Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/bri2o: வடிவேலெல்லாம் ராயல்டி கேட்டா, இங்கே ஒரு பய சோடா விற்க முடியாது #Vadivelu4life

twitter.com/lusupaiyan7777: தங்கச்சிப் பையனுக்கு ரெஸ்லிங் பார்க்கச் சொல்லிக்கொடுத்தது தப்பாப்போச்சு. `இங்குட்டுத் திரும்பு மாமா'னு காதைக் காட்டி ஒண்ணு குடுத்தான். காது கொய்யுங்குது!

twitter.com/erode_kathir: புன்னகைக்கும் முன் இதழ்களைக் கொஞ்சம் ஈரப்படுத்திக்கொள்ளுங்கள். வறண்ட புன்னகை உயிரற்றது!

twitter.com/udaya_Jisnu/  `சமாதியில் தியானம் செய்ய...'

`கட்சிக்குப் பெயர்வைக்க...'

`சபதமெடுக்க...'னு - தனித்தனியா கட்டணம் வசூலிச்சா, டாஸ்மாக் வருமானத்தை ஈடுசெய்யலாம்!

twitter.com/twittornewton/: `ப்ளஸ் டூ எப்ப முடிச்சீங்க?' என்று கேட்பது, வயதை நாகரிகமாகக் கேட்டறிய முயலும் செயல்!

twitter.com/i_Soruba: இப்பத்திய முதல்வரையே பதவியேற்புலதான் இன்னார்னு தெரிஞ்சது. இதுல மருதுகணேஷ் தெரியாததெல்லாம் ஒரு குத்தமாம் :-|

twitter.com/Kozhiyaar:
குழந்தைகள் பள்ளியில் நடப்பதை நம்மிடம் எந்த வயது வரை பகிர்ந்துகொள்கிறார்களோ, அதுவரை மட்டுமே நம்மை நண்பர்களாகப் பார்க்கிறார்கள்!

twitter.com/udaya_Jisnu: காலண்டர் அட்டையில் பரீட்சையும், பரீட்சை அட்டையில் கிரிக்கெட்டும் விளையாடிய கடைசித் தலைமுறை நாம்தான்!

twitter.com/kumarfaculty: மருத்துவமனையில் நோயாளி யாகவோ, நோயாளிக்கு உதவியாகவோ இருந்துவிட்டு வந்த பிறகு, வார்த்தைகளும் மருந்துகள்தான் என்று உணர முடிகிறது!

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/suryamsk_offl: ``மச்சான் ஃப்ரீயா இருந்தா ஒரு காமெடி சொல்டா.''

``ஸாரி மச்சான், நான் என் ஆளோட இருக்கேன்.''

``மச்சான், செம காமெடிடா... keep it up.’’

twitter.com/meenammakaya:
ப்ளூ டிக்காகி பதில் சொல்லலைன்னாகூடப் பரவாயில்லை. ஆன்லைன்ல இருந்துக்கிட்டு ப்ளூ டிக் ஆகலைன்னாதான் பயங்கரக் கோபம் வரும். # வாட்ஸ்அப் சோகங்கள்!

twitter.com/YamudhanSharma: மீதி கொடுத்தா சின்னக் கடை. மிட்டாய்க் கொடுத்தா பெரிய கடை!

twitter.com/arattaigirl: இவ்ளோ பகுத்தறிவு பேசுற இந்தக் காலத்திலயே இப்படி இருக்காங்களே!? பெரியார் காலத்தில் அவர் எவ்ளோ எதிர்ப்புகளைச் சந்திச்சிருப்பார்!

twitter.com/tparavai: மாமனார், ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கார்... # `வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா’!

twitter.com/thoatta: பா.ஜ.க. கங்கை அமரனை நிறுத்தியுள்ளதால், காங்கிரஸ் வெகுண்டெழுந்து அனந்து சாரை நிறுத்த வேண்டுகிறேன்!

twitter.com/kaviintamizh: `பேரைக் கேட்டா சும்மா அதிருதில்ல...' டயலாக் பெரியாருக்குதான் நூறு சதவிகிதம் பொருந்துகிறது!

facebook.com/gurushree: காலேஜ்ல ஒரு ஃப்ரெண்ட் இருந்தான். ஒரு க்ளாஸ்கூட கட்டடிக்க மாட்டான். ஆனா, ஒரு எக்ஸாமும் பாஸும் ஆக மாட்டான். # தே.மு.தி.க வேட்புமனு தாக்கல்!

வலைபாயுதே

facebok.com/ பெருமாள்சாமி சுப்புராஜ்: 1980 - ஒரு டீ மாஸ்டர் சம்பளம் 8 ரூபாய்.

1980 - ஒரு லிட்டர் பால் 8 ரூபாய்.

2017 - ஒரு டீ மாஸ்டர் சம்பளம் 800  ரூபாய்.

2017 - ஒரு லிட்டர் பால் 47 ரூபாய்.

விவசாயிகள், மாடு வளர்ப்போர்கள் ஏன் சாகிறார்கள் என்று இப்போது தெரிந்திருக்கும்.

எந்தப் பொருளாதாரச் சூத்திரங்களும் உழைக்கும் மக்களின் வருமானத்தைக் குறைத்து நேரடியாக அவர்களைச் சுரண்டியே கட்டமைக்கப்படுகின்றன. உழைக்கும் மக்களின் பொருளாதார மூக்குக் கயிறு, அவர்களைச் சுரண்டும் அதிகார, அரசியல்வர்க்கத்திடமே உள்ளது!

facebook.com/மதுரை சத்யா: சுத்தம் செய்ய அழுக்குத்துணி தேடும் அப்பழுக்கற்ற மனிதர்கள் நாங்கள்!

facebook.com/Karl Max Ganapathy: யோகி ஆதித்யநாத்தான் அடுத்த மோடியோன்னு தோணுது எனக்கு. ட்ராக் ரெக்கார்டு அதைத்தான் சொல்லுது. அதாவது ஆர்.எஸ்.எஸ்-ஸோட ட்ராக் ரெக்கார்டு!

facebook.com/Nelson Xavier: 
ஆளுமைகள் கடைசிவரை ஆளுமைகளாகவே இருப்பதே இன்றைய நாளில் பெரிய ஆளுமைப் பண்பு!

facebook.com/Aruna Raj: குப்பை கொட்டுறேன் - இதை விளையாட்டா சொல்ல முடியும்.

குப்பை  அள்ளுறேன்  - இதை விளையாட்டாக்கூட யாரும் சொல்றதில்லை!

facebook.com/வெ.பூபதி:
`நான் சொல்றதை பேரன்ட்ஸ் கேட்கிறதே இல்லை'னு குழந்தைகள் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism