Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

twitter.com/amuduarattai 
பெற்றோர்கள் சொல்படிக் கேட்டு நடக்கும், பிள்ளைகளாகப் பிறந்தோம். பிள்ளைகள் சொல்படிக் கேட்டு நடக்கும், பெற்றோர்களாக வாழ்கிறோம்.

facebook.com/Guru Srini
நாம எப்படி A சர்டிபிகேட்டை மதிக்கி றோம்னா, `லோகன்’ மாதிரி படத்துல ஒரு குழந்தையே முகத்துல/கண்ணுல கத்தியைச் செருகுற உச்சக்கட்ட வயலன்ஸ் இருக்கிற படத்துக்குக் குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போவோம். ஆனா, காண்டம் விளம்பரம் வந்தா, சேனல் மாத்திடுவோம்.

twitter.com/writternagarani
இன்றுவரை சாதாரண டீக்கடையில குடிக்கிற டம்ளர்கூட எல்லோருக்கும் ஒரே மாதிரி தருவதில்லை. அப்படி இருக்கையில் ஒரே நாடு, ஒரே வரி எப்படிச் சாத்தியமாகும்?

வலைபாயுதே

twitter.com/LordZha 
இப்ப ஓடிக்கிட்டிருக்கிற படங்கள் லட்சணத்துக்கு ஜி.எஸ்.டி இல்லைனாலும் ரெண்டு வாரத்துக்கு தியேட்டர்களை மூடி வைக்கிறதுதான் லாபம். கரன்ட்டு பில்லாவது மிஞ்சும்.

twitter.com/HAJAMYDEENNKS 
குழந்தைகள், பெற்றோர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர் என்பதுதான் உண்மை..!

twitter.com/nathanjkamalan
சாப்பிடும்போது பரிமாறவோ, பகிர்ந்து கொள்ளவோ ஒருவர் அருகிலிருப்பது ஒருவகையில் மனநிறைவைத் தந்துவிடுகிறது!

twitter.com/iamkarthikeyank 
கிரிக்கெட் பார்க்க பொண்டாட்டி கிட்ட ரிமோட் வாங்க முடியாம கதறுனவங்களுக்குக் கிடைச்ச வரம்தான் `hotstar, jio’

twitter.com/senthilcp
திரைப்படங்களை நேரடியாக DTH-ல் வெளியிடத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு எனத்  தகவல். - இப்போ தெரியுதா தமிழ் சினிமாவின் `பிக்பாஸ்’ யாருன்னு?

வலைபாயுதே

twitter.com/writternagarani
பெண்களை இளமையாகக் காட்டத்தான் பெரிதும்  கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, ஆண்களை இளமையாகக் காட்ட, ஒரு டி-சர்ட் போதுமானதாக இருக்கிறது.

twitter.com/manipmp 
எதையாவது எழுதிட்டுக் கீழே கலாம்னு போடுற மாதிரிதான், எந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், கீழே கருப்புப் பணம் ஒழியும்னு போட்டுடுறாங்க.

twitter.com/npgeetha 
நான்லாம் ப.சிதம்பரம்தான் நாட்டை வித்துடுவாருபோலன்னு கவலைப் பட்டேன். இவிங்க அக்கக்காப் பிரிச்சு, கூறு பத்து ரூவான்னு விக்குறாய்ங்க!

twitter.com/Chaintweter 
வயிற்றிற்குள் பறக்கும் பட்டர்ஃபிளைக்கு வயசாகி விட்டதுபோல், இப்போதெல்லாம் அவை பறப்பதேயில்லை.

twitter.com/mekalapugazh
பழைய ஆயிரம் ரூபாய்  நோட்டில் ஆன காரியம், இனிப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் ஆகும் என்பதுதான் பண மதிப்பிழப்பின் பயனோ?

twitter.com/HAJAMYDEENNKS
ஒரே அளவிலான வருமானம் இல்லாத நாட்டில், ஒரே விதமான வரி மட்டும் எப்படிச் சாத்தியமாகும்...?

வலைபாயுதே

twitter.com/sanraj2416
ப்ளாட்ஃபார்ம்ல நின்னாதான் கட்டணம் 10 ரூபாயாம்.

அப்படியே கீழ உட்கார்ந்துட்டா கேட்க மாட்டாங்களாம். பிச்சைக்காரன் சொன்னான்!

facebook.com/Sarav Urs

கதவை உடைச்சுட்டு ‘உப்பு இருக்கா’ன்னு கேட்கிற காஜல் அகர்வால் மாதிரி திடீர்னு உள்ள வந்தாய்ங்க இரண்டு பேர்...

முகத்தை அவ்ளோ சீரியஸா வெச்சுக்கிட்டு, ``ஜி.எஸ்.டி வருது சார். எல்லா ரேட்டும் ஏறப்போகுது. சீக்கிரமா பழைய காரைக் கொடுத்துட்டுப் புது கார் வாங்கிக்கோங்க, இப்போ வாங்கினா டிஸ்கவுன்ட் இருக்கு.’’

‘‘இல்லீங்க... கார் வாங்குற ஐடியா இல்லை.’’

‘‘என்ன சார், இப்படிச் சொல்லிட்டீங்க பழைய கார்  இரண்டு லட்சம், டிஸ்கவுன்ட் 35,000. டேக்ஸ், ஆன் ரோடுன்னு கணக்கு பண்ணா, சார் நீங்க மூன்று லட்சம் கட்டினா போதும். இதே காரைப் புதுசா வாங்கிக்கலாம். வேற கலர்ல... செம்ம ஆஃபர் சார்... வாங்குங்க.’’

‘‘நான் இப்போ வெச்சிருக்கிற காரை கலர் மாத்துறதுக்கு மூணு லட்சம் தரணுமா... என்னய்யா சொல்ற?’’

‘‘நீங்க பணம்கூட கட்டவேணாம் சார். லோன் போட்டுக்கலாம். பழைய காரை விக்கிறோம்ல... அந்தப் பணத்தை டவுன் பேமென்ட்டா வெச்சு முடிச்சிடுறேன். ஒரு 10 கையெழுத்துப் போட்டா போதும். புதுசு என்ன கலர் சார் வேணும்?’’

‘‘டாய்... என்னமோ கத்தரிக்காய் வாங்குற மாதிரி கார் வாங்கச் சொல்ற... ஓடிரு.’’

‘‘சார், ஜி. எஸ்.டி வந்தா, நீங்க 15,000 ரூபாய் அதிகமா கட்ட வேண்டி வரும்.’’

‘‘அடேய்... அது கார் வாங்குறவன்தானே கட்டணும். நான் சும்மாதானே இருக்கேன். ஏண்டா குழப்புறீங்க... போங்கடா பேசாம.’’

‘‘சார் சொன்னா கேளுங்க.. உங்களுக்குத்தான் நஷ்டம்’’னு சொல்லிட்டே போறான்...

உண்மையிலயே நமக்கு நஷ்டம் ஆகிடுமோ, குழப்புறானுகளே....

வலைபாயுதே

facebook.com/Guru Srini

பார்லிமென்ட்டே டி.ஆர்.பி. ரேட்டிங்கை நோக்கித்தான் போயிட்டிருக்கு, இதுல ‘பிக்பாஸ்’ விஜய் டி.வி-யைத் திட்டி என்ன பயன்?

வலைபாயுதே

ட்ரெண்டிங்

ட்ரம்ப்பும் மீடியாவும் எப்போதும் சக்கரைப் பொங்கல் வடகறி காம்பினேஷன்தான். நியூயார்க் டைம்ஸை `தோல்வியடைந்த நாளிதழ்’ எனக் கலாய்த்த அமெரிக்க அதிபர் இந்த முறை எதிர்த்திருப்பது சி.என்.என் ஊடகத்தை. ``அது ஒரு குப்பை மீடியா. பொய்யான ஜர்னலிஸம் செய்பவர்கள்” என ட்வீட் செய்த ட்ரம்ப் அடுத்து வெளியிட்ட வீடியோ இன்னும் மோசம். ரெஸ்லிங்கில் முன்பு ஒருமுறை கலந்துகொண்ட ட்ரம்ப் ஒருவரை அடித்து வீழ்த்தும் வீடியோவில், அடி வாங்கியவரை சி.என்.என் என மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தது. “ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்க்கிறார் ட்ரம்ப்” என எதிர்ப்புக் கிளம்ப, “அவர் உண்மையானவர். தனது எதிர்ப்பைப் போலியின்றிப் பதிவு செய்கிறார்” என ஆதரவளார்களும் பதிலுக்குக் கிளம்பினார்கள். “நாங்கள் எங்கள் வேலையைத் தொடர்ந்து செய்வோம். அவர், அவருடைய வேலையைச் செய்யத் தொடங்கட்டும்” எனப் பதில் சொல்லியிருக்கிறது சி.என்.என்.