Published:Updated:

டெஸ்க்டாப்!

பொன்.விமலா, ந.ஆஷிகா

டெஸ்க்டாப்!

பொன்.விமலா, ந.ஆஷிகா

Published:Updated:
டெஸ்க்டாப்!

கண்டுபிடிக்க முடியாதபடி..!

பாஸ்வேர்டு திருட்டு, இணைய உலகில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. பிறரால் யூகிக்க முடியாத வகையில் பாஸ்வேர்டு செட் செய்துகொள்வது, அந்தத் திருட்டில் இருந்து நம் அக்கவுன்ட்டை பாதுகாக்கும் முதல் படி. ஆனால் இங்கு பலரும் காதலி பெயர், குழந்தைகள் பெயர், பிறந்த தேதி, திருமண நாள் போன்றவற்றையே பாஸ்வேர்டாக செட் செய்து, திருட்டுக்கு வழிவகுக்கிறார்கள். 'ஸ்ப்ளாஷ் டேட்டா’ என்ற நிறுவனம் 'ஆபத்தான பாஸ்வேர்டுகள்’ என்று வெளியிட்டுள்ள பட்டியலில் முன்னணி இடங்களைப் பிடித்திருக்கும் பாஸ்வேர்டுகள்... password, 123456, abc123, monkey, 111111, iloveyou!  பொதுவாக நாம் பாஸ்வேர்டு கிரியேட் செய்யும்போது, அதன் ரகசியத்தன்மையை http://www.passwordmeter.com/ என்ற தளத்தில் பரிசோதித்து, பின்னர் பயன்படுத்தலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டெஸ்க்டாப்!

என்ன... உங்கள் பாஸ்வேர்டும் இந்தப் பட்டியலை ஒத்ததுதானா? மாற்றுங்கள் உடனடியாக!

ரோபோ மரம்!

இதுவரை மனிதர்கள், விலங்குகள், பூச்சிகள் என்று உயிரினத்தை ரோபோவாக மாற்றிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது மரத்தையும் ரோபோவாக மாற்றிக் காட்டியிருக்கிறார்கள் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள். 2012ல் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சிக்கு சுமார் 17 கோடி ரூபாய் செலவிடப்பட்டு ரோபா மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மரங்களின் வேரில் பல சென்ஸார்கள், அதீத ஆற்றல் திறன் கொண்ட இயக்கிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மண்ணின் தரம், ஈரப்பதம், வெப்பநிலை உள்ளிட்டவற்றை துல்லியமாகவும் விரைவாகவும் கணக்கிட முடியுமாம்!

டெஸ்க்டாப்!

அம்மாடியோவ்!

பெண்களைப் படித்தவர்!

பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசிப்பவர்களின் நினைவில் மின்னல் வெட்டிப் போகும் பொருட்கள், நகை மற்றும் நறுமண திரவியம். இதை அறிந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரினி என்பவர் , பெண்களின் இஷ்டமான அந்த நகையையும், நறுமண திரவியத்தையும் ஒன்றிணைத்து புது வகையான 'சென்டட் ஜுவல்’ பரிசு நகைகளை சந்தைப்படுத்தியுள்ளார்.. இந்த நகைகளில் ஜுவல் ஸ்டோனுக்குப் பதிலாக, வாசனை பரவச் செய்யும் சென்ட் ஸ்டோன் வைக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து கசியும் நறுமணம் அந்நகையை அணியும்போதெல்லாம் மனதை ரம்மியமாக்கும். 28 நாட்கள் ஆயுள்கொண்ட இந்த சென்ட் ஸ்டோன் கரைந்ததும், வேறு ஸ்டோன் மாற்றிக்கொள்ளலாமாம்!  

டெஸ்க்டாப்!

ரூம் போட்டு யோசிச்சிருக்காங்க!

டபுள் ஐடியா ஸ்வர்ணமால்யா!

’நம்மை மறந்தாரை, நாம் மறக்க மாட்டோம்’ என்கிற தலைப்பில் ஸ்வர்ணமால்யா வெளியிட்டுள்ள புத்தகம் மற்றும் டி.வி.டி, இப்போதைக்கு புதுவரவாக வந்துள்ளது. நடிகை ஸ்வர்ணமால்யாவின் எழுத்தில் வெளியாகி இருக்கும் இந்தப் புத்தகம், சிலப்பதிகாரத்தில் வரும் மாதவி கதாபாத்திரத்தை எளிய நடையில் பேசுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலுமாக இருக்கும் கதையை ஒரே புத்தகத்தில் படித்துப் பரவசப்படலாம். விலை 150 ரூபாய்.

புத்தகத்தில் விரியும் காட்சிகளை ’ஹெச்.டி' என்று சொல்லக் கூடிய ’ஹைடெஃபனிஷன்' தொழில்நுட்ப உதவியுடன் டி.வி.டியாக பதிவு செய்துள்ளார்கள். மாதவி பாத்திரத்தில் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். அவருடைய மாணவர்கள் 40 பேரும் நடித்துள்ளனர். 2 மணி நேரம் ஆங்கில சப்டைட்டிலுடன் ஓடக்கூடிய இந்த நாடக  டி.வி.டியின் விலை 399 ரூபாய்!

படிக்கலாம்.. பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism