Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/Kozhiyaar: வளரும் வரை அக்காவின் தியாகமும், வளர்ந்த பிறகு அண்ணனின் தியாகமும் ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல!

twitter.com/minimeens: எல்லாத்தையும் மேலே ஒருத்தன் பார்த்துட்டேதான் இருக்கான்கிறதை, சில வீடியோ பார்க்கிறப்ப நம்பத்தான்வேண்டியிருக்கு!

twitter.com/kalasal: முகம் தெரியாத நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட, முகம் தெரியாத எதிரிகள் இருக்கிறார்கள் என்பதுதான் இணையத்தின் சுவாரஸ்யமே!

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/Kozhiyaar :  `என் கணவர் என்னை நல்லா பார்த்துக்குறார்' என்பதற்கு, `நான் என்ன சொன்னாலும் கேக்குதுபா அந்த லூஸு' எனப் பொருள்கொள்ளவும்.

twitter.com/twittornewton:  படிக்கும்போது வீட்டில் அரசியல், சினிமா பேசியது இல்லை. ஆனால், இப்போது தந்தையிடம் இருந்து லேட்டெஸ்ட் மீம்ஸ் வாட்ஸ்அப்பில் வருகிறது. #ஸ்மார்ட்போன்

twitter.com/aroobii_:
பகடி செய்வதின் மூலம், அவசர அவசரமாகக் குரூரங்களைக் கடந்துவிடவே சமூக வலைதளங்கள் உங்களைப் பழக்குகிறது என்பதை எப்போதேனும் யோசித்திருக்கிறீர்களா?

வலைபாயுதே

twitter.com/kalasal: சசிகலா கும்பிடுற மாதிரி இருக்க, போட்டோஸ் எல்லாமே `கோபால் என்னை மன்னித்துவிடுங்கள் கோபால்'ங்கிற மாடுலேஷன்லயே இருக்கு.

twitter.com/BoopatyMurugesh:  தமிழ்நாடு மீனவர்களை, தமிழ்நாடு காவல் துறையிடம் இருந்தே காப்பாற்ற முடியலை. இதுல எப்படி இலங்கை ராணுவத்திடம் இருந்து எல்லாம் காப்பாத்துறதோ தெரியலை.

twitter.com/NamVoice:
அன்று களத்தில் இருந்து சுடச்சுட வந்த வீடியோ எல்லாம் மாஃபிங்காம். ஒரு வாரம் கழிச்சு போலீஸ் வெளியிடுற வீடியோ எல்லாம் ஆதாரமாம்.

வலைபாயுதே

twitter.com/kalasal: நீங்கள் உங்களை யாரிடம் எல்லாம் நிரூபித்துக்கொண்டிருக் கிறீர்களோ, அவர்களிடம் எல்லாம் தோற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.

twitter.com/aroobii_:
தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தை, `ஐயோ பாவம், துரோகம் செய்யும் அளவுக்கு என்ன வெறுமையோ' எனப் பரிதாபப்படும் அளவுக்குச் சிலரைப் பக்குவப்படுத்திவிடுகிறது இந்த வாழ்வு.

twitter.com/g4gunaa: சீப்பை ஒளிச்சு வைச்சாச்சு. இனிமே கல்யாணம் எப்படிப் பண்றீங்கன்னு பார்த்துர்றேன்டான்னு யோசிச்சு, மெரினாவுல போராட்டம் பண்ணத் தடை போட்டிருக்காங்கபோல ;)

twitter.com/ikrthik: இருசக்கர வாகனத்தில் முன்னமர்த்துகையில், மகளின் தலை சாலை மறைக்கிறது, இப்படித்தான் தெரிந்துகொள்கிறேன் அவள் வளர்ந்துவருவதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism