Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

facebook.com/Nandhini R. Moorthy

பிக்பாஸ் வந்ததுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா, ஆபீஸ்லகூட பொறணிப் பேசுறதை விட்டுட்டு பிக்பாஸ் பற்றிப் பேசுறதுதான்...

facebook.com/Sowmya Ragavan


என்ன... இந்த பிக்பாஸூக்கு இவ்ளோ பார்வையாளர்கள்னு தோணலாம். எனக்கு நானேகூட கேட்டுக்கிட்டேன். இதை ஏன் இவ்ளோ தீவிரமாப் பார்க்கணும், பேசணும்னு.      

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதைவிட இன்னொன்னு. நாம இது போல பல்வேறு கேரக்டர்களைக் கடந்தோ, சேர்ந்து வாழ்ந்தோ, மறந்து வாழ்ந்துட்டோ இருப்போம். இவங்களை விமர்சிக்கிறப்ப அவங்களைத் திட்டின திருப்தியோ, எலிமினேட் பண்றப்ப அவங்க முகத்துல ஒரு குத்துவிட்ட குரூர இன்பமோ கிடைக்குது. யாருக்காவது நாமளும் இப்படி இருந்திருப்போம்னு ஒரு சுயப் பரிசீலனையும் பண்ணிக்கிறது உண்டு. கிட்டத்தட்ட நம்மள்ல 50 சதவிகிதம் ஜூலி உண்டு. அங்க நடக்கிற மாதிரி குழு மனப்பான்மையில கார்னர் பண்ற சைக்கோத்தனம் உண்டு. நமக்கு வாகா அடிமை கிடைச்சா, காயத்ரியா மாறிடுற ஆதிக்க குணம் 10 சதவிகிதமாவது உண்டு.  இங்க நாம வைக்கிற விமர்சனங்கள் நமக்கும்தான். ஓவியாவைப் பிடிக்கப் பொதுவான காரணங்களில் நாம அப்படி இல்லைங்கிற உண்மையும் ஒன்று.

twitter.com/thoatta 

சனிக்கிழமையானா மாற்றி மாற்றிப் போட்டுக் கொடுத்துக்குவாங்க, மிச்ச நாள்ல கொஞ்சிக்குவாங்க. இவங்களுக்கு அ.தி.மு.க-வோட மூணு கோஷ்டிங்களே பரவாயில்லை.

twitter.com/saravananucfc

வெற்றிக்கான ரகசியத்தில் “எப்ப பார்த்தாலும் போனை நோண்டுறதை என்னைக்கு நீ விடுறியோ, அன்னைக்குதான் நீ உருப்புடுவ” என்பதையும் சேர்த்துடலாம்.   

வலைபாயுதே

twitter.com/iKaruppiah 

குடை பிடிக்கிறாள் தாய். குடைக்கு வெளியே கை நீட்டி மழை பிடிக்கிறது குழந்தை.

twitter.com/Kannan_Twitz

கெட்டவன் என்ற வார்த்தையைவிட, வாழ்ந்து கெட்டவன் என்ற வார்த்தைக்கு வலி அதிகம்.

twitter.com/amuduarattai

எட்டப்பன்கள் பிறப்பதில்லை. பள்ளிகளில் கிளாஸ் லீடர் என்ற பெயரில் உருவாக்கப்படுகிறார்கள்.

twitter.com/Nimeshiga

பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் போட வரும் சண்டைகளில்தான் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்கும்போல!

twitter.com/Railganesan

திருவிழாக்களுக்கு ஸ்கூல் யூனிஃபார்மையே புதுச்சட்டையாக தைத்துப் போட்டுக்கொண்ட கடைசித் தலைமுறை நாமதான்!

twitter.com/yugarajesh2

மனைவியிடம் மனம்விட்டுப் பேசினால், சண்டையே வராதாம்# அடேய்..! சண்டை வந்ததே மனம்விட்டுப் பேசுனதால தான்டா.

twitter.com/WritterRamesh 

ஓவியாவுக்கு இருக்கிற ஆதரவைப் பார்த்தா, சின்னம்மா ஜெயில்ல இருந்து ரிலீஸாகி வரும்போது, ஒட்டுமொத்த அ.தி.மு.க. கன்ட்ரோல் ஓவியாகிட்டதான் இருக்கும்போல.    

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar 

சொல்லிக் காட்டுவதைவிட நடந்து காட்டுவதைக் குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்கிறார்கள்!

twitter.com/mekalapugazh 

தேசபக்தன் என்பது காங்கிரஸ் காலத்தில் பெருமையாகவும்... பா.ஜ.க. காலத்தில் பகடியாகவும்...

twitter.com/manipmp 

`இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக’ எனும் செய்தி கேட்டு சிரித்துக்கொண்டான் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்.

twitter.com/Jeytwits

நேரத்தோடு வீட்டிற்குச் செல்ல வேண்டுமென எண்ண வைப்பது சார்ஜர் என்றால், குடும்பத்தோடு வெளியில் செல்ல வேண்டுமென எண்ண வைப்பது செல்ஃபிக்கள்.

twitter.com/manipmp

இப்போவெல்லாம் ரியாலிட்டி ஷோவுக்கு அவங்க பெற்றோர்களைக் கூப்பிடக் காரணம், அவர்களை விட்டா வேற யாரும் சிரிச்சுக் கைத்தட்ட மாட்டாங்க என்பதால்...

twitter.com/Kozhiyaar
 
கல்லூரி விடுதியில் வாழ்ந்தவருக்கு பிக் பாஸ் வீடெல்லாம் துச்சம்!

எத்தனை பாசம், சண்டை, அரசியல், துரோகம், நட்பு கண்டிருக்கும் விடுதிகள்!    

twitter.com/saravananucfc

இப்போவெல்லாம் பலருக்குத் தனிமை என்பது ஆன்லைனில் பலருடன் பேசிக்கொண்டிருப்பது!

twitter.com/thoatta 

மீண்டும் ஓவியாவுக்கு ஓட்டு, அன்புமணி லுங்கியைக் கட்டிக்கிட்டுத் தூங்கப் போனார்.   

வலைபாயுதே

twitter.com/mekalapugazh
 
ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் வெற்றிலைப் போட்ட பழக்கம் வழக்கொழிந்தது.இப்போதெல்லாம் மருந்து மாத்திரைதான்.

twitter.com/HAJAMYDEENNKS 


இன்னும் ஃபேஸ்புக்,ட்விட்டர், வாட்ஸ்அப்களில் மட்டும்தான் ஆதார் கார்டை இணைக்க வேண்டியிருக்கிறது.

twitter.com/Kozhiyaar

ஞாயிற்றுக்கிழமையில் மனது மெதுவாகவும், கடிகாரம் வேகமாகவும் நகர்கின்றன!

twitter.com/nithratweets

பலரையும் கை நீட்ட வைத்துவிடுகிறது முதல் மழைத் தூறல்.

வலைபாயுதே

ட்ரெண்டிங்

​8-வது விம்பிள்டன், 19-வது க்ராண்ட் ஸ்லாம் என்று பறந்தடித்து வென்ற ரோஜர் ஃபெடரர்தான் இந்த வார வைரல், ட்ரெண்டிங், பரபரப்பு எல்லாமே. டென்னிஸ் தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் மரின் சிலிச்சை வென்று, ஐந்தாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி கெத்து காட்டினார் ஃபெடரர். ஐந்து வருடங்களுக்குப் பிறகு பெற்றுள்ள விம்பிள்டன் வெற்றி என்பதால், அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் இது ரொம்பவே ஸ்பெஷல். ஒரு செட்டும் தோற்காமல், ஃபெடரர் கோப்பையைக் கைப்பற்ற, பாராட்டித் தள்ளியது சோஷியல் மீடியா!   

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism