twitter.com/taraoffcl
காதலைச் சொல்லிவிட்டு பதிலுக்குக்கூடக் காத்திருப்போம்... ஆனால், மொபைல் சார்ஜ் போட்டு இரண்டு நிமிடம்கூடப் பொறுத்திருக்க முடியவில்லை... #இன்னுமா_ஃபுல்_ஆகல
twitter.com/azam_twitz
ரோட்டில் விழுந்துகிடப்பவர்கள் எல்லாம் குடிகாரர்கள்தான் என்று எண்ணிவிடக் கூடாது. ஒருவேளை “Low sugar” பேஷன்டாகக்கூட இருக்கலாம்!

twitter.com/mekalapugazh
பாஜகவுக்கு அபாய மணி ஒலித்திருக்கிறார் ராகுல், குஜராத் மக்களுடன் சேர்ந்து.
twitter.com/Kozhiyaar
நம்ம பயலுக அடிச்சி பிடிச்சி வேலைல சேருவது காசு சம்பாதிக்கிறதுக்கு இல்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுக்குத்தான்!
facebook.com/வசு மித்ர
என் அகராதியில் பலி என்பது களப்பலியாகவும் வீரமரணம் என்பது சம்பளத்துக்கு சாவதுமாகிறது.
facebook.com/பா.மீனாட்சி சுந்தரம்
குஜராத்ல ஜெயிச்சிட்டாங்க அடுத்து என்ன சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கோ தெர்லயே
twitter.com/Kadharb32402180
ராஜஸ்தானுக்கு திருட்டுக் கும்பலைப் பிடிக்க 3 பேர் போறாங்க. மெயின் ரோட்டுல ஹெல்மெட் இல்லாம வர்றவனைப் பிடிக்க 6 பேர் ரவுண்டு கட்டி நிக்குறாங்க... வாழ்க தமிழக போலீஸ்!
twitter.com/HAJAMYDEENNKS
ஆண்களுக்குத் தொப்பை இருப்பது பிரச்னை அல்ல... அதை மறைப்பதுதான் பிரச்னை...!
twitter.com/Surya_BornToWin
தமிழக பா.ஜ.க அலுவலகத்துல வெடி வெடிச்சி கொண்டாடுறாங்க! கடைசி வரைக்கும் இப்படி பக்கத்து வீட்டுக் கல்யாணத்துக்கே பக்க வாத்தியம் வாசிக்க வேண்டியதுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

twitter.com/iaaruran
ஆண்கள் அழுவதில்லை, உடைந்து போவார்கள்...
twitter.com/Saranya_twit
உன்னுடைய எல்லாச் செயலுக்கும் எவன் “ஆமாம்”போடுகிறானோ அவனே இறுதியில் உனக்கு “நாமம்” போடுவான்...
twitter.com/thoatta
சீமான் பேசறதை மனப்பாடம் பண்ணி, விஜய் டிவி க.போ.யாருல ஸ்டேண்டப் காமெடின்னு சொல்லி பர்ஃபாமன்ஸ் செஞ்சா, சேம்பியனாகிடலாம்.
twitter.com/kumarfaculty
உலகின் முதல் கண்ணாடி தண்ணீர்...!
twitter.com/Kozhiyaar
ஒரு வயசுக்கு மேல உயிர்பயம் இருக்காது!
உயிரோடு இருப்பதுதான் பயமாக இருக்கும்!