Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

Published:Updated:
வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
வலைபாயுதே

facebook.com/Sarav Urs

20 வயசில பார்க்கிற பொண்ணுங்க எல்லாம் பிடிக்குது... 30 வயசில எல்லோரையும் விட்டுட்டு ஒருத்திய மட்டும் பிடிக்குது... 40 வயசில அந்த ஒருத்திய விட்டுட்டு மற்ற எல்லோரையும் பிடிக்குது..!

#Male_Life

twitter.com/Boopaty Murugesh

கல்யாணத்துல பொண்ணைவிட பொண்ணோட தங்கச்சி அதிகமா மேக்கப் போட்டு சுத்துற மாதிரி இந்த ஆட்சில அதிமுகவை விட பிஜேபிகாரனுங்கதான் ஆக்டிவா இருக்கானுங்க..!

twitter.com/Jeytwits 

அப்படி அந்த டிவில என்னதான் இருக்கோவென பெண்களிடம் சலித்து கொண்ட ஆண்களுக்கு, பதிலடி கொடுக்கும்விதமாய் கண்டுபிடிக்க பட்டதே ஸ்மார்ட்போன்கள்.

வலைபாயுதே

twitter.com/Kozhiyaar 

பேச்சுத்திறமை இருப்பவர்கள் ஒன்று அரசியலில் சேர்கிறார்கள் இல்லை... ‘ஆம்வே’யில் சேர்ந்துவிடுகிறார்கள்!

twitter.com/freakoffl


ரோட்ல தனியா பொலம்புறவன் பைத்தியக்காரன்...

டிவிட்டர்ல பொலம்புறவன் பிரபல கீச்சாளர்..!

twitter.com/drkvm 

அடுத்த கட்டம்... அடுத்த கட்டம்ன்றாரே தவிர, செயல்பட மாட்டேன்றாரே... செயல் தலைவர்...

twitter.com/G_for_Guru

ஒரு காலத்துல நாம பார்த்து ரொம்ப மிரண்ட ஆஸிய இப்புடி புறங்கைல டீல் பண்றதெல்லாம் பாவம் மை சன் கோலி.

twitter.com/chithradevi_91 

உலகத்துல கஷ்டமான விஷயம் எதுனா... நமக்கு யாராவது அட்வைஸ் பண்றப்ப வர்ற சிரிப்பை அடக்கிக்கிட்டு சீரியஸா மூஞ்சை வெச்சிருக்கற மாதிரி நடிக்கிறதுதான்.

twitter.com/Jeytwits

உண்மையில் ‘ஒரு நாள் கூத்து’ என்பது ஞாயிற்றுக்கிழமைக்கே சரியாய் பொருந்தும்.

வலைபாயுதே

twitter.com/Thaadikkaran

ஃபாரின்ல இருந்து வர்றவங்களை எல்லாம் சென்ட் வியாபாரியாதான் பாக்குறாங்க..!

twitter.com/kalpbagya32

உணவே கடவுள் என்றவன் ஒருவன்! அந்த உணவைத்தான் சைவம், அசைவம் எனப் பிரித்தான் இன்னொருவன்!!

twitter.com/HAJAMYDEENNKS 

 உண்மையில் ஞாயிற்றுக்கிழமை நம்மை சுயபரிசோதனை செய்துகொள்ள உதவுகிறது..!

twitter.com/erasaravanan 

 அப்போ சாவுல சந்தேகம்னு சொன்னோம்; பெரும்பான்மை நிரூபிக்க போயிட்டாங்க. இப்ப பெரும்பான்மை நிரூபிக்கச் சொல்றோம்; சாவுல சந்தேகம்னு சொல்றாங்க!

twitter.com/HAJAMYDEENNKS

இட்லியும் இடியாப்பமும் நோயாளிகளுக்குச் சிறந்த உணவு...

பீட்சாவும் பர்கரும் நோயாளிகளையே உருவாக்கும் உணவு...!

வலைபாயுதே

twitter.com/itz_me_Raja

மாமியா மருமக சண்டைல, மனைவி பக்கமும் இல்லாம, அம்மா பக்கமும் இல்லாம, பீரோ பக்கத்துல நிப்பவனே சிறந்த குடும்பஸ்தன்..!

twitter.com/HAJAMYDEENNKS 

படிக்கிற காலத்துல படிக்கிறது மட்டும்தான் கஷ்டமா இருந்துச்சு... படிச்சு முடிச்சதுக்குப் பிறகு எல்லாமே கஷ்டமா இருக்கு..!

twitter.com/Jeytwits

குப்பை போடாதே, சிறுநீர் கழிக்காதே என எழுதுவதைவிட இங்கு CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது என எழுதுவதே அதிக பயனைத் தரும்..

twitter.com/SKtwtz 

உதவி என்றால் அது பணம் என்றே பலரால் நம்பப்படுகிறது.

twitter.com/thoatta

கடைசில, அப்போலோ ஆஸ்பத்திரியிலே நாங்க அம்மாவ பார்க்கலன்னு சொல்ல போறாங்க..!

twitter.com/MJ_twets

டாக்டர் எழுதுற எழுத்தைப் பார்த்தே பாதி நோய் சூசைடு பண்ணிக்குது.

வலைபாயுதே

twitter.com/Aruns212

பள்ளிகளில் எல்லாம் ஆங்கிலம் மற்றும் இந்தி வழியை ஊக்குவித்துவிட்டு, படங்களின் பெயரைத் தமிழில் வைத்தால் தமிழ் வளர்ந்துவிடும் என நம்புகிறோம்.

twitter.com/CreativeTwitz

அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுத்த அம்மாவுக்கே கடைசில ஒரு இட்லில climax வெச்சிடுச்சு வாழ்க்கை.

twitter.com/dhayai

முகநூல் என்பதே...

ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு ;)

facebook.com/Araathu R

வேலை இல்லை!

கேம்பஸ் இன்டர்வியூ படுத்து விட்டது. ஆஃப் கேம்பஸ் இன்டர் வியூ ஆப்பு. பல நிறுவனங்களும் ஆட்களைக் குறைத்துக்கொண்டு இருக்கின்றன. பலர் வேலை இழந்து விட்டார்கள்.

இவையெல்லாம் எம்.என்.சி எனப் படும் மல்டி நேஷனல் நிறுவனங்களை வைத்துச் சொல்லப்படுபவைகள்.

ஸ்மால் மீடியம் என்டர்பிரைசஸ் எனப்படும் சிறு நிறுவனங்களைப் பற்றி யாரும் மூச்சுவிடுவதில்லை.

நியாய தர்மம் பேசும் எல்லோரும் பெரு நிறுவனங்களுக்கே வேலைக்குப் போவார்கள். வேலையைவிட்டுத் துரத்தி விட்டால், சுரண்டல் அது இது என்று புலம்புவார்கள்.

சிறு நிறுவனங்களை நடத்தி வந்த பலர் மூடியே விட்டார்கள். மீதி இருக்கும் சிறு நிறுவனங்களும் இழுத்துக்கோ, பிடிச்சிக்கோ என்று இழுத்துக்கொண்டு கிடக்கின்றன.

சிறு முதலாளிகள் இதுவரை ஈட்டிய லாபம் மொத்தத்தையும் கொட்டி னாலும் நிறுவனத்தைத் தூக்கி நிறுத்த முடிவதில்லை.

இதற்கு முழுமுதற் காரணம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள்தான்.

இது இப்படி இருக்க...

படித்து முடித்துவிட்டுக் காத்திருக் கும் யாரும் வேலையில்லை என்று விரக்தியில் எல்லாம் சுத்தவில்லை.

பைக், ஸ்மார்ட்போன் , மால், கேர்ள் ஃப்ரெண்ட் என ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரஷர் இல்லை; வேலை தேடியாக வேண்டும் என்ற டிசையர் இல்லை.

வேலை இல்லை என்ற கூக்குரல் கேட்கும் அதே நேரத்தில் வேலைக்கு ஆள் வேண்டும் என்று விளம்பரத்துக்கும் குறைந்த அளவே ஆட்கள் வருகிறார்கள், அதாவது இளைஞர்கள்.

இதற்குக் காரணம், 45- 50 வயதுக்குள் இருக்கும் இளமையான தந்தைமார்கள்தான். தான் வேலைக்காகப் பட்ட கஷ்டம் தன் மகன் பட வேண்டாம் என அவர்கள் நினைப்பதுதான் காரணம்.

பைக்கை வாங்கிக்கொடுத்து, ஜாலியா சுத்துடா, வேலை கிடைக்கிறப்ப பார்த்துக்கலாம் என அனுப்பி விட்டு அவர்களும் ஹாயாகச் சுற்றி கொண்டிருக்கிறார்கள்.

facebook.com/வாசுகி பாஸ்கர்

நாம் உண்ணும் ஒவ்வொரு பரோட்டாவிலும், பரோட்டா மாஸ்டரின் வியர்வை கலந்து இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

facebook.com/tvignesh49/

கடவுள் குறும்புக்காரர். நமது கைகளில் மத்தளத்தைக் கொடுத்து விட்டு ‘நலந்தானா’ வாசிக்கச் சொல்வார். என்னடா டொட டொடடோ...

facebook.com/Saravana karthikeyan Chinnadurai

எனக்கென்னவோ முருகதாஸையும் விஜய்யையும் லாடம் கட்டினால் அப்போலோ விஷயத்தில் ஏதேனும் உண்மை கிடைக்கலாம் எனத் தோன்றுகிறது. அவர்கள்தான் இட்லியை வைத்து பூடகமாய் அரசியல் வசனம் பேசினர்.

Karl Max Ganapathy

இதாங்க தொர்மாகோல், இத வெச்சி ஆத்த மூடிறலாம்னு சொன்னா, செல்லூர் ராஜுன்னு இல்ல, அதிமுகவுல இருக்க எந்த மந்திரியும் ஓகேன்னுதான் சொல்லிருப்பாய்ங்க. அதுதான் அதிமுகவோட பலமே.