Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/venkatesh.arumugam1: ஒரு கிலோ மட்டன் 550 ரூபாயா?! அடேய்... அம்பானிக்கு அபராதமே 500 ரூபாய்தான்டா!

facebook.com/Kanmani.Pandiyan:  `நான்தான் உன் ஒரிஜினல் அப்பா - அம்மா'னு யாராவது கேஸ் போட்டா, எங்க அப்பா - அம்மா `ஆமாம்'னு உடனே என்னை எல்லாம் அவங்ககிட்டயே குடுத்துடுவாங்க!

facebook.com/gkarlmax:
இது நம் வாழ்வின் மிகச் சிக்கலான ஒரு காலகட்டம். இதை எதிர்கொள்ள ஒரே வழி முகநூல், டி.வி, செய்தித்தாள்... இவை மூன்றையும் மூடிவைத்துவிட்டு, பக்கத்து வீட்டு ஆயாவுடன் பழங்கதை பேசலாம். அவர் அப்படித்தான் கடந்த 80 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிம்மதியாக இருக்கிறார்!

twitter.com/skpkaruna: பழைய 500, 1,000 ரூபாய்க்கு டீசல் உண்டு. டோல்கேட் சார்ஜ் வேறு இல்லை. இங்கே ஒருத்தன் டீசல் போட்டுக்கிட்டு குறுக்கும் மறுக்குமாப் போய்க்கிட்டே இருக்கான்!

twitter.com/Kannan_Twitz:
தலைவரே, எவ்வளவோ தடை போடுறீங்க. அப்படியே... ஃபிரிட்ஜ்ல ரெண்டு நாளுக்கு மேல சாம்பாரோ, தோசை மாவோ வெச்சு உபயோகிக்கக் கூடாதுனும் ஒரு தடை போடுங்கோ... புண்ணியமாப்போகும்!

வலைபாயுதே

twitter.com/CreativeTwitz: பக்கத்துல இருக்கும் மூதேவி, பாஸ்வேர்டைப் பார்த்திருவானு ஜெட் வேகத்துல பாஸ்வேர்டைப் போட்டு,

இதுவரைக்கும் பத்து தடவை `இன்கரெக்ட் பாஸ்வேர்டு'னு வந்திருச்சு!

twitter.com/san_officl: அடேய் ஹாஃப்பாயில்ஸ்... வண்டி திருடுறதுல ஒரு லாஜிக் இருக்கு. வண்டி துடைக்கிற துணியைத் திருடுறீங்களே, இது என்னடா லாஜிக்?

twitter.com/nithya_shre:
`அடுத்த மாசம் சம்பளம் வந்த உடனே, ஒரு ATM மெஷின் வாங்கிரணும்'. கூட்டத்துல நிக்க மிடிலடா சாமி!

twitter.com/manipmp:
கையில் கொஞ்சம் காசு இருந்தால், நீதான் அதற்கு முதலாளி. ஏ.டி.எம்-மில் காசு இருந்தால், அதுதான் உனக்கு முதலாளி!

twitter.com/naiyandi: தைரியம் இருந்தா `100 புடவைகள் மட்டும் வெச்சுருக்கலாம்’னு சட்டம் கொண்டுவந்துபாருங்க, பார்க்கலாம்!

வலைபாயுதே

twitter.com/palanikannan04: குழந்தைகள் ஹோம்வொர்க் செய்வதைப் பார்த்திருக் கிறீர்களா? கடமைக்குச் செய்துகொண்டே கடமையில் தவறாமல் செய்வர்!

twitter.com/bommaiya:
`
சரவணன் மீனாட்சி'ல வர்ற மீனாட்சிக்குப் புதுசா இத்தனை புருஷன்தான் வரணும்னு அப்படியே ஒரு லிமிட் கொண்டுவாங்க ஆபீஸர்ஸ்!

twitter.com/karunaiimaLar: அப்படியே `ஒவ்வொருத்தரும் இவ்வளவு கடன்தான் வெச்சிருக்கணும். மிச்சத்தை கவர்மென்ட் ஏத்துக்கும்'னு சொல்லிட்டீங்கன்னா, புண்ணியமாப்போகும் நியாயமாரே!

twitter.com/Piramachari: இந்தியாவில் கிட்டத்தட்ட 50 லட்சம் ஜோசியக்காரனுங்க இருக்காங்க. அதில் ஒருத்தனுக்குக்கூடவா தெரியவில்லை 500, 1,000 ரூபாய் ஒழிக்கப்போறாங்கன்னு!

twitter.com/joseph1087jo : `என்னதான்டா வேணும்?'னு கேட்கிற காதலிகிட்ட, `நீதான் வேணும்'னு சொல்லிப்பாருங்க...  10 கீர்த்திசுரேஷோட வாயை மொத்தமாப் பார்க்கலாம்!

twitter.com/CreativeTwitz: `படம் போட்டு எவ்வளவு நேரமாகுது ப்ரோ?’
`இப்பதான் தேசிய கீதம் முடிஞ்சது பாஸ்!’

twitter.com/MrMarmaYogi: இனிமேல் லேண்ட் விக்கிறவங்க `ஏ.டி.எம்-க்கு மிக அருகில்'னு கூவ ஆரம்பிச்சுடுவாங்களே. அதை நினைச்சாத்தான்...

twitter.com/Endhirapulavan: நம்மகிட்ட சும்மாவே கிடக்கிற ஒரு பொருள், யாராச்சும் வந்து கேட்கும்போது மட்டும் ரொம்ப முக்கியமான பொருளா மாறிடுது. #நிதர்சனம்!

twitter.com/pradeesh_1291:
எல்லார்கிட்டயுமே ஒருத்தன் நல்லவன்னு பேர் எடுத்தா, அவனைவிட அயோக்கியன் உலகத்துல வேற எவனும் இருக்க மாட்டான்!

twitter.comKannan_Twitz: தமிழின் சிறப்பு எந்த அளவுன்னா, ஒரு பொண்ணு நம்மை தமிழ்ல `மாமா'னு கூப்பிட்டா சந்தோஷப்படுவோம். அதுவே ஆங்கிலத்துல `uncle'னு கூப்பிட்டாக் கடுப்பாகிடுவோம்!

Whatsapp: 

ஆசிரியர்: உலகம், ஒரு நாடக மேடை. அதில் நாமெல்லாம் நடிகர்கள்.

மாணவன்: அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்.