Published:Updated:

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

குட்டீஸ் குறும்பு!

Published:Updated:
குட்டீஸ் குறும்பு!

'கூல்’ ஆக்கிய குழந்தைத்தனம்!

ஒருநாள் காலை, முதலாம் வகுப்பு படிக்கும் என் மகன் ஜெய்சனை ஸ்கூலுக்கு கொண்டுவிட, ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன். ரோட்டில் டிராஃபிக் அதிகமாக இருந்தது. ஓர் இடத்தில் நான் வேகமாக ஸ்கூட்டரை திருப்பும்போது, பின்னால் பைக்கில் வந்தவர், '’என்ன வண்டி ஓட்டுறீங்க?!'' என்று கோபமாக கேட்க, என் மகன் ஜெய்சன், ''ஆக்டிவா வண்டி சார்' என்று அப்பாவியாக சொன்னதும்... கோபப்பட்ட நபர், சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குட்டீஸ் குறும்பு!

- ஜெயந்தி யோகராஜன், கோயம்புத்தூர்

மம்மிக்கு டிப்ஸ்!

நான், என் கணவர், என் மகள் மூவரும் ஹோட்டலுக்குச் சென்றோம். டிபன் சாப்பிட்ட பிறகு பில்லுக்குரிய பணத்தை சர்வரிடம் கொடுத்தார் கணவர். மீதி பணத்தைக் கொடுத்துவிட்டு, சர்வர் சென்றபின் டிப்ஸ் பணத்தை தட்டில் வைத்தார். அதைக் கண்ட என் மகள், '’எதுக்கு டாடி தட்டுல பணம் வைக்கிறீங்க? என்றாள்.

குட்டீஸ் குறும்பு!
குட்டீஸ் குறும்பு!

நாம் சாப்பிடறதுக்கு டிபன் கொண்டுவந்து, சர்வர் அங்கிள் வேலை செய்தார்தானே... அவருக்குத்தான் இந்த டிப்ஸ்!' என்றார். உடனே என் மகள், '’மம்மி கூடத்தான் டெய்லி உங்களுக்கு டிபன், காபி, சாப்பாடு செஞ்சு கொடுக்குறாங்க... நீங்க ஒரு தடவைகூட டிப்ஸ் வைக்கறதில்லையே?!'' என்றாள். அதற்கு என்ன பதில் சொல்லி அவளுக்குப் புரியவைப்பது என்று தெரியாமல் விழித்தார் கணவர்.

குட்டீஸ் குறும்பு!

என் மகளின் கேள்வியை ரொம்பவே ரசித்தேன்.

- பி.ரமணி, சேலம்

’டேஸ்ட்லெஸ் டீ!’

தொலைக்காட்சியில் ஒரு பிரபலமான கம்பெனி தேயிலையைப் பற்றிய விளம்பரம் அது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் டீயைக் குடித்துக்கொண்டே அதன் சுவையைப் பற்றி புகழ, சுவரில் மாட்டியிருக்கும் போட்டோவில் இருந்த ஒரு பெரியவரும் டீயைக் கேட்டு வாங்கிக் குடிக்கிறார். அதனைப் பார்த்துக்கொண்டிருந்த என் மூன்று வயதுப் பேரன் '

குட்டீஸ் குறும்பு!

ஏன் பாட்டி... நம்ம தாத்தா மட்டும் ஏன் போட்டோலேர்ந்து டீயை வாங்கிக் குடிக்க மாட்டேங்கறார். நீங்க போடுற டீ நல்லாவே இல்லையா?'' என்று என்னைப் பார்த்து குறும்பாக கேட்டதும், வீட்டில் இருந்தவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

- பிரேமா சாந்தாராம், சென்னை- 110

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism