Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/mani pmp

ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே மக்களுக்கு இருக்கிற அறியாமை, `அன்ரிசர்வ்டு பெட்டி எங்க இருக்குதுனு தெரியாம ஓடுறதுதான்'!

twitter.com/aroobii_

மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்கள். கிடைக்காதபட்சத்தில் தண்டனைக்குத் தயாராகிவிடுகிறீர்கள். மற்றபடி நீங்கள் திருந்துவதெல்லாம் நிகழ்வதில்லை.

வலைபாயுதே

twitter.com/saravananucfc

குழந்தைகளிடம் பேசும்போது “ம் உன் மூஞ்சி''னு அவங்க சொல்றது திட்டா கொஞ்சலானே தெரியாமல் இருக்கிறேன்.

twitter.com/boopatymurugesh

நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு.

twitter.com/jeytwits

எல்லாத்தையும் Take it easy-யா எடுத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்றவங்களை உலகம் ‘சொரணை கெட்டவன்’ எனப் பொறாமையோடு அழைக்கிறது.

வலைபாயுதே

twitter.com/mekalapugazh

கருணாநிதியாகணும்னுதான் நினைத்திருப்பார்போல.. வைகோவாகிக்கொண்டிருக்கிறார் சீமான்.

twitter.com/jeytwits

பெரு நகரங்களில் பிரபலமான நகைக்கடை துணிக்கடையின் கிளைகள் சிறு ஊர்களில் ஆரம்பிக்கப்படும்போது, அது ஊரின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

twitter.com/HAJAMYDEENNKS

இந்த வங்கிகள் போற போக்கைப் பார்த்தால், இனி ஃபேஸ்புக், ட்விட்டரில் மட்டும்தான் அக்கவுன்ட் ஓப்பன் பண்ண முடியும் போல!

twitter.com/writernaayon 

இதுவரை கேட்கப்பட்ட கேள்வி களிலேயே அதிகப் பதில்களைப் பெற்றிருக்கும் ஒரே கேள்வி...

“ஏன் லேட்டு?”

twitter.com/manipmp

போன் வந்த பிறகுதான் பொய் பேசுவது அதிகமாகியது!

வலைபாயுதே

twitter.com/KakkaiSithar

பேய்னா... இந்து ஆவி.

சாத்தான்னா... கிறிஸ்தவ ஆவி.

சைத்தான்னா... முஸ்லீம் ஆவி.

ஆவிகளுக்கே இங்க மதம் இருக்கு.

twitter.com/amuduarattai 

அதிகமுறை கட்சி மாறியது குழந்தைகளாகத்தான் இருக்கும்.

வலைபாயுதே

சென்ற வார இறுதி, உலகின் பல நாடுகளுக்கு நிம்மதியாகப் போகவில்லை. அமெரிக்கா, தனது எதிரி நாடுகளில் இருந்து தகவல்களைத் திருட சில ஹேக்கிங் சாஃப்ட்வேர்களைத் தயாரித்தது. அதை வேற ஒரு குழு திருடி, உலகின் பல கணினிகளை ஹேக் செய்துவிட்டது. இந்த ``ரான்சம்வேர்” அட்டாக் என்பது டிஜிட்டல் கடத்தலைப் போல. அதாவது நமது கணினியின் முழுக்கட்டுப் பாட்டையும் ஹேக்கர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதை விடுவிக்க, பணம் கேட்பார்கள். “பிட்காயின்” எனப்படும் டிஜிட்டல் கரன்ஸியைத் தந்தால்தான் ஹேக்கர்கள் கணினியை விடுவிப்பார்கள். 90-க்கும் அதிகமான நாடுகள் இந்த அட்டாக்கால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் ஆந்திர போலீஸின் சர்வர்களும் சிக்கின. உலகின் மோசமான ஆன்லைன் தாக்குதல்களில் இது முக்கியமானது என்கிறார்கள் கணினி வல்லுநர்கள்.

வலைபாயுதே

மீட்டிங்... சாட்டிங்!

எப்போதும் ஆன்லைனில் சண்டையும் போட்டு, சமாதானமும் ஆகும் ட்விட்டர்கள், ஆண்டுக்கு ஒரு முறை சந்திப்பதுண்டு. ட்விட்டப் எனப்படும் இது போன்ற சந்திப்புகள் தினம் தினம் நடந்தாலும்,100-க்கும் மேற்பட்ட தமிழ் ட்விட்டர்கள் கூடும் மெகா ட்விட்டப்(TNMegaTweetup) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும். இதுவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் நகரங்களில் நடந்த மெகா ட்விட்டப், இந்த முறை நெல்லை மாநகரில் நடந்தது. 120 ட்விட்டர்கள் கலந்துகொண்டார்கள். வெர்ச்சுவல் உலகிலேயே பேசி வந்த நண்பர்கள், நிஜத்தில் சந்தித்து பேசுவது மட்டுமே இந்த மெகா ட்விட்டப்பின் நோக்கம் என்கிறார்கள் இதன் ஒருங்கி்ணைப்பாளர்கள். அடுத்த ஆண்டு பாண்டிச்சேரியில் நடத்துவதாக சந்திப்பில் முடிவு செய்திருக்கிறார்கள். கலக்குங்க!