Published:Updated:

`துறுதுறுப்பான கண்கள்!'- பிறந்தநாளில் வெளியிடப்பட்ட டயானாவின் பேரன் லூயிஸ் போட்டோ

ஆ.சாந்தி கணேஷ்
`துறுதுறுப்பான கண்கள்!'- பிறந்தநாளில் வெளியிடப்பட்ட டயானாவின் பேரன் லூயிஸ் போட்டோ
`துறுதுறுப்பான கண்கள்!'- பிறந்தநாளில் வெளியிடப்பட்ட டயானாவின் பேரன் லூயிஸ் போட்டோ

ங்கிலாந்து இளவரசரின் மூத்த மகனான வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியின் மூன்றாவது மகனுக்கு இன்று முதல் பிறந்த நாள். பிங்க் நிற கன்னங்களும் இரண்டே இரண்டு பற்கள் முளைத்த சொப்பு வாயுமாக இருக்கிற இந்தச் சின்னச் சுட்டியின் பெயர் லூயிஸ். இங்கிலாந்து அரசக் குடும்பத்தைப் பொறுத்தவரை இளவரசர் லூயிஸ், 58 வருடப் பாரம்பர்யத்தை பிரேக் செய்த குழந்தை. இதற்கு முன்னாள் ராணி எலிசபெத்துக்கு 4 குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். அடுத்த தலைமுறையில் எல்லோருக்குமே தலா இரண்டு குழந்தைகள் மட்டுமே. இரண்டு தலைமுறைகள் தாண்டி, வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதிக்குத்தான் மூன்றாவது குழந்தையாக லூயிஸ் பிறந்தான். ஸோ, பிறப்பதற்கு முன்னரே அந்நாட்டு மக்களின் பாசத்துக்குரியவனாக இருந்த லூயிஸ்க்கு முதல் பிறந்த நாள் என்பதால், அந்நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறார்கள். 

கடந்த ஒரு வருடமாக, தன் மூன்றாவது மகனை கிட்டத்தட்ட வெளியுலகத்துக்குக் காட்டாமல் வைத்திருந்த வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதி, மகனுடைய முதல் பிறந்த நாளையொட்டி லூயிஸ்ஸின் மூன்று புகைப்படங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறார்கள். முதல் படத்தில் ப்ளூ கலர் ஜம்பரில் நாய்க்குட்டியின் படம் எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. மற்ற இரண்டு படங்களிலும் பர்கண்டி நிற ஜம்பர், பீட்டர் பேன் காலர் வைத்த வெள்ளை நிறச் சட்டையுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் இந்தச் சின்ன இளவரசன். இந்த இரண்டு படங்களையும் கடந்த ஞாயிறன்று ஈஸ்டர் பண்டிகையின்போது எடுத்திருக்கிறார்கள். இடப்பக்கமாகப் படிய வாரிய ஹேர்ஸ்டைல், துறுதுறுப்பான கண்கள் என்று அந்த மூன்று படங்களிலும் லூயி செம க்யூட். 

PC: www.instagram.com

ராயல் குடும்பமாக இருந்தாலும், தங்கள் மகனுடைய பிறந்த நாளை (இன்று) நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சிம்பிளாக டீ பார்ட்டி போல கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்களாம் வில்லியம் தம்பதி

ஹேப்பி பர்த்டே லூயிஸ்.