Published:Updated:

கேர்ள்ஸ் புரொஃபைல்!

மு.பாரதி மனோன்மணி, படங்கள்: மு.குகன்

கேர்ள்ஸ் புரொஃபைல்!

மு.பாரதி மனோன்மணி, படங்கள்: மு.குகன்

Published:Updated:

கோவை பி.எஸ்.ஜி கல்லூரி பின்'லேடி’களின் லே அவுட் இங்கே..!

கில்லாடி வாயாடிஸ்!

'ரொம்பத்தான் கொஞ்சிப் பேசற...’  - பி.டெக்., இரண்டாம் ஆண்டு பயோடெக் படிக்கும் சாம்பவி லக்சனா தேவியையும், தீபிகாவையும் இப்படிச் சொல்லி கேலி பண்ணின ஃப்ரெண்ட்ஸே இன்னிக்கு அவங்களோட கொஞ்சல் பேச்சுக்கு ரசிகை ஆயிட்டாங்க. ஏன்னா, பொண்ணுங்க ரெண்டு பேரும் இப்போ காலேஜ் எஃப்.எம்-ல்  'ஆர்.ஜே’ஸ்! ''ரெண்டு பேரும் கிளாஸ் ரூம்ல போடுற கடலையை ரேடியோ ஹப்லயும் போட ஆரம்பிச்சோம். இன்னிக்கு எங்க நிகழ்ச்சிகள் எல்லாம் ஹிட்டோ ஹிட்!  ஃபேஸ்புக், டிவிட்டர்ல எங்களுக்கு ஆயிரத்துக்கும் மேல ஃபாலோயர்ஸ் இருக்காங்க. சரி... எங்க லட்சியத்தையும் கேட்டுக்கோங்க.  இப்போ ஆர்.ஜே-வா இருக்கிற நாங்க, நாளைக்கு வி.ஜே ஆகி, அப்புறம் ஓபரா வின்ஃப்ரே மாதிரி பெரிய மீடியா பெர்சனாலிட்டியா ஆகணும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குரலரசிகள்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

டான்ஸ் மச்சி டான்ஸ்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படித்தாலும் நிதிக்கு ஆர்வம் கிளாஸிக்கல் டான்ஸின் மேல். கல்லூரி நடனக் குழுவான 'டிரமடிக்ஸ்’ஸின் வெல்கம் டான்ஸர் எப்பவுமே இவங்கதான். ''ஒண்ணாவது படிக்கும்போதே வீடு அதிர தையத் தக்கானு குதிச்சதால, கிளாஸிக்கல் டான்ஸ் கிளாஸ் சேர்த்துவிட்டாங்க அம்மா. பரதநாட்டியமும் குச்சுப்புடியும் அத்துப்படி ஆயிடிச்சு. முதல் அரங்கேற்றம் ஏழு வயதில் நடந்தது. அதில் இருந்து ஏறின மேடைகளில் எல்லாம் பரிசு வாங்காமல் இறங்கியதில்லை. டென்த் படிக்கும்போது கலை, இலக்கியப் போட்டிகளில் டிவிஷனல் லெவல் பரிசு வாங்கினதும், ஒரு சுதந்திர தின விழாவில் கலெக்டர் முன்னிலையில் ஆடி பாராட்டு வாங்கினதும் மறக்க முடியாதது!''

தா தை தித்தித்தை!

அப்படியே ஒரு ஆர்ட்!

கண்ணாடியில் வரைவதைப் பார்த்திருப்போம். நாம் கண்ணாடியில் பார்ப்பது போலவே நம் உருவத்தை அசல் அழகு போர்ட்ரெயிட்டா வரைந்து அசத்துறாங்க பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் கனிமொழி. 'ஹாபியா ஆரம்பிச்ச பழக்கம். ஃப்ரெண்ட்ஸோட பிறந்தநாளுக்கு அவங்களை போர்ட்ரெயிட்டா வரைந்து கொடுக்க ஆரம்பிச்சேன். எல்லோரும் 'சூப்பர்!’னு கொண்டாடினப்போ, மனசுக்குள்ள ஒரே ஹம்மிங்கா இருக்கும். இப்போ என்னோட அடுத்த டார்கெட், ஸ்ப்ளாஷ் ஆர்ட்!''

கனிமொழி விரல்களில் கலைமகள்!

கேர்ள்ஸ் புரொஃபைல்!

சகலகலாவல்லி!

பி.டெக்., ஃபேஷன் டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு படிக்கும் ஹேமலதாவுக்கு அடையாளங்கள் பல! ''பேட்மின்டனில் கோவை மாவட்ட அளவில் பரிசு வாங்கியிருக்கேன். டேபிள் டென்னிஸில் நான் விளையாடும் கிளப்தான் காலேஜ் ’ஸ்போர்ட்ஸ் டே’யில் எப்பவும் மெடல் வாங்கும். கேம்பஸில் என்னோட செல்லப் பெயர்... வாயாடி. அதனால பேச்சுப்போட்டியிலும் பல மேடைகளில் பரிசுகள் வாங்கியிருக்கேன். விலங்குகள் நல மையத்தில் உறுப்பினரா இருக்கேன். பக்கத்துல உள்ள சர்ச்சில் சண்டே கிளாஸ் டீச்சரா இருக்கேன். என்னைப் பத்தி நானே ரொம்ப நேரம் லெக்சர் கொடுத்துட்டேன்ல. என் ஆசையும் அதுதான்... புஃரொபசராகணும்!''

டீச்சரம்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism