Published:Updated:

பிரியங்காவின் உடை சர்ச்சை பற்றி டாக்டர் ஷாலினி சொல்வதென்ன?

பிரியங்காவின் உடை சர்ச்சை பற்றி டாக்டர் ஷாலினி சொல்வதென்ன?
பிரியங்காவின் உடை சர்ச்சை பற்றி டாக்டர் ஷாலினி சொல்வதென்ன?

பொதுவெளியில் இயங்குகிற பெண்களின் அறிவை விமர்சிப்பது ஆரோக்கியமான விஷயம். ஆனால்,  நம் சமுதாயம் இன்னமும் அப்படிப்பட்ட பெண்களின் வெளிப்புறத் தோற்றத்தையும் உடை அணிகிற பாங்கையும்தான் விமர்சனம் என்ற பெயரில் கேலி, கிண்டல் செய்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காங்கிரஸின் பிரியங்கா காந்தியை, பா.ஜ.க-வின் ஹரிஷ் திவேதி, `டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ், டாப் என்று வலம் வரும் பிரியங்கா, தன்னுடைய தொகுதிக்குச் செல்லும்போது மட்டும் புடவை கட்டி, பொட்டு வைத்துச் செல்கிறார்' என்று விமர்சித்து இருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகிக் கொண்டிருக்கிற வேளையில், இது குறித்து டாக்டர் ஷாலினியிடம் பேசினோம். 

``ஜீன்ஸ் போட்டுக்கிட்டு டெல்லியில் நடமாடலாம். ஆனால், அதைப் போட்டுக்கிட்டு கிராமத்து வயக்காடுகளில் உட்கார்ந்து பொதுமக்கள்கிட்டே பேச முடியுமா. அது எத்தனை அசெளகர்யமாக இருக்கும். கிளைமேட்படி பார்த்தால்கூட கிராமங்களில், வெயிலில் நடமாட காட்டன்  டிரெஸ்தான்  செளகர்யம். ஜீன்ஸ் பேன்ட்  நல்ல சாய்ஸ் கிடையாது. இது எல்லோருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை சென்ஸ். அவ்வளவுதான்.

அரசியலில் இருக்கிற ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், அவங்களுடைய பொலிடிக்கல் ஐடியாலஜியைப் பற்றி விமர்சனம் பண்ணணும். அவங்க போட்டுட்டிருக்கிற டிரெஸ்ஸை அட்டாக் பண்றாங்கன்னா அவங்களுக்கு வேற எதுவும் பாயின்ட் கிடைக்கலைன்னு அர்த்தம்.  பொதுவெளியில் வருகிற பெண்களை, அவருடைய உருவத்தை வைத்து கிண்டலடிப்பார்கள். அல்லது  உடுத்துகிற ஆடை விஷயத்தில் குறை கண்டுபிடிப்பார்கள். பிரியங்கா காந்திக்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் இதில் இருந்து கிடைக்கிற ஒரு செய்தி, நீங்க நாகரிகமாக உடை அணிந்திருந்தாலும் ஆண்களின் விமர்சனத்துக்கு உள்ளாகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஸோ, பிரச்னை உங்களிடம் இல்லை என்பதால், ஜஸ்ட் கோ அஹெட் கேர்ள்ஸ்..!''