Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/skpkaruna: ஒரு குங்குமப்பொட்டுக்காரர், டி.வி நேரலையில் `கோவை, குஜராத்தாக மாறும்' என்கிறார். இவங்கதானே, `குஜராத் ஒரு சொர்க்க பூமி'னு சொல்லிட்டு இருந்தது?

twitter.com/manipmp: வீட்டில் உள்ள எல்லோரும் நம்மைக் கவனிக்க வேண்டும் என்றால், `எவர்சில்வர் பாத்திரத்தைக் கீழே போட்டாலே போதுமானது!'

twitter.com/Dhrogi: ஒருவரின் அதீத இயல்பும் சிரிப்பும் உள்ளத்தின் தனிமையை அப்பட்டமாகக் காட்டிவிடுகின்றன.

twitter.com/deena7831: மனதை ஒரு`முகம்'படுத்துவது காதல்!

twitter.com/Aruns212: வெளியூர் போய்விட்டு வந்தவன் சொன்னான், `ஊரே மாறிடுச்சு' என்று. அவனைப் பார்த்து ஊர் சொன்னது, `ஆளே மாறிட்டான்' என்று.

twitter.com/thoatta: சைக்கிள்ள எட்டு, பைக்ல எட்டு, ஏன்... கார்லகூட எட்டு போட்டுப் பார்த்திருக்கேன். ஆனா, சிரிக்கிறப்ப வாய்ல எட்டு போடுறது கீர்த்தி சுரேஷ்தான்.

twitter.com/mekala pugazh: கூடவே அழுது விடுவதும், ஆறுதல் சொல்லும் ஒரு வழிதான்.

twitter.com/thirumarant:
ஹாலிவுட்ல நடிக்கப் போயிக் கிட்டு இருந்தவரைக் கூப்பிட்டு, சர்ஃப் வாங்கிட்டு வரச் சொல்லி யிருக்கார் பிரபுசாலமன். #தொடரி

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar: டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிராஃபி சேனல் எல்லாம் மிருகங்களைப் பார்த்தாவது மனிதன் திருந்தட்டும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப் பட்டவையோ!?

twitter.com/g4gunaa: குழந்தைகளை அடிப்பதைவிட பெரிய வன்முறை, அடித்த பிறகு வீறிட்டு அழும் குழந்தைகளை ``மூச்...சத்தம் வெளிய வரப்பிடாது'' என மிரட்டுவது.

twitter.com/Modern_tamizhli: ஒரு porn star-ஐ செலி்பிரிட்டியா ஏத்துக்குற மனம்... கற்பழிக்கப்பட்ட பெண்ணை மனுஷியாக்கூட ஏத்துக்காத உலகில் புரட்சி பற்றி பேசுவது முட்டாள்தனம்!

twitter.com/mekalapugazh:  டி.வி என்பது, வயதானவர்களின் ஊடகமாகிவிட்டது.இளைஞர் களின் ஊடகம், இணையம் மட்டுமே என்றாகிவிட்டது.

twitter.com/VG100000: நமக்கு நடக்காத வரை எந்த விஷயத்தையும் எவ்வளவு புரிய வைத்தாலும் புரியாது.

twitter.com/bellarykishore: இவ்வளவு பெரிய கம்பெனியே என் ஒருத்தனை நம்பித்தான் ஓடுற விஷயம், மேனேஜர்கிட்ட லீவு கேட்கிறப்பதான் தெரியுது.

வலைபாயுதே

twitter.com/manu mechster: ``காங்கிரஸுக்கு தோல் வியே இல்லை.'' #ஈ.வி.கே.ஸ் இவனுங்க ஒரு தனி உலகத்துல வாழ்ந்துட்டு இருக்கானுங்க போல!


facebook.com/Sowmya Ragavan:

எதுக்கு எல்லாம் சுருக்குனு கோபம் வந்ததோ, அதை எல்லாம் இப்ப மிகச் சுலபமா சிரிப்போடுக் கடக்கப் பழகியாச்சு. ஆனா, அது பக்குவமா... விரக்தியானுதான் தெரியலை.

facebook.com/Aruna Raj:


ஆறு மாசத்துக்கு ஒருக்கா வந்து புரொஃபைல் பிக்சர் மட்டும் மாத்திட்டுப் போறவங்க என்னத்துக்கு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வேற குடுக்கிறீங்க? என்ன வேணும் உங்களுக்கு எல்லாம்?