல!

twitter.com/naaraju:
இன்னும் கொஞ்ச நாள்ல ஐஸ்க்ரீம்லையும் உருளைக்கிழங்கைப் போட்ருவாய்ங்கபோல இந்த `இந்தி'யர்கள்!

twitter.com/kumarfaculty: `யாராவது ஒருத்தர் பேனா கொடுங்கப்பா’ என்று வகுப்பில் கேட்கும்போது,  ஓடோடி வரும் எல்லா குழந்தைகளையும் பின்னாளில் சமூகம் எப்படி மாற்றிவிடுகிறது?!

twitter.com/mujib989898:  முப்பது நாட்கள் உழைத்து வாங்கும் சம்பளத்துக்கு, மூன்று நிமிடங்களில் செலவுக்கணக்குச் சொல்லிவிடுகிறார்கள் வீட்டு அம்மணிகள்!

வலைபாயுதே

twitter.com/aruntwitz: குப்பை போடுவதும், தொப்பை போடுவதுமே நாட்டின் தலையாயப் பிரச்னைகளாக இருக்கின்றன!

twitter.com/chevazhagan1: கொஞ்சமாவது நல்லவனாக மாற முயற்சி செய்யும்போது எல்லாம், `நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்ட’ என்கிறது வாழ்க்கை!

twitter.com/idumbaikarthi: பிறந்த நாள்னா `HBD'றாய்ங்க; இறந்த நாள்னா `RIP'றாய்ங்க... அவ்வளவு சுருக்கம சொல்லிட்டு அவசரமாப் போய் எந்த ஃப்ளைட்டப்பா பிடிக்கப்போறீங்க?

twitter.com/Sweetie_Girl__  Son- : ``காக்கா கத்தினா விருந்தாளிங்க வருவாங்களா அப்பா?’’

``ஆமாம்டா’’

``எப்போ திரும்பிப்போவாங்க?’’
 
``உங்க அம்மா கத்தினா...’’

twitter.com/ashokcommonman : `ஜோக்கர்’ படம் ஆரம்பக் காட்சியில் ஒரு மணல் லாரி கிராமத்தைவிட்டுப் போகுது.  ஒரு ஆள் அதே ஊருக்குள்ள தண்ணி கேன் போடப்போறார். குறியீடு... குறியீடு!

twitter.com/vandavaalam:
  `இவன் நம்மகூட காலேஜ்ல படிச்சானா... இல்ல ஸ்கூல்ல படிச்சானா?’னு யோசிக்கிற அளவுக்கு இறந்த காலம் மறந்துப்போச்சு :-/

twitter.com/ThowfiqS:  நானும் என் மகனை எப்படியாச்சும் பாட்மின்டன் ப்ளேயரா ஆக்கிடணும்னு பார்க்கிறேன், இன்னும் கல்யாணம் பண்ணிவைக்க மாட்றானுக!

twitter.com/ kunnathurarumug : குரங்கில் இருந்து வந்திருப்பான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அநேகமாக குரங்கு இனத்தில் இருந்து அடித்துத் துரத்தப்பட்டு வந்திருப்பான் # மனிதன்!

twitter.com/erode_kathir:
வேப்பமரத்திலும் எறும்பு சுவைக்க ஏதோ ஒன்று இருக்கிறது!

twitter.com/arattaigirl:  `பால் சோறுல பிஸ்கட் போட்டு ஊட்டியும், குழந்தை சாப்பிட மாட்டேங்குது’னு திட்டுது ஒரு அக்கா. பாப்பாவுக்குக் கெட்டவார்த்தை தெரியாதுனு சந்தோஷப்பட்டுக்கோ!

twitter.com/dhanalakshmirs: ஒரு கடல்சங்கைக் கண்டவுடன் காதில் வைத்துக் கேட்கும் அளவுக்கு, வாழ்வின் சுவாரஸ்யங்கள் மீதம் இருக்கின்றன.

வலைபாயுதே

twitter.com/BoopatyMurugesh: ஒரே வாரத்தில் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் ஓட்டுக்குப் பணம் தர முடிந்த தேசத்தில், ஒன்றரை வருடமாக எல்லோருக்கும் ஆதார் கார்டு தர முடியவில்லை :-)

twitter.com/Shanthhi:  சில தோழிகளின் குடும்பப் பிரச்னைகளைக் கேட்கும்போது ரொம்பப் பாவமா இருக்கு... அவங்க குடும்பத்துல இருக்கிறவங்களை நினைச்சு!

facebook.com/grsurendar.nath:

காட்சி - 1:

ப்ளஸ் டூ படிக்கும் என் மகனை நான்தான் தினமும் டூ வீலரில் பள்ளிக்கு அழைத்துச்சென்று விடுவேன். ஒருமுறை என்னை ஒரு டி.வி.எஸ் எக்ஸ்.எல் ஆள் ஓவர்டேக் செய்ய, உடனே என் மகன், `ஒரு எக்ஸ் எல் உங்களைப் போட்டுட்டுப் போறான். நீங்க அவனைப் போடுங்க’ என்றான். பொதுவாக சினிமாக்களில் அடியாட்கள் ஒருவனைக் கொல்வதற் குத்தான், `அவனைப் போட்டுடு… அவனைத் தூக்கிடு’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். `இது என்ன மொழி?’ என்று முதலில் சற்று விழித்த நான் பிறகு, ‘அவனை ஓவர்டேக் செய்யுங்க’ என்பதைத்தான் தற்காலத் தமிழில் சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, நான் எக்ஸ் எல்-லைப் போட்டேன். இவ்வாறு தினமும் அவனுடன் வண்டியில் செல்லும்போது அவன், `அந்த யமஹாவைப் போடுங்க’, `அந்த கால் டாக்ஸியை அடிங்க’, `அந்த புல்லட்டைத் தூக்குங்க’ என்று சியர் பாய்ஸ்போல் என்னை உற்சாகப்படுத்துவான். ஒருமுறை நான் ஒரு ஹீரோ ஹோண்டாவைப் போட்டபோது, `வாவ்… செமையா போட்டீங்க... செமையா போட்டீங்க…’ எனப் பாராட்டியபோது, எனக்கு மேனி எல்லாம் சிலிர்த்துவிட்டது.

காட்சி-2

ஒருநாள் என் மகன், தன் நண்பனுடன் போனில் பேசிக்கொண்டிருந்தான், `டேய்… நான் அவனை பிசிக்ஸ்ல போட்டேன். அவன் என்னை மேத்ஸ்ல போட்டுட்டான்டா…’ என்றவுடன் எனக்குப் பயங்கரக் குழப்பமாகிவிட்டது. பிறகு எனது செல்ஃப் இன்ட்டெலிஜென்ஸைப்(?) பயன்படுத்தி யோசித்தபோது, `மார்க் அதிகமாக வாங்குவதைத்தான் இப்படிச் சொல்கிறான்’ என்று புரிந்தது, இப்போது குவார்ட்டர்லி எக்ஸாமில் எவனையோ போடவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.

இந்த ஜென் Z பசங்கள் வார்த்தைகளில்தான் எவ்வளவு வன்முறை! எனக்கு பயமாக இருக்கிறது.

facebook.com/priya.sivashankaran: சென்டர் ஸ்டாண்டு போட்டா பைக்குக்கு நல்லது. சைட் ஸ்டாண்டு போட்டா செருப்புக்கு நல்லது!

facebook.com/Vidhya Vijayaraghavan

At hotel, eating roast.

Me: ``அண்ணா... இட்லிப்பொடி தர்றீங்களா?’’

Waiter Anna: ``பொடி இல்லம்மா.’’

Me: ``அன்னிக்கு வந்தப்ப இருந்துதே.’’

Anna: ``இங்க அது இல்லவே இல்லம்மா.’’

My friend: ``அண்ணா! சாப்பிட வேறு என்ன இருக்கு?’’

Anna: ``ஊத்தப்பம், நெய் ரோஸ்ட், ஆனியன் ரோஸ்ட், பொடி ரோஸ்ட்...’’

My friend: ``ஆங்... அந்தப் பொடி ரோஸ்ட்டுக்குப் போடுற பொடியை, அப்படியே எங்களுக்குக் கிண்ணத்துல போட்டுக் கொடுங்கண்ணா.’’

Anna - :/