Published:Updated:

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content
உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

சில மாதங்களில் நம்மூரில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். மழை, மண்ணைக் குளிர்வித்து, உயிர்களுக்கு துணை புரிந்தாலும் சேதத்தையும் சில சமயம் ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இயற்கை நிகழ்வுகளில் இருந்து நம்மையும் நம்மைச் சார்ந்த பொருள்களையும் பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதால், சேதத்தை சமாளிக்கலாம். மழை மற்றும் குளிர்காலங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது, நம் வீட்டில் இருக்கும் உலோகப் பரப்புகளை நீர் மற்றும் ஈரப்பதம் பாதித்து, துருப்பிடித்து, அரித்துவிடக்கூடும், மரத்துக்கும் இதே நிலைமைதான். வருடாவருடம், கட்டிடங்கள், எந்திரங்கள் மற்றும் பலதரப்பட்ட உபயோகப் பொருள்களில் ஏற்படும் துரு மற்றும் அரிப்பு பல கோடி வரை நஷ்டத்தை ஏற்படுத்துகிறது!

துரு எவ்வாறு உருவாகிறது?

இரும்பு அல்லது ஸ்டீல் பரப்பு தொடர்ந்து நீர் அல்லது ஈரப்பதத்தில் இருக்கும்போது, வேதிவினை காரணமாக  பொருள்களின் மேற்பரப்பில் இருக்கும் இரும்பும் பிராணவாயுவும் இணைந்து அயர்ன் ஆக்ஸைடு (Iron Oxide)  ஆக மாறுகிறது, இதுவே சிவப்பு/பழுப்பு நிறத்தில் காணப்படும் துரு. மேற்பரப்பில் தொடங்கும் அரிப்பு, சாதனம் முழுவதையும் அரிக்க சில நாட்கள் முதல் மாதங்கள் ஆகிறது, அதற்குள் பொருள்களைப் பாதுகாக்க சில வழிகள் இதோ:

ஃபென்சிங், உலோகக் கதவுகள், வாயிற் கதவுகள், உலோகக் கூரைகள், தூண்கள், குழாய்கள், பால்கனி தடுப்புச்சுவர் போன்ற பலவகை உலோக அமைப்புகள் வீட்டில் காணப்படுகிறது. இவ்வாறான உலோக பரப்பில் காணப்படும் கறை, தூசு, ஏற்கனவே படிந்திருக்கும் துரு மற்றும் உரிந்து வரும் பெயின்டை உலோக வயர் பிரஷ் கொண்டு துடைக்க வேண்டும். பெரும்பாலான தூசு துரும்பை சாதாரணமாக தட்டி எடுத்த பின், சிறிய பிரஷ் கொண்டு மீதி துருவையும் துடைத்து எடுக்கவேண்டும்.

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

பெரிய பரப்பாக இருந்தால் நிபுணரின் துணையோடு பவர் வயர் பிரஷ்ஷிங் அல்லது அலுமினியம் ஆக்ஸைடு பேப்பர் பயன்படுத்தி டிஸ்க் சேண்டிங் செய்யலாம். இதனால் முடிந்தவரை துரு அகல்கிறது, அதன்பின், சோப்பு கலந்த நீர் கொண்டு பரப்பை மெழுகி தூய்மைப்படுத்த வேண்டும். இதற்கு பிறகு பெயின்ட் செய்வதன் மூலம் உலோகங்களை காக்கமுடிகிறது. நிப்பான் பெயின்ட் நிறுவனம் உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பத்தில் பல வகை உலோக பெயின்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

இதில் Bodelac Enamael மற்றும் Satin Enamel - உலோகங்களைக் காக்கும் பெயின்ட்களில் சிறப்பானவையாகத் தேர்வாகின்றன. ஈரப்பதத்தைத் தடுத்து நிறுத்தும் இந்தப் பூச்சுகள் சிறப்பான வழவழப்பான பினிஷ் கொடுப்பதோடு, காரங்கள் (Alkali) மற்றும் கறைகள் அண்டாமல் காக்கின்றன. கறைப்பட்டாலும் சுலபமாகத் துடைத்து எடுக்கமுடிவதும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பெயின்ட் என்பதும் சிறப்பம்சமாகும்.

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content


 
மரங்களைப் பொறுத்தவரை உளுத்துப் போன பாகங்களை அறுத்து எடுத்து புது மரத்துண்டுகள் வைத்து பினிஷ் செய்யலாம். இதன் மேல் தேவையில்லாமல் நீட்டிக்கொண்டுள்ள மரச் சில்லுகளை பட்டைக்கத்தி வைத்து நீக்கி, பள்ளங்களை அரக்கு வைத்து பூச வேண்டும். உப்புத்தாள் வைத்து தேய்த்து மேற்பரப்பை சீராக்கியபின், தூசு துரும்புகளை மென்மையான துணி வைத்துத் துடைத்து எடுக்கவும். 

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

இதன் மேல் ப்ரைமர் எனப்படும் மேல் கோட்டிங் கொடுத்து அதன்பின் பெயின்ட் செய்வதால் நீண்ட நாள்வரை மரப் பொருள்களை பாதுகாக்கலாம். நிப்பான் பெயின்ட் வழங்கும் Cleartone PU பாலியூரெதேன் பினிஷ், க்ளாஸ் மற்றும் மேட்  பினிஷ் ஆகிய இரு வகைகளில் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட மரப் பரப்புக்கும் ஏற்றதாக இருக்கிறது. Wood Magic மற்றும் Melamic வுட் பினிஷ் பெயின்ட்களில் நெடி மிக மிகக் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை மரச் சாமான்களுக்கு இதை அடித்தாலே பல வருடங்களுக்கு நீடித்து உழைப்பதுதான் இவற்றின் சிறப்பம்சம். ஈயம் இல்லாத பெயின்ட், ஆசிட் மற்றும் அல்கலி பாதிப்பில் இருந்து பாதுகாப்பு, நீண்ட உறுதி என தரத்தில் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் இருக்கின்றன நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் வுட் கோட்டிங்குகள்.

உலோகம் & மரம் - பராமரிக்க மறந்தால் கஷ்டந்தான்... Sponsored Content

மரம் மற்றும் உலோகச் சாமான்களை ஆசியாவின் நம்பர் 1 பெயின்டாக கருதப்படும் நிப்பான் பெயின்ட் மூலம் பராமரிப்போம், தேவையற்ற செலவைத் தடுப்போம்!

அடுத்த கட்டுரைக்கு