Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/​poopoonga:
ஓ.பி.எஸ்-ஸை, முதலமைச்சரா மதிக்கிறது ஸ்டாலின் மட்டும்தான்போல.

​twitter.com/​sundartsp: `கொண்டாடுற அளவுக்கு நான் வொர்த் இல்லைடா'னு ஒவ்வொரு புது வருடமும் ஒரே மாதத்தில் சொல்லிவிடுகிறது.

​twitter.com/​sss_offl: பைக்/கார் ஓட்டத் தெரியும்னு பந்தா காமிச்சா, ரொம்ப நாள் கழிச்சுதான் தெரிய ஆரம்பிக்குது, நம்மள டிரைவரா யூஸ் பண்றாங்கன்னு ::-((

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

                                facebook.com/SRK: பாலிவுட் பாட்ஷாஸ்! (குடும்பத்தினருடன் ஷாரூக்கான்)

twitter.com/​manipmp: விருப்பமான பாடல் எல்லாமே பக்கத்து வீடுகளில்தான் ஒலிக்கும்.

twitter.com/​sundartsp: ஏ.டி.எம்-மில் பணம் எடுத்த பிறகு, வரிசையைப் பார்க்கும் சுகமே தனி.

​twitter.com/​manipmp: மிகவும் குழப்பமான பெயரில் மருந்தின் பெயர் இருந்தால், `ஸ்டாக் இல்லை'னு சொல்லிடுறாங்க லோக்கல் மருந்துக்கடையில். எஸ்கேபிசம்!

​twitter.com/​saathaan_: இந்த நகரத்தின் எல்லாக் கொண்டாட்டங் களுக்குப் பின்னும் வெறும் குப்பைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

​twitter.com/​sashi16481: மொதல்ல என்ன நோய்னு கண்டுபிடிக்க, பல்ஸ் செக் பண்ணுவேன்.

இப்போ எல்லாம் 2,000 ரூபாய்க்கு சில்லறை மாத்த வந்திருக்காங்களான்னு பர்ஸை செக் பண்றேன்.

வலைபாயுதே

twitter.com/​manipmp: சேனல் மாற்றும்போதுகூட, பொதிகையில் நல்ல நிகழ்ச்சி ஓடியது கிடையாது.
தனியாருக்குப் பலியான முதல் அரசு எலுமிச்சைப்பழம்.

​twitter.com/​meenamdu:
அழகைக் கூட்ட பியூட்டி பார்லர் போற மாதிரி, அன்பைக் கூட்ட அம்மா வீட்டுக்குப் போகணும்.

​twitter.com/​mekalapugazh: பெரும்பாலான நல்ல புத்தகங்கள், ஒரு சினிமா டிக்கெட்டின் விலையில்தான் இருக்கின்றன. ஆனாலும், விற்பனையில் சாதனை ஏதும் இல்லாதது வருத்தமே.

twitter.com/manipmp: வியர்வையில் ஒட்டிய சட்டையை, காற்று வந்து பிரிக்கும்போது உணரும் மெல்லிய அதிர்வு பேரின்பம்.

வலைபாயுதே

              facebook.com/VIP2: ஷூட்டிங்... ஸ்டார்ட்டிங்
(தனுஷுடன் சமுத்திரக்கனி மற்றும் செளந்தர்யா)

​twitter.com/​_Mynaah_ : என்னிடம் பேசாதே என்றால், என்னைக் கொஞ்சு என்று அர்த்தம்.

twitter.com/​rajaa_official: `போராடும் புதியதொரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம்' என்ற சிறு புன்னகையோடு இந்த வெற்றியைக் கடந்திருப்பான் மக்கள் தலைவன் #தோனி.

twitter.com/​manipmp: சாப்பாட்டைக் கேட்டால் அப்படியே தூக்கிக் கொடுக்கும் குழந்தைதான், சாக்லேட்டில் பாதி கேட்டால் முறைத்துவிட்டுப் போகிறது.

facebook.com/Murali Kannan: தோல்வி அடைந்தவனின் ஞாயிற்றுக்கிழமைதான் எவ்வளவு மோசமானதாக இருக்கிறது!

குழந்தைகளின் பழுப்பேறிய சீருடைகளைத் துவைக்கும்போது அடுத்த மாதமாவது புதுச் சீருடைகள் வாங்கித் தர வேண்டும் என வருந்தவைக்கிறது.

பக்கத்து வீட்டுக் கறிக்குழம்பு வாசனை வராமல் சாளரத்தை அடைக்கவைக்கிறது.

நீண்ட நேரம் மணி ஒலிப்பதாகத் தோன்றும் ஐஸ்க்ரீம் வண்டி விரைவாகக் கடந்துவிட வேண்டுமே எனப் பதறவைக்கிறது.

மாலை வேளைகளில் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சைக்கிள் ஓட்டுவதை, பிள்ளைகள் ஏக்கத்துடன் பார்ப்பதைச் சகிக்க வேண்டியிருக்கிறது.

`எந்தப் புள்ளியில் இணையுடன் சண்டை தொடங்குமோ' எனப் பதைபதைப்புடன் இந்த நாள் விரைவாகக் கடந்துவிடாதா என எண்ணவைக்கிறது.
சாக்கு சொல்ல முடியாமல் விசேஷங்களில் கலந்துகொண்டு அவமானப்படவேண்டி இருக்கிறது.

இந்த வாரமும் நோயுற்ற பெற்றோரைச் சென்று சந்திக்க முடியவில்லையே என, வேதனைப் படவைக்கிறது.
இத்தனை பிரச்னைகளையும் மறக்க வைத்து விடும் திங்கள்கிழமையே போற்றி... போற்றி!

facebook.com/Nelson Xavier:
மனம் விரும்பிய வேலை, மீளவே முடியாத போதை!