Published:Updated:

இன்டீரியர்..! - 4

ஹால்களிலே மூணு வகை!இந்துலேகா.சி

இன்டீரியர்..! - 4

ஹால்களிலே மூணு வகை!இந்துலேகா.சி

Published:Updated:

வீட்டின் வரவேற்பறையைப் பற்றி விரிவாகப் பேச, 'டூ மை ஹோம்’ நிறுவனத்தின் சி.இ.ஓவான பாலாஜி கைகுலுக்குகிறார் உங்களுடன்!  

''வீட்டுக்கு ஒரு ஹால் என்பது மாறி, ஃபார்மல் ஹால், இன்ஃபார்மல் ஹால்னு ரெண்டு ஹால் பிளான் பண்றதுதான் இப்போ டிரெண்ட்.

ஃபார்மல் ஹால்ல, டி.வி இருக்கக்கூடாது. ஏன்னா, இது குடும்பத்தினர், விருந்தினர் ஒன்றுகூடி உட்கார்ந்து பேசுறதுக்காக உருவாக்கப்படுவது. இந்த ஹாலோட முக்கிய அம்சம், இங்க இருந்து பார்த்தா, வீட்டின் மற்ற ஏரியாக்கள் தெரியாமல் இருக்கணும். இன்ஃபார்மல் ஹாலில் டி.வி யூனிட்  இருக்கும். சொல்லப்போனா, இது டி.வி பார்க்க மட்டுமான ஒரு ஏரியா. வசதியைப் பொறுத்து புரொஜெக்டர், ஹோம் தியேட்டர்னு செட் செய்து, இதை மினி தியேட்டரா மாத்திக்கலாம். இந்த ரெண்டு ஹால்களைத் தவிர, சிலர் மீடியா ஹால்னு ஒரு ஏரியா டிசைன் பண்றாங்க. இது முழுக்க முழுக்க இண்டோர் கேமிங் ஏரியா. அதாவது கம்ப்யூட்டர் கேம்ஸ், பிளே ஸ்டேஷன் மாதிரியான கேம்ஸுக்கான இடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்டீரியர்..! - 4

வீட்டுக்குள் நுழைந்ததும், மெயின் ஹாலின் அளவு பெரிதா தெரியுற மாதிரி தரையை மறைக்காத வகையில் பொருட்களை அரேஞ்ச் பண்ணணும். குறிப்பா, ஹாலோட அளவுக்கு ஏத்த மாதிரி ஸ்லிம் அண்ட் ஸ்லீக்கான சோபா செட் பயன்படுத்தணும். அதனால சின்ன ஹாலுக்கு பிரமாண்ட சோபா போன்ற தேர்வை தவிர்த்துடுங்க. 'L’ ஷேப் சோபாவை வசதிக்கு ஏற்ற மாதிரி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு மாற்றிப் பயன்படுத்துவது கஷ்டம் என்பதால், அதுவும் சரியான சாய்ஸ் இல்லை. த்ரீ ப்ளஸ் ஒன் ப்ளஸ் ஒன் (3 + 1 + 1) வகை சோபா சிறந்தது. அதைவிட பெஸ்ட் சாய்ஸ், திவான் டைப் சோபா. பார்க்க கிராண்டா மட்டுமில்லாம டிரெண்டியாவும் இருக்கும். சோபாவோட கால்கள் நீளமா இருந்தா, தரைப்பகுதியை மறைக்காம இருக்கும், ஹால் விஸ்தீரணமா தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலில் கார்பெட் விரித்தால் கம்பீரமா இருக்கும். அதற்காக ஹால் முழுக்க இல்லாமல், சோபா ஏரியாவுக்கு மட்டுமான மினி கார்பெட் விரித்தால், இடமும் அடைக்காமல் இருக்கும், பார்க்கவும் அழகா இருக்கும். சோபா செட்டுக்கான சென்டர் டீபாய் மட்டும் இல்லாம, ஒரு சைடு டேபிளும் வைத்தால் புக்ஸ், போன், டி.வி ரிமோட் இதெல்லாம் வைத்துக்கொள்ளலாம். டிவி யூனிட்டைப் பொறுத்தவரை டி.வி ஸ்டாண்டு வைத்து டி.வி வைக்கிறது அவுட் டேட்டட். சுவரோட இருக்கும் எல்.இ.டி டி.வி டிரெண்டி என்பதுடன், இடத்தையும் அடைக்காது.

ஹாலை வெளிர் நிறத்தில் பெயின்ட் செய்வதும், ஜன்னலுக்கும், வாசலுக்கும் லைட் கலர்ஸ் ஸ்க்ரீன்ஸ் மாட்டுவதும் ஹாலை பளிச்னு காட்டுவதுடன், பெரிதாவும் காட்டும். பெயின்ட்டும், ஸ்க்ரீனும் ஹாலில் உள்ள ஃபர்னிச்சருக்குப் பொருத்தமா அமைவதும் அவசியம். ஹாலின் ஜன்னல் ஓரத்தில் ஒரு இண்டோர் பிளான்ட் வைப்பது, மனதுக்கு இதமான லுக் தரும்.  

குடும்பத்தினரோட புகைப்படங்கள், பரிசுப் பொருட்கள், மெடல்கள், கோப்பைகள் இந்த மாதிரி சின்னச் சின்ன சுவாரஸ்யங்களை வைக்க, ஹாலில் ஒரு சின்ன டிஸ்ப்ளே யூனிட் (ஷோ கேஸ்) தயார் செய்யலாம். அந்த பொருட்கள் கிளறும் நினைவுகள், குடும்பமாகவோ, விருந்தினருடன் அமர்ந்தோ பேசும்போது பகிர்தலை ஆனந்தமாக்கும்தானே..?!''

பாலாஜியோட டிப்ஸ்களை ஃபாலோ பண்ணி உங்க ஹாலை ரெடி பண்ண ஆரம்பிச்சாச்சா..?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism