Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

twitter.com/@udanpirappe :  விஜய் மல்லையா மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுப்போன தொழில்​ முனைவர் - ஜெயமோகன். # அப்போ நாங்கல்லாம்... வெற்றி​அடைந்த பிச்சைக்காரர்களா?

facebook.com/vtkaviarasan: பெண்களுக்கு ஸ்கூட்டி ஸ்டார்ட் பண்ண முடியாதபோது, கண்ணில் படுகிறவர்கள் எல்லோரும் அண்ணன்கள் ஆகிறார்கள்!

twitter.com/@Itz_rajez : அப்பாவிடம், தன் கடைசிக் காலம் வரை மழலையாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள் பெண் குழந்தைகள் ;-))

twitter.com/@Lekhasri_g: நீங்கள் தேடும்போது நான் கிடைக்கலைன்னா, தொலைஞ்சுட்டேன்னு நினைச்சுடாதீங்க. சாப்பிட்டுட்டு இருப்பேன்; இல்லைன்னா தூங்கிருப்பேன்!

facebook.com/sridevi.mohan.7169: அன்று படிக்காத பெண்கள் கருத்து சொல்லும்போது, `படிக்காத கழுதை எல்லாம் பேச வந்துட்டுது!' என்பார்கள். இப்போது படித்த பெண்கள் பேசினால், `படிச்சத் திமிரில் பேசறியா?'னு கேட்கிறாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்!

twitter.com/@Eakalaivan: தன்னை நிராகரிப்பவரின் அன்பை எப்படியாவது பெற்றுவிடத்தான் அனைவரும் மெனக்கெடுகிறார்கள்!

twitter.com/@udanpirappe: ஸ்கூல் ஃபீஸ் கட்டிட்டுத் திரும்புறப்போ, `குழந்தைக்கு வீட்டுல நல்லா சொல்லிக்கொடுங்க'னு சொல்லி அனுப்புறாய்ங்​களாம். #அடேய்... அதை நாங்க சொல்லணும்டா!

வலைபாயுதே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

twitter.com/@Dhrogi: தேடும் இடத்தில் ஒளிந்துகொள்வதே ப்ரியத்தின் பெரும் சுவாரஸ்யம்!

twitter.com/@Kozhiyaar:  உலகத்தையே மாற்ற வேண்டும் என்று புறப்பட்ட போராளிகள், 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை மாற்ற முடியாமல் திரும்பி விட்டனர்!

twitter.com/@Baashhu: முன்னர் எல்லாம் சினிமாவை வெச்சு `லொள்ளு சபா'னு பண்ணினாங்க, இப்ப லொள்ளு சபாவைத்தான் சினிமாவா பண்றாங்க.

facebook.com/radha.manalan: மக்கள் பணம் எடுக்கும் அவசரத்தில், கடந்த ஒரு வாரக் காலமாகத் தவறவிட்ட சில முக்கிய நிகழ்வுகள்...

`நாகினி' விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிப் போகிறது. ஷ்ரேயாவுக்கும் ஹீரோ மீது காதல் வந்திருச்சு. இது ஷிவன்யாவுக்குத் தெரிஞ்சிருச்சு. நாகமணி யாரிடம் போகப்போகுதுன்னு ஒரே பதற்றம்!

`கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் ப்ரியாவுக்குப் பதில் மாடல் சைத்ரா ரெட்டி. ப்ரியாவின் அபிமானிகள், இதைத் தாங்கிக்கப்போறாங்களா இல்லை `சைத்ரா’வுக்கு மாறிடப்போறாங்களா?!

`பிரியமானவள்' சீரியலில் இன்ஸ்பெக்டர் கிரி மறுபடியும் பழிவாங்கக் கிளம்பிவிட்டார்!

`வாணி ராணி' சீரியல் முடியும் தருணத்துக்கு வந்துவிட்டது. ராதிகா தீர்க்கவேண்டியது இன்னும் இரண்டே பிரச்னைகள்தான். மற்றவை எல்லாம் solved!