Published:Updated:

எழுத்துலகின் ‘கள’ நாயகி!

பொன்.விமலா, ர.சதானந்த்

எழுத்துலகின் ‘கள’ நாயகி!

பொன்.விமலா, ர.சதானந்த்

Published:Updated:

யது முதிர்ந்த அந்தப் பெண்ணுக்கு உணவு கொடுக்கிறார்கள். ''ஒருவேளை உணவுகூட கிடைக்காமல் வறுமைக்கு வாக்கப்பட்ட குழந்தைகள் எவ்வளவோ பேர் இருக்க, வயதான நான், ஒரு குழந்தைக்கான உணவை அபகரித்து சாப்பிட்டு என்ன செய்யப் போகிறேன்? இந்த உணவை சாப்பிட எனக்கு உடல் கூசுகிறது. நான் இருந்து இன்னும் என்ன ஆகப்போகிறது?’' என நொந்தவாறே அந்த பருக்கைகளை விழுங்குகிறார். அவர்... "வயோதிகத்தாலும் உடல் நலக்குறைவாலும் சமூகப்பணி செய்ய இயலவில்லையே' என்றபடி இறுதி நாட்களை மருத்துவமனையில் கழித்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்!

எழுத்துலகின் ‘கள’ நாயகி!

திருச்சி மாவட்டம், முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன், 20 வயதிலேயே எழுத்துப் பணிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். எழுத்து வெறும் கற்பனை சார்ந்ததாக மட்டும் அமைந்துவிடாமல் இருக்க, களப்பணியில் இறங்கி எழுத ஆரம்பித்தார். மக்களோடு பேசிப் பழகி, வாழ்வாதாரப் பிரச்னைகளைப் பதிவு செய்தார். பெண்களுக் கான எழுத்தாக, அடித்தட்டு மக்களுக்கான எழுத்தாக, விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னைகள் பேசும் எழுத்தாக அவரின் எழுத்துக்கள் தடம் பதித்தன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஒரு பெண் தன் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?’' என்று ராஜம் கிருஷ்ணனிடம் ஒரு பேட்டியின்போது கேட்கப்பட, ''அவள் தன் மதத்தை விட்டு வெளியேற வேண்டும்! எல்லா காலகட்டங்களிலும் ஒரு பெண்ணை மதத்தின் கோட்பாடுகள் அடிமையாகவே வைத்திருக்கின்றன!’ என்றார் துணிச்சலாக.  

80-க்கும் அதிகமான நாவல்கள் எழுதியுள்ள ராஜம் கிருஷ்ணனின் 'வேருக்கு நீர்’ நாவல் 1973-ல் சாகித்ய அகாடமி விருதையும், 'பெண் குரல்’ நாவல் கலைமகள் விருதையும் பெற்றன. ஆனந்தவிகடனில் வெளியான இவரது தொடரான 'மலர்கள்', 1958ம் ஆண்டு ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் சிறந்த நாவலுக்கான பரிசை பெற்றதாகும்.

ராஜம் கிருஷ்ணனின் நூல்கள் அனைத்தும் 2009ல் பொதுவுடமையாக்கப்பட்டபோது அரசாங்கம் இவருக்கு அளித்த 3 லட்சம் தொகையையும் தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல், மிக எளிமையாகவே இறுதி நாட்களைக் கழித்தார். பல வருடங்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜம் கிருஷ்ணன், அக்டோபர் மாதம் 20 அன்று மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார்.

ஒரு பத்திரிகையாளரைப் போலவே தீவிர களப்பணியில் ஈடுபட்டு, எழுத்துலகில் கொடிகட்டிப் பறந்த ராஜம் கிருஷ்ணனுக்கு, சென்னை பத்திரிகையாளர் சங்கம் நினை வஞ்சலி கூட்டம் நடத்தியது... நெகிழ்ச்சியான நிகழ்வு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism