பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/வெ. பூபதி: நெஞ்சுரம் கொண்டவர்க ளையும் கலங்கவைத்து விடுகிறது குழந்தையின் ஜுரம்!

facebook.com/jv.balaji: கூரை மேல சோறு போட்டா காக்கா வருதோ இல்லையோ, வீட்டுக்காரன் வர்றான்... அசிங்கமா திட்டிக்கிட்டு. #வாடகை வீடு அட்ராசிட்டீஸ்!

facebook.com/rasanaikkaaran: நான் வளர்ற காலத்துல `அப்பா மூட்அவுட்ல இருக்கார். ஏதும் கேட்டு வாங்கிக் கட்டிக்காதே'னு எச்சரிக்கை செய்வார் அம்மா. இப்ப, `பாப்பா மூட் சரியில்லை. அவகிட்ட பேச்சு குடுக்காத'னு தங்ஸ்கிட்டேருந்து எச்சரிக்கை வருது. ஒரு குடும்பத் தலைவருக்கு நாட்டுல மரியாதை இல்லியா?!

வலைபாயுதே

facebook.com/venkatesh.arumugam1: திருட்டுத் தனமா லவ் பண்றவன், லவ்வரோடு தியேட்டருக்குப் போய் படம் பார்க்கிறான். ஊரறிய கல்யாணம் பண்ணவன், குடும்பத்தோடு திருட்டு வி.சி.டி-யில் படம் பார்க்கிறான்!

twitter.com/mokrish:  இந்த டச் போனில் படித்ததில் பிடித்ததை `வெட்டி'னால் அதை வேறு இடத்தில் ஓட்டும் வரை எல்லா சொற்களும் விரல் நுனியில் இருப்பதுபோல் ஒரு ஃபீலிங்.

twitter.com/gowtwits:
புலம்புறதுக்கு ரெண்டே காரணங்கள்தான். நமக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்க மாட்டேங்குது? நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது?

twitter.com/Aruns212:  தனியாக வீட்டில் இருக்கும்போது, டிஸ்கவரி சேனல் பார்ப்பவனை விடவா சிறந்த யோக்கியன் இந்த உலகில் இருந்துவிடப்போகிறான்!?

வலைபாயுதே

twitter.com/Jvs2020:  சில சம்பவங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்... அது உங்களுக்கு தீர்க்கமான சில முடிவுகளைக்கூடக் கொடுக்கலாம்!

twitter.com/mrithulaM:
பேசாமல் முறுக்கிக் கொண்டிருக்கும் கணவனைப் பேச வைப்பது சுலபம், முக்கியமான பொருளை ஒளித்துவைத்தால் போதும்!

twitter.com/withkaran:
டிஸ்ப்ளே பிக்சரில் ஜிகினா வேலை காட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு, நூறு நாள் சேலை மற்றும் டப்ஸ்மாஷ் யுவதிகளின் வருகை அடிவயிற்றில் புகைச்சலைக் கிளப்பியிருக்கும்!

twitter.com/ThePayon:
உலகிலேயே மிகச்சிறியது... ஞாயிற்றுக்கிழமை!

twitter.com/Tparavai: 
எங்க அம்மாகூடச் சேர்ந்து சீரியல் பார்த்து ரொம்பக் கெட்டுப்போயிட்டா வெண்ணிலா.ஏதாச்சும் தப்பு பண்ணினா, காலில் விழுந்து `மன்னிச்சுடுங்க'னு அழறா... # அவ்வ்!

வலைபாயுதே

twitter.com/naaraju: ``என்ன மாப்ளே... மழை தூறுது. செல்போனை நோண்டிக்கிட்டே வர்றீங்க... நனைஞ்சுடப் போகுது!’’ # தப்பித் தவறிகூட உன்னையப் பார்த்துரக் கூடாதுனுதான்யா!

twitter.com/sathyathetruth:  நல்ல ட்விட்ட 140-க்குள்ள கொண்டுவர்றதுக்கு, `அந்நியன்’ பிரகாஷ்ராஜ் மாதிரி எல்லாம் யோசிக்கவேண்டியிருக்கு #அகூம்பதம், அந்தகூபம், கூபமந்தாஆ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு