Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/suguna.diwakar: ‘சசிகலாவுக்குப் பின்னால் மக்கள் சக்தி இருக்கிறது’ என்கிறார் தா.பாண்டியன். ஊழல் வழக்கில் ஜெயலலிதா உள்ளே போனபோது அவரை ‘மக்கள் முதல்வர்’ என அழைத்தார்கள். இப்போது ‘சின்ன அம்மா’ சசிகலாவுக்கு எதிராக ‘மக்களின் சின்ன அம்மா’ என தீபாவை விளித்து, அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டுகிறார்கள். பதிலுக்கு ‘மக்களின் சித்தப்பா’ என நடராசனுக்கு, சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டலாம். இதுவரை ‘புரட்சி’ என்ற வார்த்தைதான் தமிழ்நாட்டில் அசிங்கப்பட்டது. இப்போது ‘மக்கள்’ என்ற வார்த்தையும் சிக்கிச் சீரழிகிறது. பாவம் மக்களே!

வலைபாயுதே

facebook.com/Music Santhosh: மகிழ்ச்சி மக்களே! (இயக்குநர் பரதன், சந்தோஷ் நாராயணனுடன் விஜய்)

facebook.com/Franklin Alexander: `புயலே புயலே சுத்திவரும் புயலே பதினெட்டு வயசு புயலே...’ எனக் கிளுகிளுப்பா பாட்டு எழுதியவர் யாருப்பா? அவரைக் கொஞ்சம் வெளியே வரச் சொல்லுங்க. ஆனா, முடிக்கிறப்ப `ஐயோ... ஐயையோ'னுதான் முடிச்சிருக்காப்ல!

facebook.com/ramesh.ram.7165: அவங்க என்னடான்னா `இட்லி சாப்பிட்டார்’, `பொங்கல் சாப்பிட்டார்’னு கிளப்பிவிட்டாங்க. இவங்க என்னடான்னா ` `பாட்ஷா’ பார்த்தார்’, ` `பாகுபலி’ பார்த்தார்’னு சொல்றாங்க. அது என்ன ஹாஸ்பிட்டலா... இல்ல வேறு எதுவுமா?

வலைபாயுதே

twitter.com/Sweetie_Girl_:

கணவன்: லேப்டாப்பில் என்ன பாஸ்வேர்டு குடுத்திருக்க?

மனைவி: என் பிறந்த தேதிதான்.

கணவன்: கிராதகி... இப்ப கேட்கவும் முடியாது; லாக்இன் பண்ணவும் முடியாதே!

twitter.com/meenammakayal: இத்தனை வருஷ வாழ்க்கையில் சலிக்காத ஒண்ணு இருக்குன்னா அது சோறுதான்!

twitter.com/karuthu_ganesan:  உப்புமா சாப்பிட்டவன் கொஞ்சம் வசதியானதும், காய்கறி போட்டு ட்ரை பண்ணினதுதான் கிச்சடி உருவான கதையாக இருக்கும்!

twitter.com/cirppan: நேர்மையாக இருந்து சாதித்துக் காட்டுவதைவிட, நேர்மையாக இருப்பதே சாதனையாக இருக்கிறது!

வலைபாயுதே

 facebook.Com/Dhanush:  விஐபி-கள் கூட்டணி (கஜோல் மற்றும் செளந்தர்யாவுடன் தனுஷ்)

twitter.com/JanuShath: ஏதோ ஓர் எண்ணத்துல `சாஞ்சாடம்மா சாஞ்சாடு’னு பாடிட்டேன். தூங்கினவ எழுந்து உட்கார்ந்து சாஞ்சாடுறா # அவ்வ்வ்!

twitter.com/indiavaasan: உணர்வுகளை முழுமையாகக் காட்சிப்படுத்தும் சொற்கள் வசப்படுவது ஒரு வரம்!

twitter.com/maanniiiiiii: நாய் சாப்பிட்டால் `பொற’, நாம சாப்பிட்டால் `வர்க்கி’. அதையே பிரிட்டானியா கம்பெனிக்காரன் பேக் பண்ணி விற்றால் `ரஸ்க்’. இவ்வளவுதான் சார் வாழ்க்கை!

twitter.com/ivanganeshk_s: கடைசிக் கரண்டி தோசைமாவு வரைக்கும் அம்மா சொல்லும் ஒரே வார்த்தை # இன்னொரு_தோசை!

twitter.com/JenniferBlessy:
தெளிவான முடிவுகள் சில செருப்படிகளுக்குப் பின்னரே எடுக்கப்படுகின்றன. என்ன... அதை டீசன்ட்டா `அனுபவம்’ என்கின்றனர் :)

twitter.com/CreativeTwitz:
சோப்பு நுரைகளை உடைத்தும், பலூன்களை உடைக்காமலும் விளையாட வேண்டும் என்பது, இயல்பாகத் தெரிந்திருக்கிறது குழந்தைகளுக்கு.

வலைபாயுதே

facebook.com/Indian Hockey:  ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ்! (இந்திய ஜூனியர் ஹாக்கி அணி)

twitter.com/sivakannivadi: `ஸ்வச் பாரத்’ முதல் கட்டமாக ஏ.டி.எம் மெஷின்களில் அமலாகிறது!

twitter.com/ Chaintweter:  நல்லது பண்ணினா கைதட்டாத எந்தச் சாமியும் கெட்டது பண்ணினா  கண்ணைக் குத்தாது!

twitter.com/Kozhiyaar: பிள்ளைகளுக் காகத்தான் உழைக்கிறோம் என்பதை, பிள்ளைகளுக்குத் தெரியாமலேயே உழைத்துக்கொண்டிருக்கிறோம்!

twitter.com/Aruns212:
பஸ்ஸில் ஏறியதும் டிக்கெட் எடுக்குறாங்களோ இல்லையோ, முதல்ல கையில் மொபைலை எடுக்குறாங்க!