Published:Updated:

ஒரே லுக்கில் உலகையே கவர்ந்த இந்த வைரல் பூனையின் பின்னணி தெரியுமா?

வைரல் பூனை ஸ்மட்ஜ்
News
வைரல் பூனை ஸ்மட்ஜ்

தற்போது, இந்தப் பூனையை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலானவர்கள் பின் தொடர்கின்றனர்!

“எப்படிப்பா இந்த மாதிரிலாம் கன்டன்ட் பிடிச்சி மீம் போடுறீங்க”
சமூக வலைதளங்களில் தினசரி பல மீம்களை ஸ்க்ரால் செய்யும்போது, பலமுறை இப்படி ஆச்சர்யப்பட்டிருப்போம்.

அரசியல் செய்திகள், சினிமா நிகழ்வுகள், டிக் டாக் சேட்டைகள், கல்லூரியில் நடக்கும் காமெடிகள் என நம்ம ஊரு மீம் கிரியேடர்ஸ் தினமும் ஒரு டிரெண்ட் பிடித்து, ஏதேனும் வகையில் நம்மை சிரிக்கவைத்துக்கொண்டேதான் இருக்கின்றனர். அப்படி டிரெண்ட் எதுவும் சிக்கவில்லை என்றால், அவர்களே ஒரு கன்டன்ட் பிடித்து அதை டிரெண்ட் ஆக்கிவிடுகிறார்கள்.

அப்படி, கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் அதிகம் டிரெண்டான ஒரு மீம் டெம்ப்ளேட் ஒன்று இருக்கிறது. அதை நாம் ஏதாவது ஒரு மீம் பக்கத்தில் நிச்சயம் கடந்திருப்போம். பெண் ஒருவர், ஒரு வெள்ளைப் பூனையைப் பார்த்து ஆவேசமாக கை நீட்டி கத்துவதுபோலவும் அதற்கு அந்தப் பூனை, தனக்குப் பிடிக்காத காய்கறிகளை உணவாக வைத்ததை எண்ணி வருத்தத்துடன் அந்தப் பெண்ணைப் பார்த்து “இந்த அம்மா எதுக்கு நம்மளைப் பார்த்து இப்படி கத்திக்கிட்டு இருக்காங்க” என்று அப்பாவித்தனமாக ஒரு பார்வை பார்க்கும். ஆவேசமான ஒரு பக்கம், அப்பாவியான இன்னொரு பக்கம் என இந்த டெம்ப்ளேட்டை பல கான்செப்ட்டுகளில் சோஷியல் மீடியாவில் மீம்கள் வலம்வந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சரி, இந்தப் பூனையின் பின்னணி என்ன என்று தேடியபோது, இந்த டெம்ப்ளேட்டிற்குப் பின்னால் இருக்கும் பல சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.

இந்த டெம்ப்ளேட்டில் உள்ள இரு புகைப்படங்களும் இருவேறு இடத்திலிருந்து ஒன்றாகச் சேர்க்கப்பட்டதாகும். இடப்பக்கத்தில் கத்திக்கொண்டிருக்கும் பெண்ணின் பெயர், டைலர் ஆம்ஸ்ட்ராங். 2011ல் வெளிவந்த “The Realhousewives of the Beverly Hills” என்னும் அமெரிக்க தொடரில் வரும் காட்சி அது. வலப்பக்கம் உள்ள பூனையின் பெயர் ஸ்மட்ஜ் (Smudge).

ஸ்மட்ஜ் (Smudge)
ஸ்மட்ஜ் (Smudge)

கனடா நாட்டைச் சேர்ந்த ஸ்மட்ஜின் இந்த வைரல் புகைப்படம் குறித்து அதன் உரிமையாளர் மிரண்டா, “ரொம்ப பாசக்கார பூனை பாஸ் அது , உங்களோட கொஞ்ச நேரம் பழகுனா போதும் அப்புறம் உங்களையேதான் சுத்திச்சுத்தி வரும். தினமும் எங்க டின்னர் டேபிள்ல ஸ்மட்ஜ் உட்காரவே தனியா நாற்காலி ஒண்ணு குடுத்துருவோம். அப்படி குடுக்கலனா நேரா டேபிள் மேல ஏறி எங்களைச் சாப்பிடவே விடாது. அப்படி ஒருநாள் அதுக்கு நாற்காலி போட மறந்துபோக, அது வேற ஒருத்தரோட சீட்டில் ஏறி உட்கார்ந்து, எதிரே உள்ள தட்டில் தனக்குப் பிடிக்காத காய்கறிகள் இருப்பதைக் கண்டு அப்பாவியாய் ஒரு லுக் விடும். அப்போது எடுக்கப்பட்டதுதான் அந்த போட்டோ” என்று அந்த புகைப்படத்தின் கதையை ஒரு பேட்டியில் கூறியிருந்தார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இரு புகைப்படங்களையும் முதன்முதலில் கடந்த மே 1 அன்று missingegirl என்பவர் ட்விட்டரில் இணைத்து ஒரு ட்வீட்டைப் போட, அந்த போட்டோ இரண்டரை லட்சத்திற்கு மேலான லைக்குகள், எழுபதாயிரம் ரீ-ட்வீட்டுகள் என வைரல் ஆனது. இதனால், ஓவர் நைட்டில் ஸ்மட்ஜ் பிரபலம் ஆனது. இந்த போட்டோ டம்ப்ளர் (tumblr) தளத்திலும் 50,000 நோட்ஸ்களுக்கு மேல் செல்லவே, ஸ்மட்ஜ் பெயரில் தனியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்து, அந்தப் பூனையின் பல போட்டோக்களை அப்லோட் செய்ய ஆரம்பித்தார் மிரண்டா. தற்போது அந்தப் பக்கத்தை 12 லட்சத்திற்கும் மேலானவர்கள் பின் தொடர்கின்றனர். மேலும், ஸ்மட்ஜின் புகைப்படங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகள், கேப்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் போன்றவை மார்க்கெட்டில் ஹிட் அடித்துவருகின்றன.

இந்தப் புகழ், டிரெண்ட் எதுவுமே தெரியாமல் தினம்தினம் போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு 'இன்னைக்காவது நமக்கு புடிச்ச சாப்பாடு கிடைக்குமா?' என ஜாலியாக இருக்கிறது ஸ்மட்ஜ்.