twitter.com/CreativeTwitz
கிண்டல் செய்வதாக நினைத்து ஒரு விஷயத்தைப் பிரபலப்படுத்தி விடுகிறார்கள்!
twitter.com/thoatta
பொறந்தவீட்ல கத்திச்சண்டை போட்டுக்கிட்டிருந்த தேவசேனா, புகுந்தவீட்ல தலைல தீச்சட்டிய தூக்கிட்டு அலையுது, இவ்வளவுதான் இந்தியக் கல்யாணம் :(

twitter.com/the_kadavul
கடவுள் இருக்காரா, இல்லையானு கேட்கிறவங்க, வீட்டுக்குப் போனீங்கனா ஒரு ஜீவன் “சாப்பிடுறியா”னு கேட்கும். அதுதாங்க கடவுள்.
twitter.com/twittornewton
எல்லா நெறிகளுக்கும் குறள் தந்தவர் வள்ளுவர். எல்லா உணர்வுகளுக்கும் இசை தந்தவர் ராஜா. எல்லா நிகழ்வுகளுக்கும் காமெடி தந்தவர் வடிவேலு!
twitter.com/tvignesh46
பார்த்துக் கொண்டிருப்பது பாட்ஷா படம் என்றுகூட தெரியாமல் தில்லானா தில்லானா பாடலுக்காகக் காத்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை!
twitter.com/BoopatyMurugesh
ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் - மீம் கிரியேட்டர்கள் சங்கம்!
twitter.com/balasrivaishu
காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும் தெரிந்து விடுகின்றன. ஆனால் முதுகில் குத்தியதற்கான அடையாளம் மட்டும் தெரிவதில்லை.
twitter.com/sundartsp
நடிகர்களுக்கு வயசாவதைவிட, ரசிகர்களுக்கு வயசாவதுதான் அவர்களுக்கு பெரிய பிரச்னை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/HAJAMYDEENNKS
ஆவியைக் கண்டு பயப்படுவது போல், தமிழகத்தில் காவியைக் கண்டு பயப்படுகின்றனர் - தமிழிசை
#இப்படி நீங்களே கலாய்ச்சுக்கிட்டால் நாங்க என்ன பண்றது.
facebook.com/Ram Vasanth
English Writers Forum ன்ற குருப்புல நான் இருக்கும்போது... நீ ஏன் தலைவா அரசியலுக்கு வரக் கூடாது?
twitter.com/withkaran
முன்ன ஃபெயிலானாலும் முன்னேறலாம்னு சொல்லிட்டு இருந்தாய்ங்க... இப்ப
என்னடான்னா ஃபெயிலானாத்தான் முன்னேற முடியும்ங்கிற ரேஞ்சுல போறாய்ங்க.
twitter.com/HAJAMYDEENNKS
திங்கள்கிழமை காலையில பணம் போடவோ எடுக்கவோ பேங்குக்குப் போறது, சின்ன வயசுல பள்ளிக்கூடத்துக்கு போன மாதிரியான எரிச்சல் உணர்வையே கொடுக்கிறது!
twitter.com/saravananucfc
குழந்தைகளுக்குச் சொல்லப்படும் அத்தனை அழகான கதைகளை விடவும் அழகு. அவுங்க கதைக்கு கூடவே ``உ” கொட்றது.
twitter.com/latha_Bharathy
தன் பக்கம் ஆதரவாய் அப்பா நிற்பது தெரிந்த பின்னரே அம்மாவுடனான சண்டையில் வலு கூட்டுகின்றன பெண் குழந்தைகள்.
twitter.com/saravananucfc
இப்பலாம் ஆகச் சிறந்த அவமானங்கள் பட்டியலில் வயசுப் பசங்க/பொண்ணுங்ககிட்ட டச் போன் இல்லாததும் சேர்ந்துவிட்டது.

twitter.com/jeytwits
உடம்பு அந்தரத்தில் மிதக்க, பெரிதாய் தியானம் செய்யத் தேவையில்லை.. கவர்மென்ட் பஸ்ஸின் கடைசி சீட்டில் பயணம் செய்தாலே போதுமானது.
facebook.com/Arun Dir
வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே ஒரு ரன்தான் வித்யாசம் எனில், அந்த வெற்றிக்கு என்ன மதிப்பிருக்கிறது? அல்லது, அந்தத் தோல்வியில்தான் அவமானப்பட என்ன இருக்கிறது? #IPL
twitter.com/Hrithikmrp
EBக்கு போன் பண்ணி 'மழை நின்னு 8 மணி நேரம் ஆச்சு; எப்ப கரன்ட் வரும்'னு கேட்டா, 'உன் போன்ல இன்னுமா சார்ஜ் நிக்குது? என்ன மாடல்?'னு கேக்குறான்.

மெஷின் லேர்னிங் மூலம் மேஜிக் காட்டிய கூகுளின் I/O டெவலப்பர் கான்ஃபரன்ஸ்தான் கடந்த வார ஆன்லைன் ட்ரெண்ட். ஒரு கடையின் பெயர்ப் பலகையை மொபைல் கேமரா மூலம் ஸ்கேன் செய்தாலே, அதுபற்றிய விவரங்களைக் காட்டும் கூகுள் லென்ஸ், மொபைல் இல்லாமலே இயங்கும் VR ஹெட்செட், ஐபோனிற்குள் அடியெடுத்து வைக்கும் கூகுள் அசிஸ்டென்ட், ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனான ஆண்ட்ராய்டு ஓ, குறைந்த மெமரியில் இயங்கும் ஆண்ட்ராய்டு கோ என வெரைட்டி காட்டியது கூகுள். மொபைல் கேமரா மற்றும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகிய இரண்டையும் மிக்ஸ் செய்து அடித்த கூகுள் லென்ஸ்தான் இந்த நிகழ்வின் ஹைலைட்.