Published:Updated:

'கேட்பீங்களா... கேட்பீங்களா..?!’

க.தனலட்சுமி,  படங்கள்: கு.பாலசந்தர்

'கேட்பீங்களா... கேட்பீங்களா..?!’

க.தனலட்சுமி,  படங்கள்: கு.பாலசந்தர்

Published:Updated:

பொண்ணுங்களோட அரசியல் ஞானம் எப்படி இருக்கு..? செக் செய்யும் விபரீத ஆசை வந்தது! சிக்கினவங்க... சென்னை, அண்ணா பல்கலைக்கழக கேர்ள்ஸ்!                          

'ஹய்யய்யோ... அரசியலா..!’னு சிலர் ஜகா வாங்கினாலும், 'என்னய்யா பொல்லாத பொடலங்கா அரசியல்? நாங்க எல்லாம் அரசியல் பேச ஆரம்பிச்சா அம்பானியே தோத்துடுவாரு'னு (அம்பானி ஏன் அரசியல் பேசப் போறார்?!) சவுண்ட் விட்டு ரெடியான செல்லங்களோட பதில்கள் எல்லாம்... சூப்பர் டூப்பர் போங்க!

''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேல் தொடரப்பட்ட வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவருடன் சேர்த்து கைது செயப்பட்டவர்கள் யார் யார்..?''னு கேட்டதும், ''சசிகலா..!''னு குரூப்பா கத்தினாங்க கேர்ள்ஸ். ''மற்ற ரெண்டு பேர்..?'' என்றதும், ஒரே கூச்சல் குழப்பம். ''அப்புறம்... சசிகலாவோட தம்பி(!) சுதாகரன். இன்னொருத்தர்... இளவரசனா? இளவரசியா?''   மீடியா சயின்ஸ் இரண்டாம் வருடம் படிக்கும் சுமதி இங்கி, பிங்கி, பாங்கி போட, ''ஏய்... அது ஒரு சீரியல் பேருடி!''னு அவங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் கொடுத்த க்ளூவில், நாம அசந்து போயிட்டோம் அசந்து! ''யெஸ்... இளவரசி!''னு முழங்கையை மடக்கி முட்டியில் குத்தினு சுமதி செய்த அலப்பறை... த்ரீ மச்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கேட்பீங்களா... கேட்பீங்களா..?!’

''இந்தியாவில் நடந்த டாப் 10 ஊழல்கள்..?''னு நாம அடுத்த கொஸ்டீனைப் போட, ''இது என்ன டாப் 10 மூவீஸ் மாதிரி டாப் 10 ஊழல்னு கேட்கறீங்க? அவ்ளோ கேவலமாவா நம்ம நாடு இருக்கு..?''னு மீடியா சயின்ஸ் மூன்றாமாண்டு படிக்கும் ஷர்மிளா, ஒரு லேடி அர்ஜுன் அளவுக்கு ஃபீல் ஆக, ''ஸீன் எல்லாம் அப்புறம்... இப்போ நீ பதிலை சொல்லு மச்சி!''னு மீடியா சயின்ஸ் மூன்றாமாண்டு படிக்கும் சுகாசினி சீண்டிவிட, ''2ஜி ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் ஊழல், ஹவாலா ஊழல், கிரானைட் ஊழல், சவப்பெட்டி ஊழல்னு... இப்படி எல்லாத்துலயும்தான் கொள்ளையடிக்கிறாங்க. குற்றவாளிங்களுக்கு என்ன ரேங்க் வேண்டிக்கிடக்கு..?!'' -உண்மையிலேயே கோபப்பட்டாங்க ஷர்மிளா.

''2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் ஜெயலலிதா வழக்குக்கும் உள்ள வித்தியாசம் என்ன..?'' இது நாம கேட்ட கேள்வி இல்ல பாஸ். கேட்டது, மெடிக்கல் இன்ஜினீயரிங்  முதலாமாண்டு படிக்கும் ஜெயரூபினி. ''இந்தக் கேள்விக்கு பதிலை டி.ஆர் ஸ்டைல்ல பெருசா சொல்லவா? இல்ல, சூப்பர் ஸ்டார் ஸ்டைல்ல சிம்பிளா சொல்லவா..?''னு எம்.இ.,  அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ் முதலாமாண்டு படிக்கும் மாணவி ஹேமா லைனுக்கு வர, நாம வேடிக்கையை மட்டும் கன்டினியூ பண்ணினோம். ''சூப்பர் ஸ்டார்!''னு கூட்டம் கத்த, ''இவரு குடும்பம் சின்னது. அதனால  தமிழ்நாட்டை மட்டும் கொள்ளையடிச்சாங்க. அவரு ஃபேமிலி பெருசு. அதான் இந்தியாவையே கொள்ளையடிச்சிட்டாங்க!''னு ஹேமா சொல்ல, கூட்டத்தில் ஒரே கைதட்டல்.

''சைலன்ஸ்! சமீபத்தில் மது ஒழிப்பு புரட்சியை ஆரம்பித்த கேரள முதல்வரின் பெயர் என்ன..?!''னு நாம கேட்க, ''உம்மா சாண்டல்... இப்படித்தான் ஏதோ வரும்...''னு ஷர்மிளா எக்குத்தப்பா யூகிக்க, ''உம்மன் சாண்டி!''னு சொல்லி, ஸ்கோர் பண்ணாங்க இ.சி.இ இரண்டாம் ஆண்டு படிக்கும் ஜெயலட்சுமி.

''எந்த நடிகர் அரசியலுக்கு வந்தா நல்லா இருக்கும்னு நினைக்கறீங்க..?''னு நாம யூத் பல்ஸ் பார்க்க நினைக்க, ''எந்த அரசியல்வாதி நடிக்க வந்தா நல்லா இருக்கும்னு நீங்க சொல்லுங்க. அப்புறமா நாங்க உங்க கேள்விக்கு பதில் சொல்றோம்!''னு பொண்ணுங்க குரூப்பா நமக்குக் கொடுத்தாங்க பல்பு! ''எந்த  அரசியல்வாதி நடிக்கலைனு முதல்ல நீங்க சொல்லுங்க..?''னு கொலவெறி கேள்விகள் நம்மைத் துரத்த, 'பாஸ்’ சொல்லிட்டு பாய்ந்தோம் அடுத்த கேள்விக்கு!

''பெண்களுக்கு கேட்கப்படும் இடஒதுக்கீடு எவ்வளவு? யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்!''னு நாம கேட்க, சட்டுனு கையைத் தூக்கினாங்க லெதர் இன்ஜினீயரிங்  இரண்டாம் ஆண்டு மாணவி சக்திலட்சுமி. ''ஏய்... ஸ்கூல் டேஸ்ல இருந்து நாம திரும்பத் திரும்ப படிக்கிற ஜி.கே கொஸ்டீன் இது. பதில் சொல்லாம விடுவோமா..? 60% சரியா..?!''னு கேட்க, அப்படியே நெஞ்சைப் பிடிச்ச நம்மை தாங்கிப் பிடிச்சு கேர்ள்ஸ் தண்ணி கொடுக்க, ''இதுக்குதான் சொன்னோம். இனிமே இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் எங்ககிட்ட கேட்பீங்களா..? கேட்பீங்களா..?!''னு செல்ல மொத்து மொத்தி செண்ட் ஆஃப் பண்ணினாங்க கேர்ள்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism