Published:Updated:

'செல்நெட் - 2014’...

அறிவுரை இல்லை... சுவாரஸ்யம்! சா.வடிவரசு, பொன்.விமலா, ந.ஆஷிகா, எஸ்.விஜயஷாலினிபடங்கள்: ரா.வருண் பிரசாத் 

'செல்நெட் - 2014’...

அறிவுரை இல்லை... சுவாரஸ்யம்! சா.வடிவரசு, பொன்.விமலா, ந.ஆஷிகா, எஸ்.விஜயஷாலினிபடங்கள்: ரா.வருண் பிரசாத் 

Published:Updated:

செல்போன் மற்றும் இன்டர்நெட்... அறிவியல் உலகின் மிகப்பெரிய வரப்பிரசாதம். ஆனால், இன்னொரு பக்கம் பலருக்கும் இதுவே படுகுழியாகிப் போயிருப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்களே சாட்சி. எனவே, மொபைல் மற்றும் இணைய பயன்பாடு குறித்த விழிப்பு உணர்வை கல்லூரி மாணவிகள் மத்தியில் கொண்டுசேர்க்கும் நோக்கில் அவள் விகடன் நடத்திவருகிறது 'செல்நெட்’ நிகழ்ச்சி. அக்டோபர் 10 மற்றும் 11ம் தேதி சென்னை, பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 'செல்நெட்-2014’ நிகழ்ச்சியின் துளிகள் இங்கே!

முதல் நாள், ரங்கோலி, கட்டுரை, கவிதை, ஓவியம், நாடகம், நடனம் உள்ளிட்ட 12 பிரிவுகளில் மாணவிகளுக்குப் போட்டிகள் நடத்தப்பட்டன. பட்டிமன்றப் பேச்சாளர் சுந்தரவள்ளி நடுவராகப் பங்கேற்க, 'செல்போன் மற்றும் இன்டர்நெட்... வரமா சாபமா?’ என்ற தலைப்பில் மாணவிகள் அணி பிரிந்து பேச, அரங்கம் விழிப்புடன் ரசித்தது. இறுதியாக நடுவர் சுந்தரவள்ளி, ''செல்போன் மற்றும் இன்டர்நெட்டை நாம் பயன்படுத்தும் வரை மிகப்பெரிய வரம்தான். அது நம்மைப் பயன்படுத்தும்போது சாபமாக மாறிவிடுகிறது!'' என்று அழகாகத் தீர்ப்பை பதியவைக்க, உணர்ந்து ஆமோதித்தனர் மாணவிகள்.

இரண்டாம் நாளில் பேசிய கல்லூரியின் இணைவேந்தர்  ஆர்த்தி, ''முகநூலில் தெரியாதவர்களின் நட்பை ஏற்காதீர்கள். உங்களைப் பற்றிய தகவல்களைப் பிறர் அறியாத வண்ணம் செக்யூரிட்டியை லாக் செய்யுங்கள்...'' என்று எச்சரிக்க, சிறப்பு விருந்தினரான காமெடி நடிகை மது, ''முகநூலில் இதுவரை நான் இணையவில்லை. 'வாட்ஸ்அப்' மூலமாக யார் தொடர்பு கொண்டாலும் சில நாட்கள் கழித்து அவர்களது புகைப்படத்தைக் கேட்பேன். அவர்கள் எனக்குத் தெரிந்தவர் என்றால் மட்டுமே பதில் அனுப்புவேன். இல்லையென்றால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவேன். நமக்கே எக்கச்சக்க வேலைகள் இருக்கும்போது, தேவையா... இந்த தேவையில்லாத வேலைகள்?!'' என்ற மது, மாணவிகள் ரசித்துச் சிரிக்கவும் சிந்திக்கவும் தொழில்நுட்பம் சார்ந்த நகைச்சுவை சரவெடி கொளுத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செல்நெட் - 2014’...

திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமான  'மைண்ட் ஃப்ரெஷ் டிரெயினிங்' (Mind fresh training) அகாடமியின் தலைமை நிர்வாகி  கீர்த்தன்யா பேசும்போது, ''சமீபத்தில் ஒரு கல்லூரியில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவினரை அவர்களின் மொபைல் மற்றும் இணையப் பயன்பாட்டோடு அனுமதித்தும், மற்றொரு பிரிவினரை அதற்கு தடை விதித்தும் அப்ஸர்வ் செய்தோம். மொபைல், இன்டர்நெட் பயன்படுத்தாதவர்கள் பல நல்ல முயற்சிகளில் நேரத்தை செலவிட முடிந்ததையும், அதைப் பயன்படுத்தியவர்கள் மிகுதியான நேரத்தை அதிலேயே தொலைத்ததையும் கவனித்தோம். உண்மையில், மொபைல், இன்டெர்நெட் இல்லாமல் இருக்க முடியாது என்பது உங்கள் மனதில் எழுப்பப்பட்டுள்ள மாயையே. அதை வெல்லுங்கள்!'' என்று மாணவிகளின் மனதை ஆக்கபூர்வமான யோசனைகளுக்குத் திருப்பிவிட்டார்.

தொடர்ந்து, நவீன கூத்துப்பட்டறையின் நிறுவனர் ஆதிரா தன் குழுவினருடன் செல்போன் மற்றும் இன்டர்நெட் குறித்த விழிப்புணர்வு நாடகத்தை அரங்கேற்ற, முதல் நாள் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

''செல்ஃபோன், இன்டர்நெட் ஆபத்துனு அறிவுரையா சொல்லாம, பட்டிமன்றம், சிறப்பு விருந்தினர், நாடகம்னு சுவாரஸ்யமா சொன்னதாலேயே நாங்க எல்லாருமே மனசுல நல்லாவே குறிச்சிக்கிட்டோம். தேங்க்யூ அவள்!''

- நம்மிடம் மறக்காமல் சொல்லி விடைகொடுத்தனர் மாணவிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism