Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/kaviintamizh: அன்பின் கேரளா அரசே... சிறுவாணியில் டேம் கட்டுவது இருக்கட்டும். முதல்ல நல்லதா நாலு காலேஜ் கட்டுங்க # உங்க ஊர் பசங்க கோயம்புத்தூரே கதின்னுதானே கிடக்கானுங்க.

twitter.com/chitram_twitts : வெளிப்படையாகப் பேசுவது என்பது, ஒருவரைப் பாராட்டும்போதுதான் அதிகம் விரும்பப்படுகிறது!

twitter.com/dhanalakshmirs:  ஐஸ்க்ரீம் பார்லர் என்பது... சமயங்களில் பரிகார ஸ்தலம்.

twitter.com/gpradeesh: 
`வாய்ல தூக்கம் வருதுங்கிறான் கதிர்... கொட்டாவி'யாம் #மழலைமொழி

twitter.com/Ulaganandha: தண்ணி வரலைன்னா விவசாயிகளுக்கு மட்டுமே பிரச்னைங்கிற மாதிரி பேசுறோமே... நாம எல்லாம் எதைத் தின்போம்? #SaveTNPeople

twitter.com/amas32:  செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஒரே ஒரு கவலை என்னவென்றால், அதன் அதிகபட்ச ஆயுள் நமக்கு முன்னரே தெரிந்துவிடும் :(

twitter.com/Boopaty Murugesh :  முன்னவாச்சும் திருட்டு வி.சி.டி வர கொஞ்ச நேரமாகும். இப்பலாம் தியேட்டர்ல உட்கார்ந்து Facebook Liveல வந்துறாய்ங்க.மார்க்கு நல்லாருடா!

twitter.com/Karthiist: 
முன்னர் தங்கி இருந்த வீட்டை எத்தனை முறை கடந்தாலும், பார்க்காமல் கடக்க முடியவில்லை ;-)

twitter.com/hanitha312: நம் பெற்றோருக்கு வயதாவதைப் பார்ப்பதற்கே ஒரு தைரியம் வேண்டும்.

twitter.com/kumar faculty:
காவிரி, தண்ணீர் பிரச்னைதான் என்றாலும் பற்றி எரிகிறது.

twitter.com/snake_tweetz : சின்ன வயசுல  ரெண்டு ரூபாவோடு கடைக்குப் போனா,     நிறையப் பொருட்களோடு வெளியே வரலாம். இப்போ அப்படி இல்லை. எல்லா கடைகள்லயும் சிசிடிவி கேமரா வெச்சிருக்காங்க.

twitter.com/Timekeeper19: மீட்டிங்னா முடிவெடுக்கக் கூடுறது இல்லை... எடுத்த முடிவைச் சொல்றதுக்குக் கூட்டுறதுதான் மீட்டிங்னு மாத்திட்டாங்க!

twitter.com/twittornewton:  `டொக்காயிட்டீங்க'னு யாராவது சொன்னாக்கூட `அப்ப, ஒரு காலத்திலே உச்சத்திலே இருந்திருக்கிறோம்'னு நினைச்சுக்கிறதுதான் தன்னம்பிக்கை.

twitter.com/revathy_rr: ``புஜ்ஜிம்மா... இங்கே வந்து ஒரு முத்தா வாங்கிட்டுப் போங்களேன்!''

``ஜிட்டு அம்மா... இருங்க வர்றேன். பாப்பா வேலையா இருக்கேன்ல!  # அம்மாவைப் பெற்ற மகள்!

twitter.com/manipmp:
டீச்சர் தலைக்குக் குளித்த அன்றும், வாத்தியார் ஷேவிங் செய்த அன்றும் அடி கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை #missmyschool

வலைபாயுதே

twitter.com/kumarfaculty: பள்ளிப் பருவத்தில் இறை நம்பிக்கையை உருவாக்கியதில் தேர்வுகளும் ஒரு காரணம்!

twitter.com/Rama Periasamy: `அதை எடுத்துட்டு வா'னு அப்பா சொல்ல, `எது?'னு அம்மாவுக்கு மட்டும் புரியும் ரகசியம்தான் காதல்.

facebook.com/suresh.kannan.1806:


உங்களுக்கு பொழுது சுவாரஸ்யமாகப் போகவேண்டும் என்றால், இதை முயன்று பாருங்கள்.

வெள்ளிக்கிழமை அன்று வந்த படத்தை முதல் நாளே எப்படியாவது பார்த்துவிடுங்கள். சமயங்களில் ஆபத்தான விஷயம்தான். இருந்தாலும் செய்துவிடுங்கள். ஆயிற்றா?

இப்போது அடுத்தடுத்த நாட்களில் அந்தப் புது திரைப்படத்தைப் பற்றி, அந்தப் படக் குழுவினர், பல்வேறு சேனல்களில் காம்பியர்களின் ‘டாமில்’ அலப்பறையுடன் உரையாடுவதை ஒன்றுவிடாமல் கவனியுங்கள்.

படத்தில் வந்த நகைச்சுவைக் காட்சிகளைவிட இது அதிபயங்கர நகைச்சுவையாக இருக்கும்.

உயிரைப் பணயம்வைத்து ஒருமுறை இந்தச் சாகசத்தை முயன்றுபார்க்கலாம்.