Published:Updated:

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

ஷாலினி நியூட்டன்

Published:Updated:

ஹுட் ஹுட் புயலுக்கு உதவிய சினிமா!

ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்த ஹுட் ஹுட் புயலால், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல நடிகர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு, நன்கொடை வழங்கி வருகின்றனர். பவன் கல்யாண் 50 லட்சம், மகேஷ் பாபு 25 லட்சம், ராமா நாயுடு 50 லட்சம், ஜூனியர் என்.டி.ஆர் 20 லட்சம், நாகார்ஜுனா 20 லட்சம், ராம்சரண் தேஜா 5 லட்சம், அல்லு அர்ஜுன் 20 லட்சம், பாலகிருஷ்ணா 30 லட்சம், கிருஷ்ணா  விஜயநிர்மலா தம்பதி 25 லட்சம், ராம், நிதின் தலா 10 லட்சம், பிரம்மானந்தம் 3 லட்சம், ரகுல் ப்ரீத்தி சிங் 1 லட்சம், தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் 25 லட்சம் என பலரும் நிவாரணம் வழங்கியுள்ளனர். தமிழ் திரையுலகிலிருந்து சூர்யா 25 லட்சம், விஷால் 15 லட்சம், கார்த்தி 12.5 லட்சம், ஞானவேல் ராஜா 12.5 லட்சம் என உதவிக் கரம் நீட்டியுள்ளனர்!

கொடை பெருகட்டும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

பெண்களுக்காக ஒரு வீடியோ!

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை உலகுக்கு உணர்த்தும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு வீடியோ அது. 6 முதல் 12 வயது குழந்தைகளைக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த வீடியோ (FCKH8), யூ டியூப் சேனலில் 4 லட்சம் லைக்குகளை ஒரே நாளில் கடந்துள்ளது. சிறுமிகள், இளவரசி போல் வேடமிட்டிருக்க, 'ப்ரிட்டி ப்ரிட்டி’ என்ற பாடலுடன் துவங்கும் வீடியோ, பெண்களுக்கு 23% மட்டுமே வேலைகளில் இடம் கிடைப்பது, பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என பல சமூகவாதிகள் வகுப்பெடுப்பது, பாதுகாப்பு என்ற போர்வை குறித்துப் பேசி பெண்களை அவமானப்படுத்துவது என பல பிரச்னைகளைப் பேசுகிறது. 'எங்கள் உடல் என்ன பாலியல் பொருளா..?’ என சில இடங்களில் அந்தக் குழந்தைகள் கெட்ட வார்த்தைகூட பேசுகிறார்கள். பெண்களுக்காக பகிரங்க குரல் கொடுத்திருக்கும் இந்த வீடியோ, வைரல் உலகில் தனக்கென சிறப்பான இடம் பிடித்துள்ளது!

ஹிட்டு... தவறான ஆண்களுக்கு கொட்டு!

நீங்களும் பார்க்க: https://www.youtube.com/watch?v=XqHYzYn3WZw

1 கோடியே 36 லட்சம்!

'க்யூன் ஹோகயா னா’ படம் மூலம் அறிமுகமான காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. முகநூலில் 1 கோடியே 36 லட்சம் லைக்குகளை கடந்த காஜல், இந்தியாவின் NGO 2014க்கு அம்பாஸடராகியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து ஒரு நடிகை NGO அம்பாஸடராக தேர்வானது இதுவே முதல் முறை. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்தும் இந்த NGO, பெண்கள் முன்னேற்றம், குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் மாசு விழிப்பு உணர்வு, இயற்கை சீற்றத்துக்கு உதவி, மருத்துவ முகாம் மற்றும் பல சமூக விழிப்பு உணர்வு சேவைகளை உள்ளடக்கியது. 'ஒரு நடிகையாக நான் சாதித்ததைவிட, இந்த NGO அம்பாஸடராக மிகவும் சந்தோஷப்படுகிறேன்’ என்கிறார் காஜல்!

லைக்ஸ்!

ஹிட்ஸ்... ஹிட்ஸ்..!

பட்டையைக் கிளப்பும் 'இங்லீஷ் விங்லீஷ்’!

கௌரி ஷிண்டே இயக்க, ஸ்ரீதேவி நடிப்பில் 2012ம் வருடம் வெளியான ஹிட் ஹிந்திப் படம்... 'இங்லீஷ் விங்லீஷ்’. ஆங்கிலம் தெரியாததால் ஓர் இல்லத்தரசி தன் மாடர்ன் குடும்பத்தில் எப்படியெல்லாம் அவமானப்படுகிறாள்... பின்னர் அதையே சவாலாக்கி ஆங்கிலம் கற்று தன் குடும்பத்தில் தனக்கான மரியாதையை எப்படி மீட்டெடுக்கிறாள் என்பதே படத்தின் கதை. 2013ம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற பெண்கள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்தப் படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அங்கு 33 திரையரங்குகளில் கடந்த ஜூன் மாதம் இதனை வெளியிட்டார்கள். ஜப்பானில் வெளியாகி அதிக வசூல் குவித்த ஹிந்திப் படங்களில் '3 இடியட்ஸ்’ படத்தையடுத்து, 'இங்லீஷ் விங்லீஷ்’ படம் இரண்டாம் இடம் பிடித்தது. தற்போது இந்தப் படம் ருமேனியா நாட்டில் வெளியாக உள்ளது அடுத்த செய்தி. ருமேனியாவில் இந்தியப் படங்கள் அவ்வளவாக வெளியாகாத நிலையில், கதாநாயகியை மையமாகக்கொண்டு எடுத்த ஒரு இந்திய படம் அங்கு இவ்வளவு வரவேற்புடன் ரிலீஸ் ஆவது இதுவே முதல் முறை!

மயிலு மயிலுதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism