
twitter.com/Selvaa__
பயணிப்பது மிருகங்களுடன் என்று உணர்ந்தவன் மனிதம் பேசுவதில்லை.
twitter.com/Aruns212
மேனேஜரிடம் லீவு கேட்கும் அனைவருமே ‘வேதா’ விஜய் சேதுபதிகள்தான் #ஒரு கதை சொல்ட்டா சார்?
twitter.com/amuduarattai
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்.
twitter.com/rmdkarthik
எல்லா டீம்லேயும் ஒருத்தன் நான் இப்பவே பேப்பர் போட்டுட்டுப் போயிட்டே இருப்பேன்னு பீலா விடுவான். ஆனா, போகவே மாட்டான். அந்த ஆள்தான் வையாபுரி.
twitter.com/Aruns212
இப்பவெல்லாம் ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாட்டைப் பார்த்தால்,கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஓனரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஓனரும் ஆடறாங்கனு தான் தோனுது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
twitter.com/saravananucfc
வீட்டில் பாத்திரங்கள் சத்தம் அதிகமானாலே `பத்திரமாய் இரு’ என்பதற்கான எச்சரிக்கை மணி கணவன்களுக்கு.
twitter.com/sundartsp
இடி,மின்னல்... மழைக்கான விளம்பரங்கள்.
twitter.com/amuduarattai
இன்ஜினீயரிங் என்பது வாழ்ந்து கெட்ட படிப்பு.
twitter.com/inban_ofl
எப்படா வீட்டுக்கு வருவான்னு காத்துட்டு இருந்தா, அம்மா.இவன் எப்படி வீட்டுக்கு வரான்னு பாப்போம்னு Weapons-வோட காத்துட்டு இருந்தா, மனைவி.
twitter.com/kumarfaculty
ஒருவரை என்ன சொல்லியும் சிரிக்க வைக்க முடியவில்லையென்றால், உங்கள் கஷ்டத்தைச் சொல்லிப் பாருங்கள்.

twitter.com/Kozhiyaar
முப்பது வயதிலேயே ஓய்வைத் தேடும் இக்காலத்தில் அறுபதைத் தாண்டியும் இரவுக் காவலாளியாக வாழும் வாழ்க்கை பரிதாபக்குரியது.
twitter.com/thoatta
சிம்பு படத்துக்குக் கதை எழுதுறவன் எவனோதான் பிக்பாஸுக்கு டாஸ்க் ரெடி பண்றான்.
twitter.com/vijiraja4
காசு கொடுத்து ரீசார்ஜ் பண்ணினப்போ கூட எல்லோருக்கும் கால் பண்ணிப் பேசிட்டு இருந்தோம்போல. இந்த ஃப்ரீ காலிங் வந்தப்பறம் அதுவும் நின்னு போச்சு.
twitter.com/mekalapugazh
எந்தக் கல்லூரியில் இடம் ‘கிடைத்தது’ என்று கேட்பவரைவிட, எந்தக் கல்லூரியில் இடம் ‘வாங்கினீர்கள்’ என்று கேட்பவர் அதிகமான காலமிது.

twitter.com/sundartsp
மதிப்பில்லையென்றாலும் சில்லறைகளே பர்ஸை கனமாக்குகின்றன.
twitter.com/twittornewton
தொப்பை இல்லாத ஜிம் ட்ரெயினரை விட, தொப்பை இல்லாத பரோட்டா மாஸ்டர் ஆச்சர்யம் அளிக்கிறார்.
twitter.com/arunvelayutham
பெரியாரைப் படிச்சிருக்கேன், பெரியாரைப் படிச்சிருக்கேன்னு சொல்றாங்க. பெரியார் படிப்பதற்கல்ல, வாழ்வதற்கு.
twitter.com/kumarfaculty
விசேஷ வீட்டுக்காரர்களே பரிமாறி விருந்து உண்ட கடைசித் தலைமுறை நாம்.
twitter.com/mekalapugazh
கடந்த ஐந்து வருடங்களில் நடுத்தர மக்கள் அதிகம் தங்கள் சேமிப்பை இழந்த இடமும், ஏழைகள் கடனாளியாகக் காரணமும் தனியார் பொறியியல் கல்லூரிகளே.
twitter.com/Kozhiyaar
முப்பது வயதுக்குமேல் ஆண்களால் தவிர்க்கவே முடியாதது முடி கொட்டுவதையும்,மனைவி கொட்டுவதையும்.

ட்ரெண்டிங்!
ஒருமணி நேரத்தில் ஒரு ட்விட்டர் அக்கவுன்டுக்கு 30 லட்சம் ஃபாலோயர்கள் சேர்ந்தது இந்த வார ஹிட் ட்ரெண்ட்! விஷயம் சிம்பிள். முன்னாள் ஜனாதிபதி ப்ரணாப் முகர்ஜி, இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது அதிகாரப்பூர்வமாக உபயோகித்த ட்விட்டர் கணக்கில் 30 லட்சத்துச் சொச்சம் ஃபாலோயர்கள் இருந்தனர். புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும், அவருக்காக ஒரு ட்விட்டர் ஹேண்டில் வேண்டுமே. களத்தில் இறங்கிய ட்விட்டர் இந்தியா, POI13 என்ற கணக்கில் பழைய ட்விட்களைச் சேமித்து, அந்தக் கணக்கைப் பின் தொடர்ந்த ஃபாலோயர்களை ராஷ்ட்ரபதி பவன் என்ற @rashtrapatibhvn புதிய கணக்கில் சேர்த்து, ‘இந்தாபா... இதான் அஃபிஷியல். சொல்ட்டேன்’ என்று அறிவித்துவிட்டது. ஆக, ராம்நாத் கோவிந்த் லாகின் செய்யும்போதே, 30 லட்சம் டிஜிட்டல் நெட்டிசன்களுக்கு ஹலோ சொல்லிக்கொண்டு தான் ட்வீட்டினார்!