பிரீமியம் ஸ்டோரி

facebook.com/Paranirajan Sathyamoorthi

கலைடாஸ்கோப் பார்க்கும் வெண்ணிலா வின் ஒரு கண்ணில் வந்திறங்கும் வண்ணங்களை ஆச்சர்யத்தில் விரியும் அவளின் மறுகண்ணில் பார்க்க முடிகிறது #மகளதிகாரம்.

twitter.com/ikrthik

அவள் அதிகம் பேசுவதில்லை. இமைப்பாள்!

twitter.com/Mahdoomtwits

யார் பார்த்தாலும் பார்க்கலைன்னாலும் குழந்தைங்க அந்தந்த நேரத்துக்கான க்யூட் எக்ஸ்ப்ரஷன்ஸைக் கொடுக்கத் தவறுவதில்லை!

வலைபாயுதே

twitter.com/thirumarant
 
வழக்கமா பேட்டிகள்ல செயற்கையா இழுத்து இழுத்துப் பேசும் தீபா... இப்ப non-stop ஆ பொளந்து கட்டுது... உண்மை முகம்.

twitter.com/HAJAMYDEENNKS
 
விளம்பரங்களில்கூட கருப்பு நிற குழந்தைகள் வருவதில்லை...!

facebook.com/Umamaheshvaran Panneerselvam

தமிழைத் தூக்கிட்டு இந்தியைத் திணி...
ப்ளாஸ்டிக் அரிசின்னு கெளப்பிவிட்டுட்டு கோதுமையைத் திணி...

twitter.com/Kozhiyaar

இப்பொழுதெல்லாம் நம்பிக்கை துரோகங்கள் ‘ஸ்கிரீன்ஷாட்’ வழியாக நிகழ்த்தப்படுகின்றன!

வலைபாயுதே

facebook.com/Aruna Raj

மால்ல இருக்கிற பெரிய பெரிய வெளிநாட்டு பிராண்ட் துணிக்கடையில எல்லாம் உள்ளே நுழைஞ்ச உடனே ‘அண்ணே புது துணி எல்லாம் எந்தப் பக்கம் வெச்சிருக்கீங்க?’ அப்படின்னு ஒரு வார்த்தை கேட்டுக்கிறது நல்லது. பூரா துணியும் துவைச்சுக் கசக்கி காயப்போட்டு வெச்ச மாதிரியே இருக்கு.

twitter.com/dhanalakshmirs
 
காட்டாத கண்ணீரைக் கண்டுகொள்ளும் கண்கள் கடவுளுடையவை.

வலைபாயுதே

twitter.com/teakkadai1
 
ஸ்மியூல் ஆப் பார்க்கும்போது விஜய் டி.வி மிஸஸ் சூப்பர் சிங்கர்ன்னு ஒண்ணு ஆரம்பிச்சா, கடும் போட்டியா இருக்கும்னு தோணுது.

facebook.com/Nelson Xavier

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை.
செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்தபோது நாம் பதறவில்லை.

அத்தனை சூட்டையும் தாங்கிய வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப் படவில்லை.

பார்சல் டீ, காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாகப் பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை.

நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை.

இலைதழை தின்றுகொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்தக் குற்ற உணர்வுமில்லை.

மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை.

ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவிகிதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்தப் பதற்றமுமில்லை.

இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை!

வலைபாயுதே

twitter.com/kumarfaculty

 ஊசியில் நூல் கோத்தல் கண் பார்வை பரிசோதனையின் முன்னோடி...!

ட்ரெண்டிங்

எங்கு தேர்தல் நடந்தாலும் இணையம் பரபரப்பாகி விடுகிறது. இந்த முறை இங்கிலாந்து தேர்தல். 2020-ம் ஆண்டுதான் இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வந்திருக்க வேண்டும். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் என்ற அறிவிப்பால்,சொந்தக் கட்சியில் இருந்த எதிர்ப்பையும் மீறி மீண்டும் தேர்தல் என பிரதமர் தெரேசா மே முடிவு செய்தார். மே அறிவித்தபடி ஜூன் 8 அன்று தேர்தல் நடந்தது. 4.6 கோடி வாக்களர்கள் கொண்ட இங்கிலாந்துத் தேர்தலில் மெஜாரிட்டிக்கு 326 இடங்களில் வென்றாக வேண்டும். ஆனால், தெரேசா தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 317 இடங்களை மட்டுமே வென்றது. தோல்விக்குக் காரணங்களை சீரியஸாக விவாதித்து வருகிறது இணையச் சமூகம். ஒரு கட்டத்தில் மெஜாரிட்டி கிடைக்காததற்கு பொறுப்பேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்கள் சமூகவலைதளங்கள் வழியே தெரசா மே-வுக்கு நெருக்கடிகளைக் கொடுக்கத் துவங்கியிருக்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு