Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

twitter.com/kumarfaculty: சாமத்தில்தான் தெரிகிறது நகரத்துச் சாலைகளின் உண்மையான அகலம்!

twitter.com/manipmp:
இங்கிலீஷ் நியூஸ்பேப்பர் படிக்கும்போது, `படம் பார்த்தது போதும். எந்திரிங்க... கூட்டணும்’ எனச் சொல்கிறாள் மனைவி # வாழ்க்கை சில நேரங்களில் அவமானகரமானது!

twitter.com/RealMan_Naan: தான் கெட்டவன் என ஒப்புக்கொள்பவர்கள் மீது விமர்சனங்கள் திணிக்கப்படுவது இல்லை!

twitter.com/indiavaasan: வட இந்தியர்கள் போல் உடையணிந்த மணமக்களைப் பார்க்கும்போது குடுகுடுப்பைக்காரர்கள் ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

twitter.com/amuduarattai: மருத்துவமனைகளின் பிரமாண்டம், நம்பிக்கைக்குப் பதிலாகப் பயத்தையே தருகிறது!

வலைபாயுதே

twitter.com/jeytwits: `Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?' என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!

twitter.com/gani2071990: பல்சரும் ஸ்கூட்டியும் பக்கத்துப் பக்கத்துல நிற்கும்போது லவ்வர்ஸ் மாதிரியே தெரியுது!

twitter.com/skpkaruna: கோஹ்லி என்னும் கிளியை வளர்த்து, ஆஸி என்னும் பூனையிடம் தந்துவிட்டனர். படுபாவிங்க... இனி ஒவ்வொரு றெக்கையா பிச்சுப்போடுவானுங்க!

twitter.com/tparavai: வீட்டுல நடந்த ஒரே சம்பவத்தை அம்மாவும் மனைவியும் தனித்தனியா என்கிட்ட சொல்லும் போதெல்லாம் `விருமாண்டி’ படம் பார்க்கிறமாதிரி இருக்கு # EPIC

வலைபாயுதே

www.facebook.com/Karthi PS: குடை பிடித்துப் போகாதவர்கள்... மழை பிடித்துப் போகிறார்கள்!

twitter.com/Mohammed Mastha:
தண்ணீர் எடுக்க விதித்த தடையை நீக்கியது நீதிமன்றம் # இப்ப எல்லாரும் மீத்தேனை விட்டு, தாமிரபரணி பக்கம் போயிருவாங்க. நமக்கு வேலை ஈஸியா முடிஞ்சுடும்!

facebook.com/jagadeesh.indrakumar: பார்க்க வந்தாலே சோறு போடுவோம். காக்க வந்தவர்களைக் கவனிக்காமல் விடுவோமா? # உணவு பரிமாறி நெகிழவைக்கும் `நெடுவாசல்’!

facebook.com/charanya.win: ஓ.பி.எஸ்ஸுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் என்னதான் பழக்கம் இருந்தாலும், ஒரு மேடையில் பேசும்போது `அவன்’, `இவன்’ என்றா ஒருவரைப் பேசுவது? ஓ.பி.எஸ் நல்லவரோ, நடிப்பவரோ... அது அடுத்தபட்சம். ஆனால், மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவரை, இப்படி மரியாதையில்லாமல் பேசுவது என்ன அரசியல் நாகரிகம்? இந்த லட்சணத்தில் நாஞ்சில் சம்பத்துக்கு சிறந்த பேச்சாளர் என்ற பெருமை வேறு!

twitter.com/iamVariable: நாங்க எதுக்குத் தியாகம் பண்ணணும்? நீங்க வேணும்னா தினமும் எல்லா கிராமங்களுக்கும் போய் சாணி அள்ளி, மொத்தமா சேர்த்து, அதுலேர்ந்து மீத்தேன் எடுங்களேன்!

facebook.com/prabhunicas : பாலியல் வன்புணர்ச்சியில் மட்டுமே தீண்டாமை ஒதுங்கி நிற்கிறது!

வலைபாயுதே

facebook.com/Sowmya Ragavan: முதன்முதலில் சொல்ற `பாட்டி வடை சுட்ட கதை’யிலேயே `திருட்டு’, `ஏமாற்று’, `துரோகம்’னு குழந்தைகளுக்கு உலகத்தைப் புரியவைக்கிற முயற்சி இருந்தது!

​twiiter.com/​mekalapugazh :
பல் டாக்டர்களுக்குக் கொஞ்சம் மனோ​தத்துவமும் தெரியும்போல. உடனே சொல்ல மாட்டார்கள், எவ்வளவு செலவாகும் என்பதை!

​twiiter.com/​naaraju: அடுத்து என்ன... நான்கு தடவைக்கு அதிகமாக ஏ.டி.எம்-ல பணம் எடுக்கிறவனெல்லாம், `கறுப்புப் பணம் வெச்சிருக்கிறவன்’, `தேசவிரோதி’, `பாகிஸ்தானுக்குப் போகணும்’... அதானே?!

twiiter.com/​arattaigirl:
`உன் இஷ்டம்' என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை' என்று பொருள்!

​twiiter.com/​Enfielderstweet:  `ஆதார் கார்டு இருந்தாதான் ஆதார் கார்டு தருவோம்'னு மட்டும்தான்டா நீங்க இன்னும் சொல்லல!