Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே
வலைபாயுதே

twitter.com/thoatta 

எல்லா பேட்டிங் ரெக்கார்டுகளையும் பார்த்து கோஹ்லி ‘என்னம்மா அங்க சத்தம்’ங்கிறார்.

twitter.com/Baashhu 


அனிதா மரணம் 10 நாள் முன்பு நடந்திருந்தா, உத்தமர் ஒ.பி.எஸ் அதையும் எடப்பாடி தலையில கட்டி நீதி கேட்டுப் போராடியிருப்பார்.

twitter.com/Pon_Madhu


`அனிதா  சாவுல அரசியல் பண்ணாதீங் க’ன்னு சொல்றவங்கலாம் யாருன்னு பாத்தா, சுவாதி கொலையில அரசியல் பண்ணினவங்கதான்.

twitter.com/manipmp 

கம்மியா மார்க் எடுத்துத் தற்கொலை செய்த காலம் போய்... இப்போ அதிகமா மார்க் எடுத்துத் தற்கொலை பண்ணிக்கிற காலம் வந்திருச்சி! #புதிய இந்தியா.

twitter.com/karthik_twittz 

எவ்ளோ மழை வந்தாலும், சரியான நேரத்துல வர்ற பால்காரர் வியப்பின் சரித்திரக் குறியீடு!

twitter.com/Senthilbds 

 உண்மையில் தரம் வேணும்னு நினைக்கிறவனுங்க, 600 மார்க் எடுத்துட்டுக் காசு கொடுத்து மருத்துவம் படிக்கிறவனையில்ல தடுக்கணும்.

twitter.com/Kozhiyaar


இனிக் குழந்தைகளிடம் ‘என்னவாகப் போகிறாய்?’ என்று கேட்பதை நிறுத்திக் கொள்வது நலம்.

twitter.com/SingHem 

ஓலா கேப் அண்ணே.. ரைட்ல போங்க அங்கதான் வீடு.

முடியாது, மேப் நேராப் போகச் சொல்லுது அப்படித்தான் போவேன்.

#தட் தலைகீழாகத்தான் குதிப்பேன் மொமென்ட்.

வலைபாயுதே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/ashoker

 சுப்ரீம்கோர்ட் போறதுக்கு யாரு ஸ்பான்சர்னு ஒரு அறிவுஜீவி கேள்வி. எளியோர் பணம் இல்லாம கோர்ட் போக  முடியாதுங்கறதுக்கே நீங்க வெக்கப்படணும்.

twitter.com/Bhoobalan_twitz

நான் ஒரிஜினல் லைசன்ஸைக் காட்டுறேன்.

உங்களால தமிழ்நாட்டோட ஒரிஜினல் முதல்வரைக் காட்ட முடியுங்களா ஆபீஸரே?

twitter.com/Aruns212 

விவசாயிகள் மகிழ்ச்சி’ என்று செய்தித்தாளில் வர வைப்பதற்கு, ஆண்டாண்டு காலமாக ‘மழையால் மட்டுமே முடிகிறது.

twitter.com/chithradevi_91 

இனி அரசு மருத்துவமனைக்குப் போகணும்னா, வெறும் நோயோட மட்டுமில்ல...  இந்திப் பேசுற வாயோடவும் போகணும்.

twitter.com/KabilanVai 

அடிப்படை உரிமைகளைக்கூட வீதிக்கு வந்து போராடித்தான் பெற வேண்டும் என்ற சூழலுக்குப் பெயர் ஜனநாயகம் அல்ல. போர்க்களம்.

twitter.com/mohandreamer 

தமிழக அரசே... நீ போராடு. இல்லை எங்களைப் போராடவிட்டு ஒதுங்கி நில். உங்கள் 150 பேர் சுயநலத்திற்காக எங்கள் ஏழு கோடிப் பேரை வதைக்காதே.

twitter.com/BoopatyMurugesh 

 டெல்லிக்காரன் சொல்றதை அப்படியே எங்ககிட்ட சொல்ல எதுக்கு மாநில அரசு? அதுக்கு டி.வி போதாதா?

twitter.com/udanpirappe


RBI: 99 சதவிகிதம் பணம் பேங்குக்குத் திரும்ப வந்திருச்சு, ஓவர் ஓவர்.

அப்போ கருப்பு பணம்?

RBI: அது பத்திரமா சுவிஸ் பேங்க்ல இருக்கு, ஓவர் ஓவர்.

twitter.com/thoatta 

விஜயகாந்தின் புரிதல் நல்லாயிருக்கு. ஆனா, டெலிவரிதான் நெஹ்ரா மாதிரி இருக்கு.

twitter.com/thirumarant 

 செயல்படாத அரசை விட இந்த untrust worthy அரசு மிகவும் ஆபத்தானது... பொய்யான நம்பிக்கைகள், அறிக்கைகள், பேட்டிகள். முற்றிலும் நம்பகத் தன்மையற்ற அரசு

வலைபாயுதே

facebook.com/Narain Rajagopalan

Pachyderm

Tusker

Mastodon

கூகுளிடாமல், டிக்‌ஷனரி பார்க்காமல் இந்த மூன்று சொற்களுக்கான பொருள் என்ன என்று இன்ஸ்டன்டாகச் சொல்ல முடியுமா?

பதில்: பெரும்பாலானவர்களால் முடியாது.

பொருள்: யானை.

ஆக யானை என்கின்ற விலங்கு தெரிந்த எல்லோருக்கும் மேற்சொன்ன மூன்று ஆங்கிலச் சொற்கள் அதைத் தான் குறிக்கின்றன என்பது தெரியாது. அவ்வளவே.

யானையைத் தெரியாமல் இருக்க முடியாது. ஆனால், அதையே நாம் படிக்காத மொழியில், நமக்குத் தெரியாத வழிமுறையில் கேட்டால் நாம் திருதிருவென முழிப்போம். இதனால் நமக்கு ‘யானை’ தெரியாது என்கிற அர்த்தமில்லை. யானை என்கிற பெயர்ச்சொல் இதுநாள்வரை நாம் கேட்டிராத, படித்திராத, பார்த்திராத வழிமுறையில் வரும்போது தான் நமக்குத் தெரியாமல் போகிறது.

இதைத்தான் சமூக நீதி பேசும் எல்லோரும் சொல்கிறோம். எங்கள் குழந்தைகளுக்குப் பொருள் தெரியாமலோ, அதன் ஆழம் புரியாமலோ இல்லை. ஆனால், அதைப் புரியாத சூழலில், பிடிபடாத மொழியில், படித்திராத வழிமுறையில் கேட்டால் திணறத்தான் செய்வார்கள்.
அதற்குப் பொருள், எங்கள் குழந்தைகள் திறனற்றவர்களோ, படிப்பறிவற்றவர்களோ, புரிதல் சக்தியற்றவர்களோ கிடையாது. அவர்களுக்குத் தெரிந்த, புரிந்த, கற்றுக்கொண்ட சூழலின் வழியே கேட்டால் இந்தத் தகுதித் தேர்வல்ல, உலகின் எந்தக் கடினமான தகுதித் தேர்வையும் எதிர்கொண்டு வெல்வார்கள்.

நாங்கள் கேட்பது இதைத்தான். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங் களுக்கும், அந்தந்த மாநில மொழியில் ப்ளஸ் டூ வரை கல்வி கற்றவர்களுக்கும் பொருந்தும். இதைத்தான் நாங்கள் உரத்துக் கேட்கிறோம். தேசிய மாயையில் மயங்கிக் கிடக்கும் மற்றவர்கள் கேட்காமல் மயங்கிக் கிடக்கிறார்கள்.

இத்தனை தசாம்சங்களாகச் சிறந்த மருத்துவர்களை உருவாக்கத் தெரிந்த எங்களுக்கு இனிமேலும் சிறப்பான மருத்துவர்களை உருவாக்கத் தெரியும். நியாயமாய்ப் பார்த்தால், எங்களுடைய இந்த மாடலைத்தான் தேசிய அரசு ‘best practice’ ஆக கையில் எடுத்துக்கொண்டு இந்திய யூனியன் முழுக்கக் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால், இங்கே நடப்பது தலைகீழாக இருக்கிறது. அதனால் தான் நீக்கச் சொல்கிறோம். It’s plain simple common sense. Period.

உலகின் எல்லா குழந்தைகளுக்கும் யானைகள் தெரியும். அவர்களை சிஸ்டம் வழியாகத் தங்களுக்கு தெரியாது, புரியாது, கடினமான விஷயமிது எனப் பிரம்மைகளையும், குற்றவுணர்ச்சியையும், தாழ்வு மனப்பான்மையையும் உருவாக்கிக் கொல்லாதீர்கள்.

facebook.com/Sa Na Kannan

இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டியை ஒளிபரப்பி வரும் சோனி சிக்ஸ், ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சி. இந்திக்கெனத் தனியாக இன்னொரு தொலைக்காட்சியும் உண்டு. அதனாலெல்லாம் இந்தியைத் திணிக்காமல் இருந்து விடுவார்களா என்ன? சோனி சிக்ஸில் கிரிக்கெட் போட்டியின் இடைவேளையில் ஒளிபரப்பாகிற நிபுணர்கள் கலந்துரையாடலின் போது பாதி ஆங்கிலம், பாதி இந்தி என்று கொஞ்சம்கூட லஜ்ஜையே இல்லாமல்தான் பேசுகிறார்கள். நாட்டில் பலருக்கு இந்தி புரியாதே, அப்படியே புரிந்தாலும் இது ஓர் ஆங்கிலத் தொலைக்காட்சியாச்சே, இந்தியை நுழைப்பது எவ்விதத்தில் முறையானது என்கிற கேள்விகளுக்கெல்லாம் அங்கு இடமில்லை. அந்தளவுக்கு மொழி வெறி. இந்தி தேசிய மொழி, நீ அதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிற சர்வாதிகாரப் போக்கின் வெளிப்பாடு. இவ்விதத் திணிப்பை
ஐ.பி.எல்-லில் ஆரம்பித்தார்கள். சரி, ஏதோ உள்ளூர் போட்டி என்று விட்டுவைத்தால் சர்வதேசப் போட்டிகளிலும் நைஸாக இந்தியை இப்போது நுழைத்துள்ளார்கள். அடுத்தகட்டமாக ஆங்கில வர்ணனைக்கு நடுவில் ஹர்ஷா போக்ளேவும் கவாஸ்கரும் இந்தியில் உரையாடினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism