பிரீமியம் ஸ்டோரி

twitter.com/jeytwits: நைட் ஃபுல்லா போனை சார்ஜ்ல போட்டுவிட்டு, காலையில் ஸ்விட்ச் போடாம இருப்பதைப் பார்க்கிறப்போ என்ன மனநிலை வருமோ...அந்த மனநிலையில்தான் டி.டி.வி.தினகரன் இருப்பார்.

twitter.com/gowrisa: வாழ்க்கை என்பது, சீட்டாட்டம்போல. குலுக்கிப் போடும்போது என்ன சீட்டு வருகிறது என்பது விதி; வந்த சீட்டில் எப்படி ஆடுவது என்பது மதி.

facebook.com/Sureshbabu0989
: முன்பெல்லாம் `கேம் இல்லை'ன்னு சொன்னா, போயிடுவாங்க. இப்போ `பரவாயில்லை, குடு... நானே டவுன்லோடு பண்ணி விளாடுறேன்'னு புடிங்கிக்கிறானுங்க சின்ன பசங்க.

twitter.com/TheJIGSAW
: இந்தப் பொண்ணுங்க எல்லாரும் வெளிநாட்டு மாப்பிள்ளைகளைக் கல்யாணம் பண்ற மாதிரி, பசங்களுக்கு வெளிநாட்டுப் பொண்ணுங்க கிடைக்காதா?

வலைபாயுதே

twitter.com/Chaintweter: தனி மரம் ஆலமரமாக இருப்பின், தோப்புகளைப் பற்றிக் கவலையில்லை.

facebook.com/davidyrajkumar:
நான் வேலைசெய்யும் ஆஸ்பத்திரியில், என்னை ஒரு பேஷன்ட் கேட்டார், `பிரதர், நீங்க சிஸ்டரா?' - ங்ஙே...

twitter.com/inban_ofl: நெருங்கின பிறகு `ங்க' எப்படிப் போச்சுன்னே தெரியாது. பிரிஞ்ச பிறகு அதே `ங்க' எப்படி வந்துச்சுன்னே தெரியாது.

வலைபாயுதே

twitter.com/Piramachari: மிடில் க்ளாஸ் வாழ்க்கை  எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக் காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும்.

twitter.com/akaasi:
சன்னாசியப்பன் மகன் அருண்குமார் மகன் த்ருவ் பிறந்த நாள் விழா நேற்று. இத்தனை வேகமாக, பெயரின் பரிணாம வளர்ச்சி 100 தலைமுறை தமிழரிடம் இருந்ததுண்டா?

twitter.com/withindu: சம்பாதிக்காதபோதுகூட சேமிப்புப் பழக்கம் இருந்தது. சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு, கடன் வாங்கும் பழக்கம்தான் வந்திருக்கு. எங்கேயிருந்து சேமிக்க?

twitter.com/writernaayon:
ஒருத்தன் சுயநினைவோடு நிர்வாணமா திரியுறான்னா, `வெட்கமா இல்லையா?'ன்னு அவன்கிட்ட கேட்கலாம். போராட்டம் பண்றான்னா, அந்தக் கேள்வியை அரசிடம்தான் கேட்கணும்.

வலைபாயுதே

twitter.com/saravana nucfc:  சின்னச் சின்ன அழகான விஷயங்களையும் மெய்ம்மறந்து ரசிப்பவர்களை, அவர்கள் ரசிக்கும்போது அவர்களை ரசிப்பது அழகு!

வலைபாயுதே

twitter.com/mekala pugazh: கையில் செல்போன் இருந்தும் நேரம் பார்க்க வீட்டுச் சுவர்க்கடிகாரத்தை நோக்குவது, நாம் போன தலைமுறை ஆள் என்பதைச் சொல்லிவிடுகிறது.

வாட்ஸ்அப்ல `Hi'னு மெசேஜ் வந்தது.

நான் `who r u?'னு கேட்டதுக்கு, `I am fine'னு ரிப்ளை வந்திருக்கு.

#எவனோ நம்மகூடப் படிச்ச அறிவாளியாத்தான் இருக்கணும்.

வலைபாயுதே

கருத்தா பேசுவாரு

ட்விட்டரில் `@teakkadai1' என்னும் அறிவுக்களஞ்சிய ஐடி-க்குச் சொந்தக்காரர் முரளிகண்ணன். நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் விஷயங்களையும் இவர் அணுகும் விதமே அலாதியானது. `ஹரிதாஸ்' படத்தில் இருந்து `ப.பாண்டி' வரை, ஓமந்தூரார் தொடங்கி எடப்பாடி பழனிசாமி வரை, திருக்குறளில் இருந்து ட்விட்டர் வரை தகவல்களை அள்ளித் தருவதில் என்சைக்ளோபீடியா. நதி உருட்டும் கூழாங்கல்லாக வாழ்க்கையை அதன்போக்கில் சென்று ரசித்துக்கொண்டிருக்கும் ரசனைக்காரர்!

ட்ரெண்டிங்

ட்விட்டர், ஃபேஸ்புக்போல பிரபலமான இன்னொரு சமூக வலைதளம் `ஸ்நாப்சாட்'. அதன் சி.இ.ஓ  சமீபத்தில் `இந்தியா போன்ற ஏழைநாட்டில் ஸ்நாப்சாட்டை விரிவுப்படுத்தும் எண்ணம் இல்லை' எனச் சொன்னதாகத் தகவல்கள் வெளியாகின. உடனே சூடான நெட்டிசன்ஸ் செய்ததுதான்

வலைபாயுதே

சென்ற வார வில்லங்க வைரல். ஸ்நாப்சாட்டுக்குப் பதிலாக, `ஸ்நாப்டீல்' என்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு எதிராகப் பொங்கிவிட்டார்கள். ஸ்நாப்டீலின் ஆப்-ஐ அன்இன்ஸ்டால் செய்வது, ஆப் ஸ்டோரில் அவர்களின் ரேட்டிங்கைக் குறைப்பது, ட்விட்டரில் அவர்களை ட்ரோல் செய்வது என ஏகப்பட்ட களேபரங்கள். `200 கோடி ரூபாய்க்கு விளம்பரம் பண்ணியும் உங்க பிராண்ட் பெயரே மக்கள் மனசுல பதியலையேப்பா ஸ்நாப்டீல்' என விஷயம் தெரிந்தவர்களும் நக்கலடித்தார்கள். இதற்கிடையே ஸ்நாப்சாட் நிறுவனம், `இந்தியாவில் இணைய வேகம் குறைவு. எங்கள் ஆப் செயல்பட, டேட்டா வேகம் வேண்டும். அந்த அர்த்தத்தில்தான் சொன்னோம்' என விளக்கம் அளித்தது தனிக் கதை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு