Published:Updated:

டென்னிஸ் பேட்டை பந்தாடும் செரினா வில்லியம்ஸ் மகள்... வைரலாகும் வீடியோ!

டென்னிஸ் பேட்டை பந்தாடும் செரினா வில்லியம்ஸ் மகள்... வைரலாகும் வீடியோ!
டென்னிஸ் பேட்டை பந்தாடும் செரினா வில்லியம்ஸ் மகள்... வைரலாகும் வீடியோ!

டென்னிஸ் பேட்டை பந்தாடும் செரினா வில்லியம்ஸ் மகள்... வைரலாகும் வீடியோ!

தாயைப்போல பிள்ளை; செரினா வில்லியம்ஸைப் போல அவருடைய மகள் அலெக்ஸிஸ் ஒலிம்பியா. யெஸ்,  ஒன்றரை  வயதே ஆன இந்தச் சுட்டி, தன் அம்மா செரினாவின் டென்னிஸ் ராக்கெட்டுகள் எல்லாவற்றையும், ஒவ்வொரு அறையாக நுழைந்து எடுத்து வந்து, ஹாலில் வைக்கிறாள். ஒரு ராக்கெட்டை தரையில் வீசவும் செய்கிறாள். குட்டி செரினாவுக்கு, விம்பிள்டன் சாம்பியனின் ராக்கெட்டுகள் விளையாட்டுப் பொருள்களாகத் தெரிகிறதுபோலும். 

மகளின் இந்த செல்ல சேட்டையை வீடியோ எடுத்து, 'ஒரு வரலாறு  உருவாக்கத்தில் இருக்கிறது' என்று தன்னுடைய இன்ஸ்டாவில் போஸ்ட் செய்திருக்கிறார், செரினா. இந்த வீடியோதான் இப்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை, கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் இந்த க்யூட் சுட்டியின் வீடியோவைப் பார்த்து ரசித்திருக்கிறார்கள். 

மகளின் இந்த வீடியோவைப் பார்த்து செரினாவின் கணவர் அலெக்ஸிஸ் ஓஹானியன், ''அந்த ராக்கெட்டை அடித்து நொறுக்கு மகளே' என்று உற்சாக கமென்ட் இட்டிருக்கிறார்.  சிலர், 'நம்முடைய அடுத்த டென்னிஸ் ஸ்டார் உருவாகிவிட்டாள். அலெக்ஸிஸ் பிறவி சாம்பியன்', 'எதிர்கால கிராண்ட் ஸ்லாம் சாம்பியன்' என்று வாழ்த்த, சிலரோ... 'டென்னிஸ் ராக்கெட்டை தரையில் அடிப்பது டென்னிஸ் விதிப்படி தவறு. இரண்டு வார்னிங் கொடுத்தாச்சு' என்றும் 'டென்னிஸ் ராக்கெட்டை தரையில் போட்டால், அது மரமாக வளரும் என்றும் நினைத்துவிட்டாளோ' என்றும் செல்லமாகக் கேலி செய்திருக்கிறார்கள். 

வருங்கால சாம்பியனுக்கு வாழ்த்துகள்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

History in the making....

A post shared by Serena Williams (@serenawilliams) on

அடுத்த கட்டுரைக்கு